24.02.2022 // தேர்வுகள் (NMMS)// //தனிகவனம்//
அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –
05.03.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) தேர்விற்கு வருகை புரியும் மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் மற்றும் பெயர்பட்டியலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றும் தேர்வு மையம் வாரியாக (NR) பெயர்பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு களில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு