Tuesday, 28 January 2020

28.01.2020  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,


தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் -      ஜனவரி 30 ஆம் நாளன்று          ( 30.01.2020)  உலகம் முழுவதும்  “ உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ” ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று இந்த ஆண்டும் வரும் ஜனவரி 30 ஆம் நாளன்று காலை இறைவணக்கக் கூட்டத்தின் போது அனைத்து வகை பள்ளிகளிலும்  இத்துடன் இணைத்துள்ள  கடிதத்தில் உள்ள ஸ்பார்ஷ் உறுதி மொழி எடுக்கவும், தொழுநோய் பற்றிய வினா விடைகள் வாசிப்பு போன்றவற்றை மேற்கொள்ளவும்  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சிறப்பு இறைவணக்க கூட்டம் நடத்திய அறிக்கையினை  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், வேலூர் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழு நோய்) அவர்களுக்கும் பணிந்தனுப்பி வைக்கத் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT -2, ATTACHMENT - 3, ATTACHMENT - 4