21.05.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோவிட் - 19 ஊரடங்கு உத்திரவு காரணமாக வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டத்தில் எவரேனும் தங்கி இருந்தால் அதன் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள EXCEL படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (22.05.2020) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ( deottr@nic.in ) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும் மேற்காணும் தகவல்கள் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 23.05.2020 க்குள் பணிந்தனுப்ப கோரப்பட்டுள்ளதால் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி அனுப்புமாறும் , படிவங்களில் எண்ணிக்கை மட்டுமே கோரப்பட்டுள்ளதால் காலதாமதம் தவிர்த்து அனுப்ப அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இது மிகவும் அவசரம்