30.04.2021 // மிக மிக அவசரம்// நினைவூட்டல் - 1 //
அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
2020 -2021 ஆம் ஆண்டிற்கான MBC 6 ஆம் வகுப்பு பயிலும் பெண்கல்வி ஊக்கத்தொகை நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளி வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அசல் ( வங்கி கணக்கு எண் சரிப்பார்க்க ) இன்று (28.04.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் இது வரை வங்கி கணக்கு எண் சரிபார்க்க அலுவலகத்தில் ஒப்படைக்காத காரணத்தால் உரிய தொகையினை வங்கி கணக்கில் ECS பற்று வைக்கஇயலாத நிலை உள்ளதால் இது வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இனியும் தாமதிக்காமல் இன்று(30.04.2021) மதியம் 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வங்கி கணக்கு எண் வழங்காத பள்ளிகளுக்கான பெண்கல்வி ஊக்கத்தொகையினை மீளவும் அரசுக்கணக்கிற்கு அனுப்பப்படும் என்ற விவரமும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.