Monday, 29 June 2020

30.06.2020  //கோவை தணிக்கை//

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - கோவை தணிக்கை -  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி கணக்குகள் தணிக்கை செய்தல் - கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப்பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம்  மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம் இணைப்பில் உள்ளது . சார்ந்த பள்ளிகள் நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளை நீக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
30.06.2020 

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

கொரோனா  வைரஸ் காய்ச்சல் (  COVID - 19 ) முன்னெச்சரிக்கை  மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

29.06.2020  அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் - இணைப்பில் உள்ள கடிதத்தின்படி 2020-21 ஆம் கல்வியாண்டு முதல்  பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட உள்ளதால் அனைத்து மாணவயர்களுக்கும் (எந்த ஒரு மாணவியரும் விடுபடமால்) ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு எண் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT
29.06.2020  அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும்  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் - 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற ஆதிதிராவிடர் & பழங்குடியின மாணவியர்களுக்கு பெண்கல்வி உதவித்தொகை காசோலை இவ்வலுவலகத்தில் பெற்று செல்லுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் உடன் வரவு வைத்து பயனீட்டு சான்று (Utilization Certificate) மற்றும் பற்றொப்பம் (Aquittance) 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Sunday, 28 June 2020

29.06.2020    //தேர்வுகள் அவசரம்//

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு 

 தேர்வு பத்தாம் வகுப்பு ,11 ஆம் வகுப்பு  மற்றும் 11 ஆம் வகுப்பு  ARREARS மாணவர்களுக்கான வருகை  பதிவேடு நாட்களை இணைப்பில் கண்ட படிவத்தில்  பூர்த்தி செய்து  திருப்பத்தூர்  தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் 30.06.2020 அன்று காலை 09.00 மணிக்கு நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
குறிப்பு . 11 ஆம் வகுப்பு  ARREARS மாணவர்களுக்கு 2018 - 2019  ஆம் ஆண்டிற்கான வருகை  பதிவேட்டை ஒப்படைக்கவும். ATTACHMENT 

Friday, 26 June 2020

26.06.2020

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் நாளை  27.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை  (27.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்.

2. செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்,

3. அரசு வனப்பள்ளி, புதூர் நாடு.

4. அரசு உயர் நிலைப்பள்ளி, புலியூர்.

5. அரசு உயர் நிலைப்பள்ளி, நெல்லிவாசல்.
.

 
26.06.2020   // தேர்வு பணி//

தேர்வுகள் - முகாம் பணி - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இணையதள மதிப்பெண் பதிவிடுதல் பணிக்கு  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களை   29.06.2020 அன்று காலை 09.00 மணிக்கு திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் பணியேற்கும் வகையில் பள்ளிப்பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1. ATTACHMENT2
26.06.2020   //மிக மிக அவசரம்//

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்  2018 - 2019, 2019 - 2020 க்கும் இடையே  மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறைவுக்கான காரணம் எழுத்து மூலமாக தெரிவிக்கப்படல் வேண்டும் -2019-2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST /SCC  மாணவர்களுக்கு ப்ரீ  மெட்ரிக் / போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து 30.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறும் காலதாமதத்திற்கான காரணத்தை எழுத்து வடிவில் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்திற்கு அளித்து விட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT 

Thursday, 25 June 2020

25.06.2020

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் நாளை  26.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை  (26.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு உயர் நிலைப்பள்ளி, மண்டலநாயனகுண்டா.

2. அரசு உயர் நிலைப்பள்ளி, கும்மிடிகாம்பட்டி,

3. அரசு உயர் நிலைப்பள்ளி, பெரியகரம்.

4. அரசு உயர் நிலைப்பள்ளி, கிழக்குபதனவாடி.

5. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.

6. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.

7. அரசு  மேல்நிலைப்பள்ளி, கசிநாயக்கன்பட்டி.

8. அரசு  உயர்நிலைப்பள்ளி,அன்னாண்டப்பட்டி.

9. அரசு  உயர்நிலைப்பள்ளி, அசோக்நகர்.

10. அரசு  உயர்நிலைப்பள்ளி, தோரணபதி.

11. அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கநாதவலசை.

12. அரசு மேல் நிலைப்பள்ளி, குரும்பேரி.

13. அரசு  மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.

14. அரசு  மேல் நிலைப்பள்ளி, மட்றப்பள்ளி.

15. அரசு  மேல் நிலைப்பள்ளி பேராம்பட்டு.

16. அரசு மேல் நிலைப்பள்ளி விசமங்கலம்.

17. ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி விசமங்கலம்.

18. அரசு  உயர்நிலைப்பள்ளி செவ்வாத்தூர்.

19. அரசு உயர் நிலைப்பள்ளி ஆதியூர்.

20. அரசு   உயர்நிலைப்பள்ளி எலவம்பட்டி.

21. அரசு  மேல்நிலைப்பள்ளி நத்தம்.

22. அரசு  மேல்நிலைப்பள்ளி குனிச்சி.

23. அரசு  மேல்நிலைப்பள்ளி சுந்தரம்பள்ளி.

24. அரசு  மேல்நிலைப்பள்ளி பெரியகண்ணாலப்பட்டி.

25. அரசு  மேல்நிலைப்பள்ளி பால்நாங்குப்பம்.

26. அரசு  உயர் நிலைப்பள்ளி அச்சமங்கலம்.


Wednesday, 24 June 2020

25.06.2020

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் இன்று  25.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று  (25.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.

2. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை,

3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

4. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

5. அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி.

6. அரசு  மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம்.

7. அரசு  மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி.

8. அரசு  உயர்நிலைப்பள்ளி,சந்திரபுரம்.

9. அரசு  உயர்நிலைப்பள்ளி, திரியாலம்.

10. அரசு  உயர்நிலைப்பள்ளி, அக்ராகரம்.

11. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம்.

12. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாபட்டு.

13. அரசு  மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர்.

14. அரசு  உயர்நிலைப்பள்ளி, சின்னகம்மியம்பட்டு.

15. அரசு  உயர்நிலைப்பள்ளி பாரண்டம்பள்ளி.

16. அரசு உயர்நிலைப்பள்ளி வேட்டப்பட்டு.

17. அரசு மேல்நிலைப்பள்ளி ஜெயபுரம்.

18. அரசு   உயர்நிலைப்பள்ளி சின்னமூக்கனூர்.

19. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜோலார்பேட்டை.

20. அரசு   உயர்நிலைப்பள்ளி N.M.கோயில்.

21. டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி ஜோலார்பேட்டை.




.
24.06.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

COVID - 19 - STANDARD OPERATING PROCEDURE ON PREVENTIVE MEASURE TO CONTAIN SPREAD OF COVID -19 IN OFFICES IN THE STATE - ORDERS - COMMUNICATED    ATTACHMENT 
24.06.2020 நினைவூட்டல் 1


 தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் படி தகவல்  கோரும் மனு

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் கண்ட கடிதத்தில் மனுதாரர் கோரும் தகவலை அன்னாரின் முகவரிக்கு  உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டு  அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMEMT1ATTACHMEMT2.
24.06.2020   // நினைவூட்டல் 1 //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ( SPECIAL CASH INCENTIVE ) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1 . ATTACHMENT2

Tuesday, 23 June 2020

23.06.2020

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 ICAI COMMERCE QUIZ- 2020 - STUDENTS PARTICIPATION IN " A TALENT SEARCH TEST"- FOR STUDENTS IX TO XII - LAST DATE FOR REGISTRATION IS 26 TH JUNE 2020 
ATTACHMENT 
23.06.2020 
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பாடநூல்கள்  மற்றும்  நோட்டுப்புத்தகங்கள் நாளை  24.06.2020  அன்று கீழ் கண்ட  உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக வழங்கப்படும். அனைத்தும் பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (24.06.2020) காலை 10.00 மணி முதல் தயார்நிலையில் இருக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. அரசு உயர்நிலைப்பள்ளி, கணவாய்புதூர்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை

3. அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு.

4. அரசு  மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு.

5. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு.

6. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.

7. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.

8. அரசு  மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.

9. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மிட்டூர்.

10. அரசு  மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்.

11. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.

12. அரசு உயர்நிலைப்பள்ளி, பெருமாம்பட்டு.

13. அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம்.

14. அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம்.

15. அரசு  உயர்நிலைப்பள்ளி அருந்ததியர் காலனி.

16. அரசு உயர்நிலைப்பள்ளி கொடுமாம்பள்ளி.

17. அரசு உயர்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்.

18. அரசு   உயர்நிலைப்பள்ளி ஜம்மனபுதூர் பூங்குளம்.

19. அரசு உயர்நிலைப்பள்ளி வெங்களாபுரம்.




23.06.2020  // மிக மிக அவசரம்//

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்  பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக 06.07.2020 க்குள் MHRD இணையதளத்தில் https:/mhrd.gov.in மற்றும் http:/nationalawardstoteachers.mhrd.gov.in  என்ற முகவரியில் நேரடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT   ATTACHMENT
23.06.2020                               // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் (02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று) 31.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்கள் /ஓய்வூதியப் பணப்பலன்கள் பெற்று வழங்கிய விவரம் - கோருதல்  ATTACHMENT

Monday, 22 June 2020

22.06.2020    // மிக மிக அவசரம் //
 ..NATIONAL COMMISSION FOR PROTECTION OF CHILD RIGHTS ..

  MINORITY SCHOOL  உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளி  கல்வி  இயக்குநர் அவர்களின்  கடிதத்தின் படி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து   நாளை( 23.06.2020) காலை 10.00 மணிக்குள்   3 நகல்களில் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
22.06.2020
  தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் படி தகவல்  கோரும் மனு

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் கண்ட கடிதத்தில் மனுதாரர் கோரும் தகவலை அன்னாரின் முகவரிக்கு  உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டு  அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Saturday, 20 June 2020

  // தேர்வுகள்//
பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  கீழ்க்காணும் இடங்களில் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் உரிய நேரத்தில் தவறாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என  அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு   Format1 SSLC      Format 2 HSE   Format 3 Arrear  Instructions sslc 11th
இடம்  தோமினிக் சேவியோ மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர்
BRING TWO SETS OF FORM 1 ,FORM 2 & FORM 3 (ONE IS FOR OFFICE USE AND ANOTHER ONE IS TO ACKNOWLEDGE AND GIVE IT TO THE RESPECTIVE SCHOOL)

வருகை புரிபவர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வருமாறும். பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  
21.06.2020   // தேர்வுகள்//
 மார்ச்/ ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - இரத்து செய்யப்பட்டது - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை பள்ளிகளிலிருந்து பெறுதல் - இணைப்பில் கண்ட  தலைமை ஆசிரியர்கள்,  பட்டதாரி ஆசிரியர்கள்,  ஆய்வக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் ஆகியவர்களை  உடனடியாக விடுவித்து  22.06.2020 அன்று காலை 09.00 மணிக்கு திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT       ATTACHMENT   ATTACHMENT 
20.06.2020   

         திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 
                   ந.க.எண். 1023 /ஆ3/2020                       நாள். 20.06.2020

பொருள் : பள்ளிக் கல்வி - மாற்றுப் பணி - 2020 - 2021  ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள்  பள்ளிகளுக்கு  விநியோகம் செய்ய இணைப்பில் உள்ள ஆய்வக உதவியாளர்களை விடுவித்து அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் - சார்பு.

பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 61710/இ/இ3/2019    நாள். 16.06.2020.

                                                                           **********
       
                பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க  2020 - 2021  ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள்  பள்ளிகளுக்கு  விநியோகம் செய்ய இணைப்பில் உள்ள ஆய்வக உதவியாளர்கள்  22.06.2020 காலை 09.00 மணிக்கு  திருப்பத்தூர் மாவட்ட அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  எனவே  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  கீழ்காணும்  பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 


1. ஜெயமோகன் ஆ.உ, அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தாண்டப்பட்டி.

2. தமிழரசன்        ஆ.உ.  அரசு மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு.

3. சமரன்                 ஆ.உ.   அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகம்மியம்பட்டு .


                                                                                                                //  ஒப்பம்//
                                                                                          மாவட்டக் கல்வி அலுவலர்,
                                                                                                       திருப்பத்தூர்.


Friday, 19 June 2020

19.06.2020.   அனைத்து அரசு / அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு .

SPECIAL CASH INCENTIVES TO REDUCE DROPOUTS SCHEME - +2 STUDENTS FOR THE ACADEMIC YEAR 2019 - 2020 - BANK DETAILS TO BE UPDATED IN EMIS WEBSITE.
ATTACHMENT 
19.06.2020   // தேர்வுகள்//
 மார்ச்/ ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - இரத்து செய்யப்பட்டது - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை பள்ளிகளிலிருந்து பெறுதல் - கீழ்கண்ட  தலைமை ஆசிரியர்கள், முதுகலை/ பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் , ஆய்வகஉதவியாளர்கள், பதிவறை எழுத்தர், ஆகிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை  உடனடியாக விடுவித்து  22.06.2020 அன்று காலை 09.00 மணிக்கு திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Thursday, 18 June 2020

18.06.2020          // மிக அவசரம் //  

சிறுபான்மை  உயர் /மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இத்துடன் இணைத்துள்ள NATIONAL  COMMISSION FOR PROTECTION OF CHILD RIGHTS ( NCPCR)  படிவத்தை பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT  

Tuesday, 16 June 2020

16.06.2020   அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி /வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் காணும் செயல்முறைகளில் தகவல் அறியும் உரிமை  சட்டம் 2005 ன் கீழ் கோரியுள்ள விவரங்களை மனுதாரருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday, 11 June 2020

11.06.2020  

அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு


பள்ளிக் கல்வி - 2019 /2020  ஆம் கல்வியாண்டு - 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்தது - அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( சிபிஎஸ்சி பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகை பதிவேட்டினை  இணைப்பில் உள்ள ஒன்றியம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள  தலைமை ஆசிரியர்களிடம் நாளை 11.06.2020 காலை 10.00 மணி முதல் திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும்  வருகை பதிவேட்டினை ஒப்படைத்தமைக்கு ஒப்புகைசீட்டு நேர்முக உதவியாளர் / பள்ளித் துணை ஆய்வரிடம் கையொப்பம் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.  ATTACHMENT  - 1  ATTACHMENT - 2  ATTACHMENT - 3    படிவம்     (2  நகல்களில்)


குறிப்பு -  1.வருகைப் பதிவேட்டினை ஒவ்வொரு பக்கத்தையும்  பூர்த்தி செய்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்பந்தத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

2. மாத வாரி வருகை சுருக்கம் 2  நகல்கள் 


Wednesday, 10 June 2020

11.06.2020  அனைத்து   வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை ONLINE வகுப்புகள் சார்ந்து இணைப்பில் கண்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.ATTACHMENT   

Tuesday, 9 June 2020

09.06.2020      // மிக அவசரம் //

அனைத்து  உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி - 2019 - 2020  ம் கல்வியாண்டில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் பணியாற்றிய  பட்டதாரி ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குநர் நிலை - 2, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்று 31.05.2020 வரை மறுநியமன அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் சார்பாக ஓய்வூதிய கருத்துருக்கள்/பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முடிவுத் தொகை  மாநில கணக்காயர் /அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பிய  விவரங்கள் இத்துடன் இணைத்துள்ள படிவங்களில் பதவி வாரியாக தனித் தனி படிவத்தில் பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 02.06.2019 முதல் 01.05.2020 வரை எவரும் ஓய்வு பெறவில்லை எனில் இன்மை அறிக்கையினை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 
09.06.2020     
அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

இன்று 09.06.2020  நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. 

Monday, 8 June 2020

09.06.2020 அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

W.P.No.882 மற்றும் W.A.No.158/2016 ன் மீதான தீர்ப்பு - 01.04.2003 க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு எடுத்து கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இணைப்பில் கண்ட  படிவத்தில் பூர்த்தி செய்து 09.06.2020 பிற்பகல் 01.00 மணிக்குள் மின்னஞ்சலிலும் கையொப்பம் இட்ட நகல் 09.06.2020  அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பகுதி நேர பணிக்காலத்தில் பணிபுரியாத தொழிற்கல்வி ஆசிரியர்கள் இருப்பின் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT

Sunday, 7 June 2020

தேர்வுகள் அவசரம் -
 திருப்பத்தூர் தோன்மினிக் சோவிய மேல்நிலைப் பள்ளியில் 08/06/2020 அன்று நடைபெறயிருந்த முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,மற்றும் துறை அலுவலர்களுக்கான கூட்டம்  09.06.2020 அன்று வாிசை எண் 1 முதல் 70 வரை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருப்பத்தூர் தோன்மினிக் சோவிய மேல்நிலைப் பள்ளியிலும் வாிசை எண் 71 முதல் 139 வரை  பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை 
திருப்பத்தூர் $ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும் என   தெரிவிக்கப்படுகிறது  இணைப்பு
தேர்வுகள் அவசரம் - நடைபெறவுள்ள ஜுன் - 2020.  10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு விடுப்பட்ட மாணவர்களின் தேர்வுகளுக்கும் இணைப்பில் உள்ள  உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாகவும், துறை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே  இவர்களுக்கான கூட்டம் 09.06.2020 அன்று வாிசை எண் 1 முதல் 70 வரை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருப்பத்தூர் தோன்மினிக் சோவிய மேல்நிலைப் பள்ளியிலும் வாிசை எண் 71 முதல் 139 வரை  பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை 
திருப்பத்தூர் $ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும் என   தெரிவிக்கப்படுகிறதுஇணைப்பு

Friday, 5 June 2020

05.06.2020    // தேர்வுகள் அவசரம்//

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -   இணைப்பில் கண்ட  அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்  வேலூர் அவர்களின்   10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -  மாற்றுத் திறனாளிகள் சலுகை வழங்குதல் ATTACHMENT- 1 ATTACHMENT - 2  ATTACHMENT- 3
05.06.2020  அனைத்து அரசு /நிதியுதவி / உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (IFHRMS)  - 01.07.2020 முதல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது - தொடர்பான அறிவிப்பு  ATTACHMENT- 1 ATTACHMENT - 2

Wednesday, 3 June 2020

03.06.2020  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் பணி – ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குதல் –  கீழ்கண்ட  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை முகாம் பணிக்காக ( 05-06-2020  CE AND SO ) (06-06-2020 AE ) பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT,-1   ATTACHMENT- 2

03.06.2020    அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
 
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் துணைத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முகக் கவசங்கள் நாளை 04.06.2020  முதல் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட உள்ளதால் இணைப்பில்  கண்ட தேவைப்பட்டியல் படிவத்தை பூர்த்தி செய்து உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT

கீழ் கண்ட பொறுப்பாசிரியர்களை உரிய  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளிப் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

1.எஸ்.மகேந்திரன் இ.நி.ஆ.வ.உ.நி.பள்ளி,  நெல்லிவாசல்.
2. கே.இளையராஜா உ.க.ஆ  அரசு மே.நி.பள்ளி குனிச்சி
3. சி.சுப்பிரமணியம்  ப.ஆ. அரசு மே.நி.பள்ளி குனிச்சி
4. ஜி.குலோத்துங்கன் ப.ஆ. அரசு மே.நி.பள்ளி மிட்டூர்.
5. எம்.தண்டபாணி உ.க.ஆ. அரசு மே.நி.பள்ளி மட்றப்பள்ளி. 

Tuesday, 2 June 2020

03.06.2020  //தேர்வுகள் அவசரம்//
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு   JUNE -2020 (  மார்ச் 2020 ) - தங்கள் பள்ளியில்    பயிலும் மாணவர்களின்  விவரங்களை இணைப்பில் உள்ள   ஆன் லைன் சீட்டில் ( ON LINE SHEET) ல் இன்றே பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ATTACHEMENT 
02.06.2020

அனைத்து வகை அரசு/நிதியுதவி / மெட்ரிக் / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

கொரானா வைரஸ் -19-   கிருமி நாசினி  தெளிப்பதற்கு ஏதுவாக  நாளை 03.06.2020 முதல் 05.06.2020 வரை  3 நாட்களும் அனைத்து வகை பள்ளிகளும் திறந்து வைத்திருக்குமாறு  பள்ளியில் தலைமை ஆசிரியர் வருகை தருமாறும்  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .துப்புரவு சார்பாக பள்ளிகளைப்பார்வையிட வரும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 மேலும் SSLC -  2020 அரசுப்பொதுத் தேர்வுக்கான மையங்களாக  நடுநிலைப்பள்ளியிலும் செயல்படுத்தப்படுவதால் நடுநிலைப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகளின் தூய்மை, மின் வசதி , கழிப்பிட வசதி , தளவாட வசதி போன்றவை குறித்து அறிக்கை வழங்கிடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 1 June 2020

02.06.2020 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு - திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஏழு மையங்களில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் விடைத்தாட்கள் மதிப்பீட்டு பணியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற்று இன்று 02.06.2020 மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலை மைய மதிப்பீட்டுப்பணிக்கு இதுவரை வருகை தராத வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை நாளை 03.06.2020 காலை 08.00 மணிக்கு திருப்பத்தூர் தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வாணியம்பாடி, வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மைய மதிப்பீட்டுப்பணியில் பணியேற்க ஏதுவாக பணியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் மதிப்பீட்டு பணிக்கு வருகை தராத ஆசிரியர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கலாகிறது.
01.06.2020  // தேர்வுகள் அவசரம்//

 அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

 COVIT - 19 -   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு   JUNE -2020 (  மார்ச் 2020 ) - தங்கள் பள்ளியில்  பணிபுரியும்  பட்டதாரி ஆசிரியர்கள் /  பயிலும் மாணவர்கள்  வெளி மாவட்டங்கள் / வெளி மாநிலங்களில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள   ஆன் லைன் சீட்டில் ( ON LINE SHEET) ல் இன்றே பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
 ON LINE SHEET 1 , ON LINE SHEET 2