24.06.2021 //அவசரம் // தனிகவனம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்) வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில் இன்று (24.06.2021) 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இணைத்து 24.06.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும் இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது ONLINE SHEET
குறிப்பு . எந்த காரணத்தை கொண்டும் ஆன் லைன் படிவத்தில் விவரங்களை மட்டும் உள்ளீடு செய்யுவும் DELETE செய்யவேண்டாம்
எற்கனவே உள்ளீடு செய்த பள்ளிகள் அனைத்தும் மீண்டும் உள்ளீடு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.