26.09.2021
அனைவருக்கும் வணக்கம்!
உள்ளாட்சித் தேர்தல்கள்-2021
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 24.09.2021 அன்று -6 மையங்களில் நடந்து முடிந்தன. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தொடக்க/ நடுநிலைப்பள்ளி, மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருப்பத்துார் மாவட்ட ஆட்சியரால் ”விளக்கம் கேட்கும் அறிவிக்கை” show cause notice வரப்பெற்றுள்ளன.
தற்போது, திருப்பத்துார் மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ”விளக்கம் கேட்கும் அறிவிக்கை” வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெற்றுக்கொள்வதுடன் திருப்பத்துார் துாய நெஞ்கச்கல்லுாரியில் 27.09.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள சிறப்பு தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் பயிற்சியில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கக்கடிதத்தினையும் திருப்பத்துார் மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களில் 27.09.2021 காலை 10.00 மணிக்குள் சமர்பிக்கப்படவேண்டும்.
விளக்கமளிக்க தவறினாலோ சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தவறினாலோ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்ற விவரமும் சார்ந்த ஆசிரியர் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இனைப்பு
/ மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி/
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்துார்.