15.05.2020
அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
1. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின் பெயரில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜமாபந்தி முறையில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் ( சாதி/ வருமானம் / இருப்பிடம் ) வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. ஜமாபந்தி நடைபெறும் மையங்களில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களுக்கு மேற்கண்ட சான்றிதழை பெற்று தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான மின்கட்டண தேவை பட்டியல் விவரத்தினை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்