Monday, 8 November 2021

 09.11.2021            //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,       

செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற பகுதிக்குச் சென்று மதிப்பெண் பட்டியலாக  இன்று (09.11.2021) காலை 11.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக  Result என்ற பகுதிக்கு பதிலாக Latest Notification about Examinations என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள Higher Secondary Examination என்ற வாசகத்தை click செய்து, அப்பக்கத்தில் உள்ள Hr Sec FIRST YEAR SEP 2021 - Provisional certificate download என்பதை click செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்லது  இணையதளத்தின் இடது பக்கத்தில் உள்ள Result Analysis என்ற வாசகத்தை தேர்வு செய்து Hr sec and SSLC - Results என்ற வாசகத்தை click செய்தும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கலாகிறது.