01.02.2021
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( மேல்நிலைக் கல்வி) செயல்முறைள் ந.க.எண். 6451/W3/S1/2021 நாள். 29.01.2021 இன் படி, பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கிட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் காணும் திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சுப் பணியாளர்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வந்து தங்களின் விபரங்களை சரிபார்த்து ஒப்பமிடவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பட்டியலில் பெயர் விடுபட்ட அமைச்சுப் பணியாளர்கள் தங்களின் விபரங்களை உரிய படிவத்தில் நிறைவு செய்து 2 நகல்களில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தத்தமது அலுவலக பணியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2, இணைப்பு - 3