Monday, 31 January 2022

 

31.01.2022   // தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

20.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 01.02.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் notification என்ற icon click செய்து அதில் ESLC (private appearance) examination என்ற பக்கத்தில் ESLC RESULT DEC2021 என்பதனை CLICK செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.  

31.01.2022      // மிக அவசரம் //

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி இணைப்பில் உள்ள  GOOGLE ONLINE SHEET  இல் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் வங்கிக்  கணக்கு எண்களை சரிபார்த்து, ONLINE படிவத்தில்  விடுபட்டுள்ள விவரங்களை உடனடியாக  பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மற்றும் காலதாமதத்தை தவிர்த்து விரைவாக செயல்படுமாறு  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ONLINE SHEET

Friday, 28 January 2022

 

29.01.2022      நினைவூட்டல் – 1 // தேர்வுகள்// தேதி மாற்றம் //

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

 ஊரகத்திறனாய்வு தேர்வு (TRUST EXAM) பிப்ரவரி - 2022   20.02.2022 இல் நடைபெற இருந்த தேர்வுதற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறஉள்ளதால், 27.02.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இத்தேர்வினுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Tuesday, 25 January 2022

 25.01.2022   மேம்படுத்துதல் (UPDATION) //தேர்வுகள்//  தனிகவனம்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்  தொகைத் திட்டத் தேர்வுகள் (NMMS)மார்ச் 2022 – பள்ளி  மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தினை www.dge.tn.gov.in என்ற   இணையதளத்தில்  செலுத்த இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு/நிதியுதவி/நடுநிலை உயர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு -1, இணைப்பு -2

 

 

25.01.2022

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.

 இணைப்பில் உள்ள பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைக்கிணங்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் பெறப்பட்ட மனுதாரர் திரு.D. பாலு என்பவரின் மனு இத்துடன் இணைத்து அனைத்து உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

 மேலும் மனுதாரர் கோரப்பட்ட தகவல்களை நேரடியாக மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Sunday, 23 January 2022

 

24.01.2022   //தேர்வுகள்//  தனிகவனம்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுகள்(NMMS), மார்ச் 2022 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தினை www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்த இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை அரசு/நிதியுதவி/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

இணைப்பு -1    இணைப்பு -2  , இணைப்பு -3

Friday, 21 January 2022

 

21.01.2022  

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பொதுசார்நிலைப் பணி - பதிவறை எழுத்தர் பதவி யிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்குவது - 01.12.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக 1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1  இணைப்பு -2

 21.01.2022  

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அடிப்படைப் பணி - இரவுக் காவலர்/தோட்டக்காரர்/நீர் வழங்குபவர்/ பெருக்குபவர்/ துப்புறவாளர் மற்றும் அலுவலக உதவியாளர் - பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்குவது - 01.12.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 27.01.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு -2

Thursday, 20 January 2022

 

21.01.2022            நினைவூட்டல்-1 //தேர்வுகள்//  தனிகவனம்  

 அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ். உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு .

 தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) ஜனவரி 2022 – 29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) 05.02.2022 (சனிக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. தேர்வு தேதி மாற்றத்தினை தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை (Hall Ticket) 25.01.2022 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Wednesday, 19 January 2022

 

20.01.2022    //நினைவூட்டல்-1//தேர்வுகள் அவசரம்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்பள்ளி மாணாக்கர்களின் தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் 21.01.2022 முதல் 31.01.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு

 

 

19.01.2022  //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை 21.01.2022(வெள்ளிக்கிழமை) முதல், அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்

இதில், நிரந்தரப் பதிவு எண் ( Permanent Register Number) கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் 2021 துணைத் தேர்வில் தேர்வு எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு.