Sunday, 28 February 2021

 01.03.2021   // தேர்தல்2021  - மிக மிக அவசரம்  //

அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின்  கவனத்திற்கு 

தேர்தல் - 2021 நடைத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

01.03.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் விரைந்து  இணைய தளத்தில் விண்ணப்பித்தும் அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு- 1  இணைப்பு - 2

 01.03.2021     நினைவூட்டல் - 02  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய திருத்தம் செய்யப்பட்ட EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று (01.03.2021) மாலை 05.00  மணிக்குள்   குறுந்தகட்டில் பதிவு செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

Friday, 26 February 2021

 27.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Thursday, 25 February 2021

26.02.2021         // மிக மிக அவசரம் // கூடுதல் தகவல் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் ஊக்குவிப்புத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம்  2  நகல்களில் (Nationalized Bank Pass Book Xerox 2 Copy )   இந்நாள் வரை இவ்வலுவலகத்தில்  சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள்  சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் இணைப்பில் உள்ள புதிய படிவத்தில் (Excel Format ) தமிழில் பூர்த்தி செய்து இதுவரை அனுப்பாத பள்ளிகள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2021 பிற்பகல் 02.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 26.02.2021   // நினைவூட்டல் - 02 //    மிக அவசரம் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 26.02.2021     // +2 தனித் தேர்வர்கள்  - பொதுத்தேர்வுகள் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்  /உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

    நடைபெறவிருக்கும் மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன் லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான  இணைப்பில் காணும் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு  தங்கள் சார்ந்த பகுதி தனித்தேர்வர்களுக்கு தகவல் பலகை மூலம்  அறிவுறுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Instructions1    Instructions2 

 25.02.2021  // தனி கவனம்//

கீழ்கண்ட  அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

STUDENT POLICE CADET - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூபாய் 50,000/- க்கான பயனீட்டு சான்று உடனடியாக வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 26.02.2021 க்குள் தனி நபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளி விவரம் 

1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம் 

2 . அரசு மேல்நிலைப்பள்ளி , வள்ளிப்பட்டு

Wednesday, 24 February 2021

25.02.2021   // நினைவூட்டல் - 01 //    மிக அவசரம் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை EMIS மையத்தில் பதிவேற்றம் செய்து விட்டு இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.02.2021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

24.02.2021       // மிக மிக அவசரம் // கூடுதல் தகவல் //  

அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் ஊக்குவிப்புத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம்  2  நகல்களில் (Nationalized Bank Pass Book Xerox 2 Copy )   உடனடியாக வழங்கவேண்டும்.

மேலும் இணைப்பில் உள்ள புதிய படிவத்தில் (Excel Format ) தமிழில் பூர்த்தி செய்து இதுவரை அனுப்பாத பள்ளிகள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.02.2021 பிற்பகல் 02.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Tuesday, 23 February 2021

 24.02.2021     நினைவூட்டல் - 01  // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய EXCEL படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று மாலை 05.00  மணிக்குள்   இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் தட்டச்சு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு (10  11  12  தனித் தனித் தாளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )

 23.02.2021   // தேர்வுகள் //

அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில்  14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட சார்ந்த பள்ளி    உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள்  ஆணையை  அ3 பிரிவு அலுவலரிடம் (24.02.2021) பிற்பகல்  முதல்   தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Monday, 22 February 2021

 23.02.2021    // தனி கவனம் // மிக அவசரம் //

அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளிகள் ( சுய நிதி வகுப்பு பிரிவு நீங்கலாக)   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் வங்கி கணக்கு விவரங்களை உரிய படிவத்தில்  செய்து இன்று மாலை 05.00  மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி  தவறுகள் ஏதும் ஏற்படா வண்ணம் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET  ( அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யவேண்டும்) 

 23.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து 22.02.2021 க்குள்  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT1  ATTACHMENT 2

Sunday, 21 February 2021

 22.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து 22.02.2021 க்குள்  இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும்  இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Friday, 19 February 2021

  19.02.2021     // NMMS  தேர்வுகள்//

   NMMS  தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 

19.02.2021  அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட  தேர்வு மையத்தில் OMRSHEET - களை கட்டுக்களாக கட்டி அனுப்பவேண்டிய படிவங்கள்  இணைப்பில் காணும்  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT1 , ATTACHMENT 2 

குறிப்பு. FORMAT 1 AND 2   இரண்டு நகல் ஒப்படைக்கப்படவேண்டும்  

 19.02.2021  

கீழ்க் கண்ட அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க கலந்தாய்வு நடைபெறுவதால் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்தவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

1. அரசு மேல்நிலைப்பள்ளி வெலக்கல்நத்தம்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி கொரட்டி.

3. அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை.

4. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.

5. அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி,

6. அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர்.

7. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாய்க்கன்பட்டி.

8. அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம்பள்ளி.

19.02.2021  //  மிக மிக அவசரம் (தனிகவனம்) 

 
பீரி மெட்ரிக் மற்றும்  போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC  மாணாக்கர்களின் புதிய (Fresh Application) / புதுப்பித்தல் (Renewal)  விண்ணப்பங்களை இணை தளத்தில் 19.02.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் விவரம் மற்றும்   இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து   வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

 19.02.2021     நினைவூட்டல் - 1  // மிக மிக அவசரம் // 

அனைத்து  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் பயிலும் 9, 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்துதல் கட்டுரை எழுதுதல் / பேச்சுப்போட்டி  போன்ற திறனறி போட்டிகளை மாணவர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடத்திட போட்டிகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள் விவரத்தை இணைப்பில் உள்ள EXCEL FORMAT  இல்   19.02.2021  11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பள்ளிகளிடமிருந்தும் சரியான தகவல் கிடைக்காத காரணத்தால் தொகுப்பறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இனியும் சுணக்கம் காட்டாமல் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் இன்று 19.02.2021 மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1 இணைப்பு - 2  

Thursday, 18 February 2021

 19.02.2021      // மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களில் 01.12.2019 அன்றைய நிலவரப்படி ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த (ஓட்டுநர் உரிமம் ) பணியாளர்கள் இருப்பின் அதன் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியை இன்று 19.02.2021 பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தோர் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 18.02.2021  அனைத்து  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் பயிலும் 9, 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்துதல் கட்டுரை எழுதுதல் / பேச்சுப்போட்டி  போன்ற திறனறி போட்டிகளை மாணவர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடத்திட போட்டிகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்கள் விவரத்தை இணைப்பில் உள்ள EXCEL FORMAT  இல் நாளை 19.02.2021  11.00 மணிக்குள் பூர்த்தி செய்து அதன் நகலை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு இவ்வலுவலகத்தில் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2  

 18.02.2021   // NMMS  அறைக் கண்காணிப்பாளர் விடுவித்தல் //

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

21.02.2021 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் ஆணை சார்ந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.   சார்ந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 18.02.2021     // NR - தேர்வுகள் அவசரம் //   

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள மே - 2021 பொதுத்தேர்விற்கு EMIS  அடிப்படையில் மாணாக்கர்களின்  பெயர் பட்டியல் ( NR)  தயார் செய்யப்பட்டது. இதில் EMIS  இல் உள்ள தகவலுக்கும்  பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்ட விவரங்களுக்கும் வேறுபாடு காணப்படுகிறது. எனவே இணைப்பில் காணும் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் வேறுபாடுகளுக்கான முறையான ஆதாரங்களுடன் அ3 பிரிவு அலுவலரிடம் 2 நகல்களில் 19.02.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 SSLC       +1 HSC 

Wednesday, 17 February 2021

18.02.2021  அனைத்து  அரசு / அரசு நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  -  2020 - 2021 ஆம் கல்வியாண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் - 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  SC/ST/SCC  மாணாக்கர்களின் புதிய (FRESH )  விண்ணப்பங்களை  இன்றே இணைய வழியில் விண்ணப்பித்து 19.02.2021 ஆம் தேதி மாலை 04.00 மணிக்குள் அதன் நகலினை வேலூர் ஆதிதிராவிடர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைய வழியில் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களே அதற்கான முழு பொறுப்பாவார்கள் என்பதை தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு -3 இணைப்பு - 4 இணைப்பு - 5  இணைப்பு -6 Pending list

 18.02.2021      நினைவூட்டல் - 01  // மிக அவசரம்//

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு,

நடப்பு கல்வியாண்டில் (2020 - 2021) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் காணும் ONLINE SHEET இல் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET 

 18.02.2021      நினைவூட்டல் - 01    // தேர்வுகள் // 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நடைபெறும்மார்ச் 2021 இடைநிலைமேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதவுள்ள   பள்ளி மாணாக்கர்களில் அரசுஅரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும்               ( INCLUDING ENGLISH MEDIUM)   SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB  இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு  மிகாமல் இருத்தல் வேண்டும்மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து 19.02.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் இணைப்பில் காணும் படிங்கள் 1, 2 மற்றும் 3 இரண்டு நகல்களில் (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்)  தனிநபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம் நேரில் ஒப்படைக்குமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET படிவம் 1 படிவம் 2 படிவம் 3

குறிப்பு . தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.

Tuesday, 16 February 2021

16.02.2021   அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தைகளின் விவரங்களை EMIS மையத்தில் பதிவேற்றம் செய்து விட்டு இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Annexure 2019-20 & 2020-21) Excel Format ல் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2021 மாலை 04.00 மணிக்குள் அனுப்பி விட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

 16/02/2021    // அவசரம் //

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய வெளியிடப்பட்டுள்ள  பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்த்து செயல்முறைகளில் உள்ள படிவத்தில் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் சார்பான விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் 17.02.2021 பிற்பகல் 12.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை / திருத்தம் / நீக்கம் எதுவும் இல்லை எனில் இன்மை அறிக்கையை தவறாது  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 1 ATTACHMENT 2 

Monday, 15 February 2021

 16.02.2021   அனைத்து  அரசு /  அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம்  - இவ்வலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட  2020 - 2021  ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் தகுதிவாய்ந்த கிராமப்புற பெண் குழந்தையின் விவரங்களை இணைப்பில் உள்ள புதிய படிவத்தில் (Excel Format ) தமிழில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2021 காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 16.02.2021     //  மிக மிக அவசரம் //

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 NMMSS: 

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி நவம்பர் - 2016 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ / மாணவியர்களின் இணைய தளத்தில் பதிவு செய்யாத விண்ணப்பங்கள் (Offline applications) NMMSS கல்வி உதவித் தொகையை தொடர்ச்சியாக  பெற இணைக்கப்பட்டுடள்ள படிவத்தில் தகுதி உள்ளவர்கள் / இல்லாதவர்கள் என இணைப்பில் காணும் படிவத்தில் தனித் தனி படிவமாக பூர்த்தி செய்து  இன்று ( 16.02..2021)  பிற்பகல்  1.00 மணிக்குள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு மற்றும் ONLINE  படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட படிவத்தின்  3 நகலினை “அ5” பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு   படிவம்     ONLINE

 15.02.2021  அனைத்து வகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2021 - 2022  ஆம் கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடபிரிவுகளுக்கு விற்பனை பாடநூல்களாக அச்சிட தேவைப்பட்டியல் 17.02.2021 அன்று 12.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 15.02.2021   அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் விலையில்லா நலத்திட்டங்களான பாடநூல், நோட்டுப்புத்தகம், காலணி, புத்தகபை , கணித உபகரணப்பெட்டி  பெற்று மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இரு நகல்களில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

 15.02.2021     //  மிக அவசரம் //

ஆதிதிராவிடர் நலம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் கிராமபுற பெண் குழந்தைகளுக்க கல்வி ஊக்குவிப்பு தொகை நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கிற்கே திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலரால் வழங்கப்படவுள்ளது. இப்பொருள் சார்பாக கீழ் காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு / அரசு  நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1. இவ்வலுவலக  அ5 பிரிவில் சமர்ப்பிக்கப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்கு விவரம் சரியானது என உறுதிப்படுத்தி கொள்ளவும், 

2. மாணவிகளின் வங்கி கணக்கு விவரம் வழங்காத பட்சத்தில் நடைமுறையில் உள்ள மாணவி / மாணவி தாயார் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக deotpt2015@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதன் நகல் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

3. மாணவிகளின் அஞ்சலக கணக்கு எண்ணிற்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. 

4. மாணவிகளின் விண்ணப்பங்கள் இதுநாள் வரை சமர்ப்பிக்க பள்ளிகள் விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Sunday, 14 February 2021

 15.02.2021  // தனி கவனம் // 

அனைத்து  வகை  அரசு  / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

 அனைத்து வகை பள்ளி மற்றும்  அலுவலகங்களில் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த பின்னர் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

குறிப்பு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு 


Friday, 12 February 2021

  12.02.2021   // தேர்வுகள் //

அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில்  14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட சார்ந்த பள்ளி    உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள்  ஆணையை  அ3 பிரிவு அலுவலரிடம் (12.02.2021) பிற்பகல் முதல்   தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

12.02.2021    // தேர்வுகள்  NR  PENDING SCHOOL  //

     2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல்  தயாரித்தலில் இதுநாள் வரை விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரையின் படி செயல்படுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Thursday, 11 February 2021

 12.02.2021   // NMMS  தேர்வுகள் //

21.02.2021 அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை  திட்டத்தேர்விற்கு  தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15.02.2021 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம்   இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

 

12.02.2021    // தேர்வுகள்  NR  தயாரித்தல் //

     2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்த இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


குறிப்பு: 
1.மாணாக்கர்களின் பெயர் பட்டியல் தயார் செய்ய கடைசி நாள் 18.02.2021. வரையிலான கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விரைந்து மாணாக்கர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2 . பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ரூபாய் 300/- ஐ கட்டணம் செலுத்தவேண்டும் .

 11.02.2021     // அவசரம் //

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு ( NMMSS): 

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி நவம்பர் - 2016 ஆம் ஆண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ / மாணவியர்களின் இணைய தளத்தில் பதிவு செய்யாத விண்ணப்பங்கள் (Offline applications) NMMSS கல்வி உதவித் தொகையை தொடர்ச்சியாக பெற்று வழங்குதல் குறித்த அம்மாணவர்களின் பதிவை புதுப்பித்தலுக்கான ( Renewal) கருத்துருவை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தகுதி உள்ளவர்கள் / இல்லாதவர்கள் என இணைப்பில் காணும் படிவத்தில் தனித் தனி படிவமாக பூர்த்தி செய்து நாளை ( 12.02..2021)  மாலை  4.00 மணிக்குள் deottr@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு மற்றும் ONLINE  படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட படிவத்தின்  3 நகலினை “அ5” பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு   படிவம்     ONLINE

Wednesday, 10 February 2021

 11.02.2021  // தேர்வுகள் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

       நடைபெறும் மார்ச் 2021 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதவுள்ள  பள்ளி மாணாக்கர்களில் அரசு/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும்               ( INCLUDING ENGLISH MEDIUM)   SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB  இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து 15.02.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் இணைப்பில் காணும் படிங்கள் 1, 2 மற்றும் 3 இரண்டு நகல்களில் (முதலாம் /இரண்டாம் ஆண்டு தனி தனி தாளில்)  தனிநபர் மூலம் அ3 பிரிவு அலுவலரிடம் நேரில் ஒப்படைக்குமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET படிவம் 1 படிவம் 2 படிவம் 3

குறிப்பு . தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.