22.03.2021 // கடைசி நினைவூட்டல் // மிக மிக அவசரம்//
ஆதிதிராவிடர் நலம் - 2020 -2021 - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு பெண்கல்வி உதவித்தொகை வழங்கிட மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்து VAO கையொப்பம் பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் வங்கி புத்தக முதல் பக்கம் 2 நகல்களுடன் இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் நாளை (23.03.2021) 02.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (23.03.2021 ) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க இயலும் எனவும் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு
குறிப்பு
1 . வங்கி புத்தக நகல்களில் சார்ந்த மாணவிகளின் பெயர் , வங்கி கணக்கு எண் மற்றும் பள்ளி பெயர் குறிப்பிடவும்
2 . விண்ணப்பங்கள் பெற்று வங்கி கணக்கு எண் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவியரின் தாய் / தந்தையிடம் விளக்கம் பெற்று சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி புத்தக நகல் இணைக்காத காரணத்தை குறிப்பிட்டு கடிதம் சமர்ப்பிக்கவும்