Tuesday, 31 August 2021

 31.08.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 இணைப்பில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவங்கள் அடங்கிய படிவத்தினை பூர்த்தி செய்து  இன்று (31.08.2021) பிற்பகல் 03.00 மணிக்குள்  திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ3 மற்றும் ஆ4 பிரிவு எழுத்தர்களிடம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு 

31.08.2021      // மிக அவசரம் // தனி கவனம் // திருத்தப்பட்டது -1 //

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

வரவு செலவுத்திட்டம் – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement)  மற்றும் நிலையான படிகள் 01.08.2021 – இல் உள்ளவாறு பணியிடம் மற்றும் தலைப்பு வாரியாக Excel  Format   - இல் வடிவமைக்கப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து பிறகு பூர்த்தி செய்து இரு நகல்களில்  (Only Legal Sheet) உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து படிவம் மற்றும் RW CD உடன் இணைப்பில் கண்ட நாட்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு - 1   109-AA,   109-BC,  109-AZ,  109-KH,  110-AA


 31.08.2021  

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

 2021 -2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரம் தொடர்பான இணைப்பில் உள்ள படிவங்களை  பூர்த்தி செய்து 06.09.2021 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் படிவம் 

Friday, 27 August 2021

 

27.08.2021   // மிக அவசரம் // தனி கவனம் // 

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

வரவு செலவுத்திட்டம் – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement)  மற்றும் நிலையான படிகள் 01.08.2021 – இல் உள்ளவாறு பணியிடம் மற்றும் தலைப்பு வாரியாக Excel  Format   - இல் வடிவமைக்கப்பட்ட படிவங்களை இரு நகல்களில்  (Only Legal Sheet) உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து படிவம் மற்றும் RW CD உடன் இணைப்பில் கண்ட நாட்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு -1 இணைப்பு - 2 இணைப்பு 3 இணைப்பு - 4 இணைப்பு -  5 இணைப்பு - 6  இணைப்பு - 7  இணைப்பு - 8

Thursday, 26 August 2021

 26.08.2021       // மிக  மிக அவசரம் //

அனைத்து மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

சென்னை மாநில கணக்காயரின் ஆய்வுக்கு முன்னிலைப்படுத்த வேண்டி 2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான  இலவச கட்டாயக் கல்வி - 2009 இன் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கப்படும் கல்வி கட்டணம் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் கடிதம் 3 நகல்களில் நாளை 27.08.2021  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

குறிப்பு:  கணக்கில் வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தக நகல்  3  நகல்கள் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  இலவச கட்டாயக் கல்வி - 2009 இன் கீழ் பயிலும் மாணவர்களின் கேட்பு பட்டியல் சரிபார்த்து பிரித்து மெட்ரிக் பள்ளி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பும் வகையில் தங்கள் பள்ளியிலிருந்து RTE  தெரிந்த பணியாளர்களை நாளை 27.08.2021 காலை 11.00 மணிக்கு  திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



Wednesday, 25 August 2021

25.08.2021  

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தமிழரசு செய்தி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இதழ் சந்தாதாரர்கள் சேர்க்க அறிவுறுத்தமை தொடர்பாக  இணைப்பில் கண்டுள்ள இதுவரை வங்கி வரைவோலை  வழங்காத பள்ளிகள் உடனடியாக 27.08.2021 - க்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

நகல்: திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.

 25.08.2021   //  மிக அவசரம் //

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் இணைய தளத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரத்தினை (படிவம் 1 / படிவம் 2)  பூர்த்தி செய்து சான்றுகளுடன் 25.08.2021 க்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 

Monday, 23 August 2021

 23.08.2021    //சீருடை //

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல்  மற்றும் இரண்டாம் இணை  விலையில்லா சீருடை கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு   24.08.2021 அன்று   காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை ஆதியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்படுவதால் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Sunday, 22 August 2021

 23.08.2021  // தேர்வுகள்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 

     2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 23-08-2021 அன்று காலை 11.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (www.dge.tn.gov.in) இணையதளத்திற்கு சென்று தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள user ID மற்றும் Password பயன்படுத்தி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையின் மூலமாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியார்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  இணைப்பு1  இணைப்பு2

Thursday, 19 August 2021

 19.08.2021    //சீருடை //

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல்  மற்றும் இரண்டாம் இணை  விலையில்லா சீருடை ஜோலார்பேட்டை மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு   23.08.2021 அன்று   காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை ஆதியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்படுவதால் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Wednesday, 18 August 2021

  19.08.2021 // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்  தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று 04.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ONLINE SHEET 

 19.08.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து வகை அரசு /நிதியுதவி / மெட்ரிக்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

தங்கள் பள்ளி சார்ந்த அடிப்படை விவரங்களை இணைப்பில் காணும் ஆன் லைன் படிவத்தில் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

 18.08.2021      // மிக அவசரம் // தனிகவனம்//

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலை /நிதியுதவிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பரிசு பொருட்களை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலவலரிடமிருந்து பெற்று திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் 2018 – 2019 / 2019 – 2020 ஆம் கல்வி ஆண்டில் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் ஊரகப் பகுதியிலுள்ள பள்ளி மாணவ /மாணவிகளுக்கு இருமுறை நடத்தப் பட்டமைக்கு வெற்றி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்பட்ட  விவரங்களை இணைப்பில் உள்ள பயனீட்டுச் சான்றில் பூர்த்தி செய்து 23.08.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் இரு நகல்களில் இவ்வலுவலக  அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வலுவலகத்தில் மாநில கணக்காயர் அவர்களின் தணிக்கை நடைபெற்று வருவதால் இதில் தனி கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு


Monday, 16 August 2021

 16.08.2021 

அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகளின் படி 15.03.2021 அன்றைய நிலவரப்படி அலுவலக உதவியாளர் / பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு தங்கள் பள்ளிகளில் தகுதி வாய்ந்த பணியாளர்களின் கருத்துரு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 17.08.2021  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  படிவம்  

Sunday, 15 August 2021

 16.08.2021    // தனி கவனம் // மிக அவசரம்//  

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்கருவூலகத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் / DDO (தலைமை ஆசிரியர்கள்)  ஜீலை - 2021 மாதத்திற்குரிய  அனைத்து பட்டியல்களின்  ENFACEMENT SLIP - யை   நாளை பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Saturday, 14 August 2021

 15.08.2021    

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ விலையில்லா நோட்டுப்புத்தகம் 16.08.2021 அன்று கீழ்கண்ட பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால்   சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

1. அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக் நகர்,

2. அரசு உயர்நிலைப்பள்ளி, அண்ணான்டப்பட்டி,

3. அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர்,

4. அரசு மேல்நிலைப்பள்ளி, பால்னாங்குப்பம்,

5. அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கனம்பட்டி,

6. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகம்மியம்பட்டு,

7. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,

8. அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டலவாடி குன்னத்தூர்,

9. அரசு உயர்நிலைப்பள்ளி, கனவாய்புதூர்,

10. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை,

11.அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு,

12.அரசு உயர்நிலைப்பள்ளி, கொத்தக்கோட்டை,

13. அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுரும்பகார தெரு,

14. அரசு உயர்நிலைப்பள்ளி, N.M.கோயில்,

15. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு,

16. அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை,

17. அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை,

18. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம்,

19. அரசு  மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்,

20. அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்,

21. அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம்,

22. அரசு உயர்நிலைப்பள்ளி,  திரியாலம்,

23. அரசு உயர்நிலைப்பள்ளி, அச்சமங்கலம்,

24. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னமூக்கனூர்.

25. அரசு உயர்நிலைப்பள்ளி, அக்ரகாரம்.


Friday, 13 August 2021

 13.08.2021  // கிராம புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு MBC பெண் கல்வி உதவித்தொகை தங்கள் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு கிராம புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கியமைக்கான பயனீட்டு சான்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பயனீட்டு சான்றில் பூர்த்தி செய்து 3 நகல்களில் 16.08.2021 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Thursday, 12 August 2021

 12.08.2021  // 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ விலையில்லா நோட்டுப்புத்தகம் 13.08.2021 அன்று இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால்   சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Wednesday, 11 August 2021

12.08.2021 அனைத்து  வகை அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பள்ளிக் கல்வி / தொடக்கக்கல்வி இணை இயக்குநர் அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற விலையில்லா கல்வி உபகரணப்பொருட்கள் சார்ந்து தகவல் கோரப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தினை காலதாமதமின்றி பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு- 1   இணைப்பு - 2

 12.08.2021       // மிக அவசரம் //  தனிகவனம்

அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கான 35 நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட பவானி சாகர் அடிப்படை பயிற்சி இணைய வழியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இணைய வழி பயிற்சிக்கு 2017 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட தங்கள் பள்ளியில் பணிபுரியும்  இளநிலை உதவியாளர் /உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று  பிற்பகல் 2.00 மணிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 


Sunday, 8 August 2021

 09.08.2021   நினைவூட்டல் - 1  // தனி கவனம் // மிக அவசரம்//  

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்கருவூலகத்தில் பணம் பெற்று வழங்கும் தலைமை ஆசிரியர்கள் மட்டும் மே - 2021 மாதத்திற்குரிய  அனைத்து பட்டியல்களின்  ENFACEMENT SLIP - யை  இதுவரை வழங்காத இணைப்பில் கண்ட பள்ளிகள் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 09.08.2021  // மாநில நல்லாசிரியர் விருது//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021 - ஆம்  ஆண்டிற்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05.09.2021 ஆன்று ஆசிரியர் தின விழாவாக நடைபெற உள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உயர்  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை ( Guidelines ) பின் பற்றி தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் கருத்துருக்கள் 3 நகல்களில் முழுமையான வடிவில் தயார் செய்து அசல் பணிப்பதிவேட்டுடன் 13.08.2021 மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3  அரசாணை   படிவம் 

Friday, 6 August 2021

 06.08.2021   // தனி கவனம் // மிக அவசரம்//  

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்கருவூலகத்தில் பணம் பெற்று வழங்கும் தலைமை ஆசிரியர்கள் மட்டும் மே - 2021 மாதத்திற்குரிய  அனைத்து பட்டியல்களின்  ENFACEMENT SLIP - யை  இதுவரை வழங்காத பள்ளிகள் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Thursday, 5 August 2021

 

 05.08.2021   அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதலர்வகள் கவனத்திற்கு,  

தமிழரசு செய்தி இதழ் – செய்தி மக்கள் தொடர்புத் துறை  - திருப்பத்தூர் மாவட்டம்  – அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் தமிழரசு செய்தி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இதழ் சந்தாதாரர்கள் சேர்க்க   திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி துரித நடவடிக்கை மேற்கொண்டு வங்கி வரைவோலை வழங்காத பள்ளிகள் உடனடியாக வழங்குமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு  தெரிவிக்கலாகிறது. இணைப்பு


 

 05.08.2021   அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

IFHRMS வரவு செலவுத் திட்டம்  – 2021 –   அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான  ஊதியம் (PAY/DA/HRA/MA/OA) /  பண்டிகைமுன்பணம்/மின்கட்டணம்/பயணப்படி / அஞ்சல் வில்லை/ அலுவலக செலவினம் நிதி ஒதுக்கீடு IFHRMS இல்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.  IFHRMS இல் BUDGET AVAILABLITY REPORT இல் உள் சென்று DOWNLOAD   செய்து சரிபார்த்துக் கொள்ளவும். இச்செலவினங்களை 31.03.2022 க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Wednesday, 4 August 2021

 05.08.2020  // தேர்வுகள்//

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகளில் பள்ளி மாணாக்கரின் தேர்வெண்களுடன் கூடிய பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக இணைப்பில் காணும் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து  வகை உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

Tuesday, 3 August 2021

 03.08.2021 // மிக மிக அவசரம்//

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லா பணியாளர்கள்-  அடிப்படை பணியாளர்கள் (பெருக்குபவர், துப்புரவாளர், இரவுக்காவலர்,அலுவலக உதவியாளர்) , பதிவறை எழுத்தர் , ஆய்வக உதவிளாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் வரை இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில்  இன்று (03.08.2021) மாலை 05.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அதன் நகலினை பள்ளி அளவுகோல் பதிவேட்டின் நகலுடன்  தனி நபர் மூலம் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு . காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில்  இன்மை  என உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 ONLINE SHEET