01.11.2021
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் /மேல் நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு அரசு விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுவருகிறது. இதில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா காலேந்தி மற்றும் காலுறை, (SHOE & SOCKS) புத்தகப்பை
(SCHOOL BAG ) தர பரிசோதனை முடிவுக்கு ஏற்ப (Testing Report) அனைத்து பள்ளிகளுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதன் படி சென்ற கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக
2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உரிய நலத்திட்டங்களை வழங்கி அதற்கான நலத்திட்ட பதிவேட்டில் கையொப்பம் பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.