Tuesday, 30 March 2021

 30.03.2021     நினைவூட்டல்  -1 

  // PTA  5%  மற்றும்   இணைப்பு கட்டணம்  இந்நாள் வரை செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு // 

2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக PTA 5% மற்றும் ணைப்பு கட்டணத்தொகையில்  இணைப்பு கட்டணத்தொகையை இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடமும்,  PTA 5% தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம் தலைமை ஆசிரியர் அவர்களிடமும் வழங்கி இரசீதினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது சில பள்ளிகள் இந்நாள்வரை செலுத்தவில்லை எனவே PTA 5% மற்றும் இணைப்பு கட்டணம்   செலுத்தாத பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்கள்  31.03.2021 பிற்பகல் 2.00 மாலைக்குள்   கட்டணம் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு   தெரிவிக்கலாகிறது.   

Monday, 29 March 2021


30.03.2021  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களுக்கு இணையதளத்தில் புதியதாக விண்ணப்பிக்க   (Fresh Entry)    31.03.2021 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

  30.03.2021     // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்   மேல்நிலைப்பள்ளி    தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்  12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில் 2020 -2021  ஆம் ஆண்டின் (NOMINAL ROLL) ன் படி பதிவு எண்/ தேர்வு எண்ணை  (EXAMINATION NUMBER / REGISTER NUMBER )பூர்த்தி செய்து   30.03.2021 அன்று மதியம் 02.00  மணிக்குள்    இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Friday, 26 March 2021

  26.03.2021   // மிக மிக அவசரம் // 

அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி  பணம்பெற்று வழங்கும் அலுவலர்களின்    கவனத்திற்கு 

திருப்பத்தூர் சார் நிலைக்கருவூலத்தில் பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள்  டிசம்பர் 2020 முதல் மார்ச்  2021  வரை காசக்கம் செய்யப்பட்ட அனைத்து பட்டியல்களின் முகப்பு தாட்களை (ENFACEMENT SLIP)  செலவின அறிக்கை தயார் செய்யும் பொருட்டு MTC70, NON SALARY 70, மற்றும் ENFACEMENT SLIP  ஆகியவை இன்று (26.03.2021) வழங்காத பள்ளிகள் 29.03.2021 அன்று  காலை 11.00 மணிக்குள்   திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ1 பிரிவில்    நேரில் எடுத்துவர பிரிவு எழுத்தர் அல்லது பட்டியல் சமர்ப்பிக்கும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Thursday, 25 March 2021

 25.03.2021   // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி  பணம்பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் சார் நிலைக்கருவூலத்தில் பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள்  டிசம்பர் 2020 முதல் மார்ச்  2021  வரை காசக்கம் செய்யப்பட்ட அனைத்து பட்டியல்களின் முகப்பு தாட்களை (ENFACEMENT SLIP)  செலவின அறிக்கை தயார் செய்யும் பொருட்டு MTC70, NON SALARY 70, மற்றும் ENFACEMENT SLIP  ஆகியவை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ1 பிரிவில்  26.03.2021 அன்று மாலைக்குள் நேரில் எடுத்துவர பிரிவு எழுத்தர் அல்லது பட்டியல் சமர்ப்பிக்கும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Wednesday, 24 March 2021

  24.03.2021       நினைவூட்டல் - 04    // தேர்வுகள் // 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்மேல்நிலைப்பள்ளி தலைமை   ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெறும்  2020 - 2021  கல்வியாண்டில் இடைநிலை , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் (INCLUDING ENGLISH MEDIUM)  SC/ST/SS/MBC/BC/OBC இனத்தை சார்ந்த (BC/ OBC மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமாணம்  இரண்டு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இனவாரியான விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் பூர்த்தி செய்து (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்)  இரண்டு நகல்களில் தனி நபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம்  25.03.2021 அன்று 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

        படிவம் 1 படிவம் 2 படிவம் 3  ஒப்படைக்காத  SSLC மற்றும் HSC பள்ளிகள் விவரம். 

குறிப்பு . 1 .அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மேற்காண் விவரங்கள் தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


Tuesday, 23 March 2021

 24.03.2021 

தமிழ்நாடு அமைச்சுப்பணி - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து  வரும் இளநிலை உதவியாளர்கள் நாளது வரை பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் ஆணை  பெறாதவர்கள் கருத்துரு தயார் செய்து 3 பிரதிகள் ( அசல் - நகல் - 2 பிரதி) மற்றும் அசல் பணிப்பதிவேட்டுடன் 26.03.2021 க்குள் சார்ந்த அலுவலரின் பரிந்துரையுடன் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

  24.03.2021    //சில நிர்வாக காரணங்களால் தலைமையாசிரியர் கூட்டம்  தேதி மாற்றம்  25.03.2021 அன்று மாலை 4.00 மணிக்கு // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 


ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு தேசிய சாலைப்பாதுகாப்பு மாதவிழா 2021 போட்டிகள் சார்ந்து கீழ்காண் விவரங்களுடன்


முகப்புக் கடிதம்,

அறிக்கை,

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் விவரம்,

நடத்தப்பட்ட போட்டி - புகைப்படம் ,

பேனர் புகைப்படம்,

1 . பற்றுச்சீட்டு , CASH BILL WITH GST BILL , மட்டும்  கொண்டுவரவும் 

2 . ESTIMATE BILL மற்றும் பற்றுச்சீட்டில்   PAID AND CANCEL  தவிர்க்கவும்.     


1 . நாளை (25.03.2021) அன்று  மதியம்  4.00 மணிக்கு  திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  மையத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

2 .  PTA  கட்டணம் 5 %  மற்றும் இணைப்பு கட்டணம்  செலுத்தாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை கூட்டத்திற்கு வரும்போது உரிய தொகையை செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


குறிப்பு- ஏற்கனவே மேற்காண் விவரங்கள் சமர்பித்திருந்தாலும், நேரில் வந்திருந்து திருத்தம் இருப்பின் புதுப்பித்து சரியாக வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

  23.03.2021  // தலைமையாசிரியர் கூட்டம்// மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 

ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு தேசிய சாலைப்பாதுகாப்பு மாதவிழா 2021 போட்டிகள் சார்ந்து கீழ்காண் விவரங்களுடன்


முகப்புக் கடிதம்,

அறிக்கை,

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் விவரம்,

நடத்தப்பட்ட போட்டி - புகைப்படம் ,

பேனர் புகைப்படம்,

பற்றுச்சீட்டு , CASH BILL WITH GST BILL,ESTIMATE BILL மற்றும் பற்றுச்சீட்டில்   PAID AND CANCEL பற்றுச்சீட்டு மற்றும்   தலைமையாசிரியர் கையொப்பம்  தவிர்க்கவும் 


நாளை (24.03.2021) அன்று  மதியம்  2.00 மணிக்கு  திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  மையத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்  மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பு- ஏற்கனவே மேற்காண் விவரங்கள் சமர்பித்திருந்தாலும், நேரில் வந்திருந்து திருத்தம் இருப்பின் புதுபித்து சரியாக வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Monday, 22 March 2021

 23.03.2021       நினைவூட்டல் - 03    // தேர்வுகள் // 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்மேல்நிலைப்பள்ளி தலைமை   ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெறும்  2020 - 2021  கல்வியாண்டில் இடைநிலை , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் (INCLUDING ENGLISH MEDIUM)  SC/ST/SS/MBC/BC/OBC இனத்தை சார்ந்த (BC/ OBC மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமாணம்  இரண்டு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இனவாரியான விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் பூர்த்தி செய்து (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்)  இரண்டு நகல்களில் தனி நபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம்  23.03.2021 அன்று 02.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

        படிவம் 1 படிவம் 2 படிவம் 3  ஒப்படைக்காத  SSLC பள்ளிகள் விவரம்.  ஒப்படைக்காத  HSC பள்ளிகள் விவரம். 

குறிப்பு . 1 .அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மேற்காண் விவரங்கள் தொகுத்து அனுப்ப வேண்டியுள்ளதால் மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

2 . 18.03.2021 க்கு பிறகு வழங்கியவர்கள் மீண்டும் வழங்க தேவையில்லை 


 23.03.2021  

அனைத்து வகை  தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

தேசிய அளவில் நடைபெறவுள்ள NATA  (NATIONAL APTITUDE TEST IN ARCHITECTURE) நுழைவு தேர்வுக்கான  இணைப்பில் காணும்  விவரங்களை மாணாக்கர்களுக்கு தகவல் பலகையின் மூலம் தெரிவிக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT2 

 22.03.2021   // கடைசி நினைவூட்டல் // மிக மிக அவசரம்//

ஆதிதிராவிடர் நலம் - 2020 -2021 -  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு பெண்கல்வி உதவித்தொகை வழங்கிட  மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்து VAO கையொப்பம் பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் வங்கி புத்தக முதல் பக்கம் 2 நகல்களுடன்  இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் நாளை (23.03.2021) 02.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (23.03.2021 ) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் மாணவிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க இயலும் எனவும் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களுக்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு 

குறிப்பு

    1 . வங்கி புத்தக நகல்களில் சார்ந்த மாணவிகளின் பெயர் , வங்கி கணக்கு எண் மற்றும் பள்ளி பெயர் குறிப்பிடவும்

    2 . விண்ணப்பங்கள் பெற்று வங்கி கணக்கு எண் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவியரின் தாய் / தந்தையிடம் விளக்கம் பெற்று சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி புத்தக நகல் இணைக்காத காரணத்தை குறிப்பிட்டு கடிதம் சமர்ப்பிக்கவும் 

 22.03.2021   // தனி கவனம் // மிக அவசரம் //

தமிழ்நாடு அமைச்சுப்பணி  உதவியாளர் நேரடி நியமனம் ( Group - II A services)  ( Non - Interview Posts)  201 3 - 2014, 2014 - 2015, 2015 - 2016 மற்றும் 2017 - 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட உதவியாளர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி உரிய படிவத்தில் இரு நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அசல் பணிப்பதிவேட்டுடன் சார்ந்த உதவியாளர் கருத்துருக்களை நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு  

Friday, 19 March 2021

 19.03.2021    // தேர்தல்  அவசரம்//    

         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் 2021  திருப்பத்தூர் மாவட்டம் - வாக்குச்சாவாடி அமைந்துள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் 22.03.2021 மற்றும் 23.03.2021,27.03.2021 முதல் 02.04.2021 ,03.04.2021,05.04.2021  ஆகிய  தேதிகளில் வெப்கேமரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட தேதிகளில் பள்ளிகளை திறந்துவைக்குமாறு அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் (திருப்பத்தூர் கல்வி மாவட்டம் ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    (மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட வருகைப்புரிய உள்ளதால் வாக்குசாவடிஅமைந்துள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  முழு  நேரமும் பள்ளியை திறந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,மேலும் தலைமை ஆசிரியர் தமது கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பள்ளி அறிவிப்புப்பலகையில் எழுதிவைக்கவும் கைப்பேசியினை உயர் அலுவலர்கள் /வருவாய் துறையினர்  தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக சரியான விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்    இணைப்பு 1

Thursday, 18 March 2021

 19.03.2021    // சாலை பாதுகாப்பு //

 சாலை பாதுகாப்பு -2020 - 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு 18.01.2021 முதல் 17.02.2021 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிகளில் வைக்கப்பட்ட பேனர்கள், ஓவியபோட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிசார்பான விவரங்கள் , பரிசுகள் வழங்கிய விவரங்கள் மற்றும் செலவினபட்டியல் (ஜி.எஸ்.டி யுடன்) அறிக்கையாக புகைப்படத்துடன்  3 நகல்களில் ( அசல் 1 / நகல் -2 ) EXCEL SHEET   ல் தட்டச்சு செய்து மற்றும் குறுந்தகட்டில் பதிவு செய்து நேரடியாக தனிநபர் மூலம்  இவ்வலுவலக ஆ5 பிரிவில் (19.03.2021) இன்று மாலை 5.00 மணிக்குள்   ஒப்படைக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு2 

Wednesday, 17 March 2021

 17.03.2021      நினைவூட்டல் - 02    // தேர்வுகள் // 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்மேல்நிலைப்பள்ளி தலைமை   ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடைபெறும்  2020 - 2021  கல்வியாண்டில் இடைநிலை , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் (INCLUDING ENGLISH MEDIUM)  SC/ST/SS/MBC/BC/OBC இனத்தை சார்ந்த (BC/ OBC மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமாணம்  இரண்டு இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இனவாரியான விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் பூர்த்தி செய்து (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்)  இரண்டு நகல்களில் தனி நபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம்  18.03.2021 அன்று 02.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

        படிவம் 1 படிவம் 2 படிவம் 3  ஒப்படைக்காத  SSLC பள்ளிகள் விவரம்.  ஒப்படைக்காத  HSC பள்ளிகள் விவரம். 


Tuesday, 16 March 2021

 16.03.2021   // மிக மிக அவசரம் // 

சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத்தேர்வு பாகம் -1 , 10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத அமைச்சுப்பணியாளர்களின் விவரங்கள் இணைப்பு 1 ல் விடுபட்டவர்கள் இணைப்பு 2 ல் உள்ள செயல்முறையை பின்பற்றி இணைப்பு 3 ல் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  17.03.2021 அன்று காலை 10.00 க்கு இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு2,  இணைப்பு3  

16.03.2021      // PTA  5%  மற்றும்   இணைப்பு கட்டணம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 

2019 - 2020 மற்றும் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக PTA 5% மற்றும் ணைப்பு கட்டணத்தொகையில்  இணைப்பு கட்டணத்தொகையை இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடமும்,  PTA 5% தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம் தலைமை ஆசிரியர் அவர்களிடமும் வழங்கி இரசீதினை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.   

Monday, 15 March 2021

16.03.2021  // கோவிட் -19 தடுப்பூசி //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் - கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் / பணியாளர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ளுமாறு   கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Sunday, 14 March 2021

 15.03.2021           //தனி கவனம் //

அனைத்து  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டில் வழங்கிய நிதி ஒதுக்கீடுகளை  (NON SALARY)  15.03.2021 க்குள் செலவினம் மேற்கொண்டு உரிய வங்கி கணக்கிற்கு  ECS  செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Friday, 12 March 2021

12.03.2021 // தேர்தல்  அவசரம்//    

         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் 2021  திருப்பத்துார் மாவட்டம் - வாக்குச்சாவாடி அமைந்துள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள்  நாளை முதல் தேர்தல் முடியும் வரை தலைமையிடத்திலே இருக்க வேண்டும் , தேர்தல் சார்பாக பார்வையாளர்கள் (மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட வருகைப்புரிய உள்ளதால் வாக்குசாவடிஅமைந்துள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்  முழு  நேரமும் பள்ளியை திறந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் தலைமையிடத்தை விட்டு அவசியமாக செல்லவேண்டியிருப்பின் மாற்று ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தலைமை ஆசிரியர் தமது கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பள்ளி அறிவிப்புப்பலகையில் எழுதிவைக்கவும் கைப்பேசியினை உயர் அலுவலர்கள் /வருவாய் துறையினர்  தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக சரியான விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      இணைப்பு

Thursday, 11 March 2021

 12.03.2021   // தேர்தல்  பணி // அவசரம் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தல் தேர்தல் பணிக்கான முதற்கட்ட பயிற்சி 14.03.2021  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற அனைவரும்  பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கலாகிறது   இணைப்பு  

Wednesday, 10 March 2021

 11.03.2021      //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும்  வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு USER ID & PASSWORD - உடன் இன்றே ( 11.03.2021) செல்லுமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

  10.03.2021   // தேர்வுகள் //

அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில்  14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட  கீழ்காணும்  பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  ஆணையை  அ3 பிரிவு அலுவலரிடம் (10.03.2021) இன்று  தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் விவரம்

1 . அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.

2 . அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

3 . அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி.

4 .  உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

Tuesday, 9 March 2021

10.03.2021   அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு  17.02.2021 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 50 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கோரிய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதம் உள்ள 27 பள்ளிகள் கோரிய விவரங்களை வழங்காமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. மேலும்  இக்காரணத்தினால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் இதுநாள் வரை அனுப்பாத பள்ளிகள் இன்றே (10.03.2021) விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.   இணைப்பு-1 

முக்கிய குறிப்பு:  இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் இதர விவரங்கள் சரியாக உள்ளது என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்று அளித்து கையொப்பமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 10.03.2021      //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் விரைந்து இன்றே இணைய தளத்தில் விண்ணப்பித்தும் அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 09.03.2021      //  மிக அவசரம் // 

 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் சென்னை - 6 அவர்களின் ந.க.எண். 15099/வி2/இ3/2021  நாள். 03.03.2021 ன் படி விலையில்லா நலத்திட்டங்கள்  சார்பாக  2011 - 12 முதல் 2020 - 21 வரையிலான ஆண்டில் பயன்பெற்ற மாணவ மாணவியர்களின் விவரங்கள் அரசுக்கு வழங்கும்பொருட்டு இணைப்பில் உள்ள EXCEL  படிவத்தில் பூர்த்தி செய்து குறுந்தகட்டுடன் இவ்வலுவலகத்தில் நாளை  03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு - 1  இணைப்பு - 2

Monday, 8 March 2021

  09.03.2021     இறுதி  நினைவூட்டல்    // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து  இந்நாள் வரை வழங்கப்படாத இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் இன்று மாலை 05.00 மணிக்குள் குறுந்தகட்டில் பதிவு செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2 (பள்ளிகளின் பெயர்)  (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

குறிப்பு:  இன்று மாலை 05.00 மணிக்குள் வழங்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என  தெரிவிக்கலாகிறது.

 09.03.2021  // PTA - இணைப்பு கட்டணம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணத்தொகையினை இணைப்பில் உள்ளவாறு இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் 25.03.2021 அன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறதுஇணைப்பு  

Sunday, 7 March 2021

 08.03.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் விரைந்து  இணைய தளத்தில் விண்ணப்பித்தும் அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Friday, 5 March 2021

  05.03.2021     நினைவூட்டல் - 04  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து   08.03.2021 அன்று மதியம் 02.00  மணிக்குள்   குறுந்தகட்டில் பதிவு செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

 05.03.2021  // கோவிட் -19 தடுப்பூசி //

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் - கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் / பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை (05.03.2021 - நிலவரப்படி) திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Thursday, 4 March 2021

 05.03.2021  // தேர்வுகள் // மிக மிக அவசரம் //

நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு  மே 2021 ஆன் லைன் வழியாக மாணாக்கர்களின்   தேர்வுக்கட்டணம் / அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) கட்டணத்தொகையை செலுத்தாத இணைப்பில் காணும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்   06.03.2021 அன்றுக்குள் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்  அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு 2 

 04.03.2021   // தேர்தல் - தடுப்பூசி போடுதல் //

நடைபெறவுள்ள சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2021 தேர்தல் பணியாளர்களுக்கு கோவிட் 19  தடுப்பூசி  போடுதல் தொடர்பாக  இணைப்பில் காணும் தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள  முன்பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து  தேர்தல் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT 

Tuesday, 2 March 2021

02.03.2021   நினைவூட்டல்  - 1    // மிக அவசரம் //

 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

இணைப்பில் கண்ட அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் விலையில்லா நலத்திட்டங்களான பாடநூல், நோட்டுப்புத்தகம், காலணி, புத்தகபை , கணித உபகரணப்பெட்டி  பெற்று மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 03.03.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இரு நகல்களில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு - 1, இணைப்பு - 2

 02.03.2021  // தேர்வுகள் //

அனைத்து வகை மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – நடைபெறவுள்ள மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் சார்பான இணைப்புப் பள்ளிகளின் விவரங்களை நாளை 03.03.2021 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சரிபார்த்து கையொப்பம் இட வேண்டுமாய் சார்ந்த தேர்வுமையத் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை உடன் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Monday, 1 March 2021

 02.03.2021     நினைவூட்டல் - 03  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து   04.03.2021 அன்று மாலை 05.00  மணிக்குள்   குறுந்தகட்டில் பதிவு செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

 02.03.2021  // தேர்தல் பணி மிக மிக அவசரம் //  

இணைப்பில்  காணும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் இன்று (02.03.2021) உடனடியாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேர்தல் பிரிவில் பணியாற்றும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது- ATTACHMENT 

குறிப்பு 

பணியாளர் எவரேனும் விடுவிக்கப்படவில்லை எனில் காரணத்தினை உடனடியாக  இவ்வலுவலகத்தில்  நேரில் கடிதம்  மூலம் விளக்கம் அளிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.