02.06.2020 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு - திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஏழு மையங்களில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற்று இன்று 02.06.2020 மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலை மைய மதிப்பீட்டுப்பணிக்கு இதுவரை வருகை தராத வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை நாளை 03.06.2020 காலை 08.00 மணிக்கு திருப்பத்தூர் தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வாணியம்பாடி, வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மைய மதிப்பீட்டுப்பணியில் பணியேற்க ஏதுவாக பணியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் மதிப்பீட்டு பணிக்கு வருகை தராத ஆசிரியர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கலாகிறது.