01.12.2021 // தனிகவனம்//
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் - 2017 -18 முதல் 2020 -2021 க்கான பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் - தணிக்கைக்கான ஆவணங்கள் தயார் நிலையில் வைத்தல் - 9 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு SC/ST க்கான கல்வி உதவித்தொகை 2017 -2018 முதல் 2020-2021 ஆம் ஆண்டில் பிரீமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை பெற்றதற்கான தணிக்கை விரைவில் மேற்கொள்ள இருப்பதால் அனைத்து வகை பள்ளிகளும் கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பராமரிக்க வேண்டிய ஆவணங்கள்
1. விண்ணப்பப்படிவம்
2. சாதிச் சான்று
3. வருமானச் சான்று
4.மாணவர்களின் வங்கி புத்தக நகல்
5.ஆதார் நகல்
6.பள்ளி தலைமையாசிரியர் இணையதளத்தில் விண்ணப்பித்ததற்கான பதிவிறக்கம் (proceedings copy / sanction copy )