30.12.2021 // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் // தனி கவனம் // //நினைவூட்டல் - 1//
அரசு / அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை முடிக்க 20.12.2021 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இப்பணியை எந்த வித பிழையில்லாமல் செம்மையாக முடித்து print for Despatch நகலை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 31.12.2021 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன் நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5