Wednesday, 28 July 2021

 28.07.2021  அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS High Tech Lab மற்றும் ICT  ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களை கொண்டு பயிற்சி அளித்தல்  இணைப்பு 

Sunday, 25 July 2021

 26.07.2021   // தனி கவனம் // மிக அவசரம்//  

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்கருவூலகத்தில் பணம் பெற்று வழங்கும் தலைமை ஆசிரியர்கள் மட்டும் மே - 2021 மாதத்திற்குரிய  அனைத்து பட்டியல்களின்  ENFACEMENT SLIP - யை   இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 19 July 2021

 19.07.2021  // தொழிற்பயிற்சி  சேர்க்கை // 

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

  தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்   01.07.2021 முதல் 28.07.2021 வரை விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் வழங்கப்படுவதால் இணைப்பில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை சார்ந்த பயிற்சி நிலையத்திற்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு1  இணைப்பு2 

குறிப்பு .

    இணைப்பில் காணும் கடிதத்தினை தங்கள் பள்ளி தகவல் பலகையின் மூலம் மாணாக்கர்களுக்கு தெரியபடுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Sunday, 18 July 2021

 

19.07.2021            +2  தேர்வு முடிவுகள் 

அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுதேர்வுகள் 2020-2021-க்கான தேர்வு முடிவுகள் வெளிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறையினை பின்பற்றி செயல்படுமாறும், மேலும் 19.07.2021 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வகை முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 14 July 2021

 15.07.2021  அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் தேவைப் பட்டியல் 08.07.2021 க்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால்  இணைப்பில் கண்ட  பள்ளிகள் இதுவரை வழங்கப்படாமையால்  தேவைப்பட்டியலை தொகுத்து  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது  என்பதை  தங்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Tuesday, 13 July 2021

14.07.2021  அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மற்றும் முந்தைய 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டது. இவற்றில் உள்ளதற்கும் EMIS  இல் உள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சிய பாடப்புத்தகங்களை பள்ளியிலேயே இருப்பில் வைக்க வேண்டாம் என்றும் அவற்றினை திருப்பத்தூர் உள்ள ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பின் புறத்தில் உள்ள அரசு நலத்திட்டங்கள் வழங்கும் மையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது பாடப்புத்தகங்கள் பள்ளியில் இருப்பில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

குறிப்பு: அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தாங்கள் கொண்டு வரும் இருப்பில் உள்ள பாடநூல்களை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 13.07.2021  // 

  தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 

2019 -2020  மற்றும் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான தேர்ச்சி பதிவேட்டில் 13.07.2021 அன்று  ஒப்புதல் பெறாத   கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் சரிபார்ப்பு குழு தலைமை ஆசிரியரிடம் பதிவேடுகளை சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்புதல் பெற சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

பள்ளிகள் விவரம்

1 . விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆதியூர்

2 . பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்

3 . யுனிவர்சல் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

4 .ஸ்ரீவினாயகா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கட்டேரி

5 . சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி , இராஜாவூர்

6 . இந்தியா மாடர்ன் மெட்ரிக்  பள்ளி, கசிநாயக்கன்பட்டி

7. ஸ்ரீசாய் சரண்  மெட்ரிக் பள்ளி செவ்வத்தூர் புதூர்

8 . மகா  மெட்ரிக் பள்ளி செவ்வத்தூர் புதூர்.

9 . கலாம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி

10 . தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

11 . அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு

 கந்திலி  மற்றும் திருப்பத்தூர் -   

Monday, 12 July 2021

 13.07.2021  

இணைப்பில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகளின் படி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு  உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III  உதவியாளராக பணிமாறுதல் பெற தகுதி வாய்ந்த 123 நபர்களுக்கான இணைப்பில் உள்ள பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களையும் ( ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி  உயர்வினை துறந்தவர்கள் இருப்பின் அவர்களை சேர்க்கும் பொருட்டும்)  TNPSC  GROUP 4 ( 2007 - 2008 மற்றும் 2012 - 2013 ஆம் ஆண்டிற்கானது) தேர்வு செய்யப்பட்டு 04.02.2013 அன்று பணிவரன்முறை  செய்யப்பட்ட பணியாளர்கள் இருப்பின் 15.03.2021 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில்  பெயர் சேர்க்க கருத்துருக்கள்  3 நகல்களில் அசல் பணிப்பதிவேட்டுடன் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1  இணைப்பு - 2

 12.07.2021  அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் தேவைப் பட்டியல் 08.07.2021 க்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால்  இணைப்பில் கண்ட  பள்ளிகள் இதுவரை வழங்கப்படாமையால்  தேவைப்பட்டியலை தொகுத்து  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது  என்பதை  தங்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

Sunday, 11 July 2021

 12.07.2021  // உலக மக்கள் தொகை தின உறுதி மொழி//

அனைத்து வகை அரசு / நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

உலக மக்கள் தொகை தினத்தை  (11.07.2021)  முன்னிட்டு இன்று (12.07.2021)காலை 11.00 மணிக்கு இணைப்பில் உள்ள உறுதிமொழியை எடுத்துக்கொள்ள உரிய எற்பாடுகளை செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Friday, 9 July 2021

 09.07.2021  

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்(பணியாளர் தொகுதி) சென்னை அவர்களின் செயல்முறைகளின்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்துத்தட்டச்சர் நிலை IIIலிருந்து உதவியாளராகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்தும் 15.03.2021 நிலவரப்படி உதவியாளர்பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக பதவி உயர்வினை உரிமைவிடல் செய்தவர்கள்15.03.2021 தேர்ந்தோர் பெயர் பட்டியலில் சேர்க்க ஏதுவாகஇத்துடன் இணைத்துள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் 3 நகல்களில் 13.07.2021 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2  

Tuesday, 6 July 2021

 07.07.2021  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவ பாடநூல்  தேவை பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 08.07.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள தபால்  பெட்டியில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2

 

06.07.2021  // எண்வகை ப்பட்டியல் 2022-2023 //

அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

வரவு செலவுத் திட்டம் – 43.03 பள்ளிக் கல்வி துணை சார்பான கணக்குத் தலைப்புகள் -2022 -2023 -ஆம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 06.07.2021  

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

கொரோனா  தொற்றால் உயிரிழந்த ஆசிரியர்கள் பற்றிய விவரம், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு இடம் பெயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக மற்றும் 2021 -2022  ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் தனித்தனியாக முன்று (3)  படிவங்களில் 07.07.2021 மாலை 02.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்  கோரப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவங்களில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களின் கையொப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இப்பொருள் தொடர்பாக தொகுப்பறிக்கை திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலத்திற்கு உடன் அனுப்பவேண்டி இருப்பதால் தனிகவனம் செலுத்தி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 குறிப்பு : ONLINE  படிவத்தில் தங்களிடம் கோரப்படும் விவரங்கள் அடங்கிய படிவத்தினை இனி வரும் காலங்களில் நீக்கம்(DELETE) செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 ONLINE SHEET 

 06.07.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இரவு  காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிட விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (06.07.2021 )  03.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் தகவல்கள் முதன்மைக்கல்வி அலுவலத்திற்கு சமர்ப்பிக்கவேண்டி உள்ளதால்  உடனடியாக உள்ளீடு செய்யுமாறும், பணியிடம்  அனுமதிக்கப்படவில்லை எனில் ஆன் லைன் படிவத்தில் NIL  என உள்ளீடு செய்யுமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ON LINE SHEET 

Monday, 5 July 2021

 05.07.2021  

அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் /உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

2019 -2020 மற்றும்  2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான தேர்ச்சி பதிவேட்டில் ஒப்புதல் பெற  திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நாளை (06.07.2020 ) முதல் இணைப்பில் உள்ள அட்டவணை படி கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

குறிப்பு. 1 .  பதிவேடுகள் சரிபார்க்கும் பொருட்டு இணைப்பில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும்  இளநிலை உதவியாளர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 .  06.07.2021 முதல் 08.07.2021 வரை தேர்ச்சி பதிவேடுகள் சரிபார்க்க தேவையான இடவசதி, இருக்கை வசதி உள்ளிட்ட வசதிகளை எற்படுத்துமாறு  திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்   

                                                                              மாவட்டக்கல்வி அலுவலர்,

                                                                                                திருப்பத்தூர்.