Thursday, 30 January 2020

30.01.2020
 திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
               ந.க.எண் .151/அ5/2020  நாள் 30.01.2020
 இணைப்பில் கண்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி JRC  போட்டிகள் பள்ளி  அளவில் நடத்தப்பட்டு கல்வி மாவட்ட அளவிளான போட்டிகள் திங்கட்கிழமை (03.02.2020 ) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர், இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளதுஅன்றே போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு 04.02.2020   அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி SSA  அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கேற்றவாறு மாணவர்களை தயார் படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
30.01.2020
 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
01.12.2019 நிலவரப்படி அடிப்படை பணியிலிருந்து பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் கோரி பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காண் கருத்துருக்களை பரிசீலனை செய்து  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கு தேர்ந்தோர் பட்டியல் இத்துடன் இணைத்து  அனுப்பலாகிறது.  இத்தேர்ந்தோர் பட்டியலில் எவரது பெயரும் விடுப்பட்டிருப்பின் அவர்கள் சார்பான கருத்துருக்களை  06.02.2020 க்குள்  அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  பின்னர் எவரது பெயரேனும் விடுப்பட்டுள்ளது என கடிதம் பெற்றால் சார்ந்த அலுவலர்/ தலைமை ஆசிரியர்  முழு பொறுப்பேற்க நேரிடும் என  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Wednesday, 29 January 2020

29.01.2020
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
  30.01.2020 அன்று தீண்டாமை  தினத்தை  முன்னிட்டு உறுதி  மொழி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ATTACHMENT 

Tuesday, 28 January 2020

28.01.2020  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,


தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் -      ஜனவரி 30 ஆம் நாளன்று          ( 30.01.2020)  உலகம் முழுவதும்  “ உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ” ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அதே போன்று இந்த ஆண்டும் வரும் ஜனவரி 30 ஆம் நாளன்று காலை இறைவணக்கக் கூட்டத்தின் போது அனைத்து வகை பள்ளிகளிலும்  இத்துடன் இணைத்துள்ள  கடிதத்தில் உள்ள ஸ்பார்ஷ் உறுதி மொழி எடுக்கவும், தொழுநோய் பற்றிய வினா விடைகள் வாசிப்பு போன்றவற்றை மேற்கொள்ளவும்  அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் /உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சிறப்பு இறைவணக்க கூட்டம் நடத்திய அறிக்கையினை  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், வேலூர் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழு நோய்) அவர்களுக்கும் பணிந்தனுப்பி வைக்கத் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT -2, ATTACHMENT - 3, ATTACHMENT - 4
28.01.2020
  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ) / இடைநிலைக்கல்வி - வினாத்தாள் கட்டமைப்பு இன்மை சார்பாக  இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பின்பற்ற  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
28.01.2020
  BIOMETRIC  வருகைப்பதிவேடு 22.01.2020  அன்று  இணைப்பில் உள்ள  பள்ளிகள் BIOMETRIC  வருகைப்பதிவேட்டில் பதியப்படாமல் உள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இதற்கான உரிய விளக்கம் அளிக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள் 

Monday, 27 January 2020

28.01.2020      // நினைவூட்டல் //

தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 
29.01.2020 அன்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான    வழிகாட்டுதல் நிகழ்ச்சி காலை 09.00 மணியளவில் திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ / மாணவியர்களும்  தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை உரிய பாதுகாப்போடு ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய பள்ளிகள் விவரம்
  
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர். 
4.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
5.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
6. அரசு  மேல்நிலைப்பள்ளி,  ஜெயபுரம்
7. அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் 
8 . அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி 
9. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம். 
10. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
11 . IVN  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
12. IVN  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
13.அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
14. அரசு பெண்கள் ( ஸ்ரீமீனாட்சி) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
15. அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம். 
18. குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் .
19. YMCA   மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
20. ஸ்ரீவிஜயசாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
21. டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்களாபுரம் .
22. மேரி இமாகுலேட் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
23. CSI  பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
28.01.2020  அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெற உள்ள மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு, தொடர்பான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதத்திற்கிணங்க செயல்படும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
27.01.2020  // மிக அவசரம் // தனி கவனம் //

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெறாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் விவரம் 29.01.2020 அன்று மாலை 4.00 மணிக்குள் இணைப்பில் கண்டுள்ளவாறு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்ATTACHMENT 


Sunday, 26 January 2020

27.01.2020  அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

08.01.2020 அன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் Awards for Enterprise Development and Promotion of Brand MSME அவர்களால் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வங்கி கணக்கு எண், விலாசம்  மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 28.01.2020  பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக தட்டச்சரிடம் வழங்க தெரிவிக்கலாகிறது.  
27.01.2020    // மிக அவசரம் // 

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

IFHRMS  - பயிற்சி  

நாளை காலை 10.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு பூங்கா நிதியுதவி உயர்நிலைப்பள்ளியில் IFHRMS  ஊதியப் பட்டியல்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பயிற்சியில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / கணினி தெரிந்த ஆசிரியர் கலந்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின் நகல் மற்றும்  சென்ற மாத சம்பளப் பட்டியலின் நகல் மற்றும்  மடிகணினி உடன் எடுத்துவர தெரிவிக்கலாகிறது. மேற்கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

Friday, 24 January 2020

25.01.2020
 31 வது சாலை பாதுகாப்பு வார விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற இணைப்பில் உள்ள மாணவர்களுக்கு கேடயம் நாளை 26.01.2020 அன்று குடியரசு தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் காலை 09.00 மணிக்கு ஆயுத படை மைதானத்தில்  (பாச்சல்  பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி ) வழங்கப்படவுள்ளது. மாணவர்கள்  தகுந்த பொறுப்பாசிரியர் உதவியுடன் தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT
24.01.2020
 அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 இணைப்பில் காணும்  திருப்பத்தூர் உதவி   கருவூல அலுவலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
24.01.2020               //தேர்வுகள் அவசரம்//
 பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,
மார்ச் 2020 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மைய பட்டியல் தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதவுள்ள இணைப்புபள்ளிகளில் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்துடன் 25.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் தேர்வு மைய தலைமையாசிரியர்கள்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு  வருகை புரிந்து சரிபார்த்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் முத்திரையுடன் வருகைபுரியும்மாறும், வேறுநபரை அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தேர்வு மையத்திற்கான சரிபார்ப்பு பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் தகவல்கள் 27.01.2020 அன்று சென்னை அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் தனி கவனம் செலுத்தி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
கூட்டம் நடைபெறும் இடம்: மாவட்டக்கல்வி அலுவலகம் , திருப்பத்தூர்
நாள் : 25.01.2020
நேரம்: காலை 11.00 மணி

Thursday, 23 January 2020

23.01.2020   அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)  உடனடியாக அனுப்பி விட்டு அதன் நகலினை நாளை 24.01.2020  மாலைக்குள்  இவ்வலுவலக  அ3 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2  ATTACHMENT - 3
23.01.2020   அனைத்து  10 ம் வகுப்பு  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள மார்ச் - 2020 பத்தாம் வகுப்பு தேர்வுக்கான செய்முறைத் தேர்வுக்கு  தேவையான எழுதுப் பொருட்களை  30.01.2020 அன்று தேர்வுகள் ஒருங்கிணைப்பு மையமான திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தேதியில் தங்கள் தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுப்பொருட்களை இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியாக கணக்கீடு செய்து உரிய பணியாளரின் கையொப்பத்தினை சான்றொப்பம் செய்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Wednesday, 22 January 2020

23.01.2020    அனைத்து  அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவுதலை கண்காணிக்கும் பொருட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 5 நகல்களில் 30.12.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படாத காரணத்தால் தொகுப்பறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே கீழ் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 1. கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் உரியவாறு
      இருப்பு  பதிவேட்டில் பதிவுசெய்த விவரம் நகல்
2 . படிவம்  1 முதல் 11 வரை( Technical Specification Computers and accessories Formats)
3 . தலைமை ஆசிரியர் சான்று
4 . உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் புகைப்படம் 

ATTACHMENT   ATTACHMENT  ATTACHMENT 

1. அ.உ.நி.ப.மண்டல நாயனகுண்டா
2. அ.உ.நி.ப. கும்மிடிகாம்பட்டி
3. அ.உ.நி.ப. தோரணம்பதி
4. அ.உ.நி.ப பெரியகரம்
5. அ.மே.நி.ப. கொரட்டி
6. அ.மே.நி.ப. குனிச்சி
7. அ.மே.நி.ப.கசிநாயக்கன்பட்டி
8. அ.மே.நி.ப.சுந்தரம்பள்ளி
9. அ.மே.நி.ப.பேராம்பட்டு
10.அ.ம.மே.நி.ப.கெஜல்நாயக்கன்பட்டி
11. அ.ம.உ.நி.ப. மிட்டூர்
12. அ.உ.நி.ப.என்.எம்.கோயில்
13. அ.ம.மே.நி.ப. மடவாளம்,
14.அ.மே.நி.ப.பொம்மிகுப்பம்,
15. அ.மே.நி.ப.பூங்குளம்,
16. ஆதி திராவிடர் நலப்பள்ளி ஜடையனூர்,
17. அ.உ.நி.ப.பெரியகுரும்பர்தெரு,
18. அ.உ.நி.ப.கொத்தக்கோட்டை,
19.அ.உ.நி.ப. மதனாஞ்சேரி,
20. அ.உ.நி.ப. புலியூர்,
21. அ.ஆ.மே.ப.ஆலங்காயம்,
22. அ.மே.நி.ப.வெள்ளக்குட்டை,
23. அ.உ.நி.ப.சந்திரபுரம்,
24. அ.உ.நி.ப.திரியாலம்,
25. அ.உ.நி.ப.சின்னகம்மியம்பட்டு,
26. அ.உ.நி.ப.வேட்டப்பட்டு,
27. அ.உ.நி.ப.பாரண்டப்பள்ளி,
28. அ.உ.நி.ப. நெக்குந்தி,
29. அ.உ.நி.ப.அசோக் நகர்,
30. அ.உ.நி.ப. கோணப்பட்டு,
31. அ.மே.நி.ப.பொன்னேரி,
32. அ.மே.நி.ப.மல்லப்பள்ளி,
33. அ.மே.நி.ப. தாமலேரிமுத்தூர்,
34. அ.மே.நி.ப. அத்தனாவூர்,
35. அ.மே.நி.ப. ஜெயபுரம்,
36. அ.மே.நி.ப. கேத்தாண்டப்பட்டி,

23.01.2020   அனைத்து வகை  அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS - 2019 - 2020 கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் - கல்வி தகவல் மேலாண்மை மைய இணைய தளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்குமான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல் - சார்பு. கால அட்டவணை பகுதியாக உள்ளீடு செய்த மற்றும் கால அட்டவணை உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இன்று 23.01.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT

Tuesday, 21 January 2020

21.01.2020
   தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 
 29.01.2020 அன்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான    வழிகாட்டுதல் நிகழ்ச்சி காலை 09.00 மணியளவில் திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ / மாணவியர்களும்  தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை உரிய பாதுகாப்போடு ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய பள்ளிகள் விவரம்
  
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம். 
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர். 
4.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
5.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.
6. அரசு  மேல்நிலைப்பள்ளி,  ஜெயபுரம்
7. அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் 
8 . அரசு உயர்நிலைப்பள்ளி அண்ணான்டப்பட்டி 
9. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம். 
10. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
11 . IVN  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
12. IVN  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
13.அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
14. அரசு பெண்கள் ( ஸ்ரீமீனாட்சி) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
15. அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தகரம். 
18. குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் .
19. YMCA   மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
20. ஸ்ரீவிஜயசாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர். 
21. டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்களாபுரம் .
22. மேரி இமாகுலேட் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
23. CSI  பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.


21.01.2020
அனைத்து  வகை நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலை/ மெட்ரிக்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின்  கவனத்திற்கு
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு  பள்ளி அளவில் 22.01.2020 அன்று அட்டவணையில் கண்டுள்ள   போட்டிகளை  வகுப்பு வாரியாக  நடத்தி அதில் பள்ளி அளவில் முதல் இடங்களை பெறும் மாணவர்களை மட்டும்  திருப்பத்தூர் வருவாய்  மாவட்ட அளவில்,   திருப்பத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா  நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் 23.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா  போட்டியில் மாணவர்களை   பொறுப்பாசிரியர்  உதவியுடன் தகுந்த பாதுகாப்போடு  கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT  ATTACHMENT 

வ.எண்
வகுப்புகள்
நடத்தப்படவேண்டிய போட்டிகள்
1
6 ஆம் வகுப்பு முதல் 8  ஆம் வகுப்பு வரை
 1.சிறந்த சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி
2. சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த ஒவியப்போட்டி
3 . பேச்சுப் போட்டி
4. கட்டுரை போட்டி

2
9 ஆம் வகுப்பு முதல்  10 ஆம் வகுப்பு வரை
3
11 ஆம் வகுப்பு முதல்  12  ஆம் வகுப்பு வரை
  பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் 
1. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
2. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி.
3. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
4. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, இளவம்பட்டி.
5. தலைமை ஆசிரியர்  ஸ்ரீராமகிருஷ்ணா  நிதியுதவி மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் 
  

Monday, 20 January 2020

21.01.2020
அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர்   மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி /மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண / சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படைப்பயிற்சி முகாம் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் 24.01.2020 முதல் 30.01.2020 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. 

மேற்படி பயிற்சி முகாமில் சாரணர் மற்றும் சாரணியர் (1+1) பிரிவுக்கு தனித்தனியே ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும்.


திருப்பத்தூர் கல்வி மாவட்டம் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் -           ( அடிப்படை பயிற்சி மட்டும்)

இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி , மேல்பட்டி
நாள்   :  24.01.2020 முதல் 30.01.2020 வரை (7 நாட்கள் )
பயிற்சி கட்டணம் : 1500/
பதிவு நாள் : 21.01.2020 மாலை 05.00 மணிக்குள்
பதிவு செய்யும் இடம் :  திரு.கோ.பாபு, வாணியம்பாடி  கல்வி மாவட்ட செயலாளர் , 9585888070




20.01.2020                மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                             ..எண். 075/2/2020         நாள்.  20.01.2020


கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

1.   அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
2. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
3. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

Sunday, 19 January 2020

20.01.2020  அனைத்து வகை  பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

Pariksha Pe Charcha 2020 - தேர்வு பற்றிய கலந்துரையாடல் - 20.01.2020 காலை  10.30  மணியளவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இயங்கும் நேரலை தளங்களான Youtube Channal of MHRD.in, Facebook Live and Swayamprabha Channal of MHRD  மூலமும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்த மாணக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback )  போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பணிந்து அனுப்பி அதன் நகலினை இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் இன்று மாலை 04.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1  ATTACHMENT - 2

Tuesday, 14 January 2020

14.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்படவுள்ள அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பதிவேற்றம் செய்ய  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. INSTRUCTIONS,            2. SUBJECT CODE FOR +1,       3. SUBJECT CODE FOR +2

Friday, 10 January 2020

10.01.2020
 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) -2019-2020  ஆம் கல்வி ஆண்டு  - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம் ( Safety and Security ) - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெறும். ATTACHMENT   FORM 
நடைபெறும் இடம். 
 1. மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு    11.01.2020 காலை 9.00 
     மணியளவில் அரசு மூஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
 2. உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு 11.01.2020 காலை 09.00         மணியளவில்  அனைவருக்கும் கல்வி இயக்கக்கூட்டரங்கம் , காந்தி நகர் , காட்பாடி 
குறிப்பு:-
இணைப்பில் உள்ள படிவத்தினைப்பூர்த்தி செய்து பயிற்சி நடைபெறும் மையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
பெயர் பதிவு :-காலை 09.00 முதல் 9.30 மணி வரை
பயிற்சி நேரம் :- காலை 09.30 முதல் 5.30 மணி வரை


10.01.2020
SSA  சார்பான தணிக்கை - 2018 -2019 ஆம் நிதியாண்டில் தணிக்கைக்கு உட்படுத்தாத கீழ்க்காணும் பள்ளிகள் 20.01.2020 அன்று வேலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள தணிக்கைக்கு உரிய ஆவணங்களை முழுமையாக உட்படுத்த சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க  நேரிடும் .  ATTACHMENT 
 தணிக்கைக்கு உட்படுத்தாத பள்ளிகள் 
1.அ.(ம) மே.நி.பள்ளி,  ஆலங்காயம்
2 .அ. (ம) உ.நி.பள்ளி, மிட்டூர்
3.அ.மே.நி.பள்ளி,  ஆண்டியப்பனூர்
4.அ.மே.நி.பள்ளி, வடுகமுத்தம்பட்டி
5 அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
10.01.2020
 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுதல் - பள்ளிகளில் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படும்படி அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

10.01.2020  அனைத்து  வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2016 - 2017  கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் பெற்று வழங்கியதற்கான பயனீட்டுச் சான்றினை கோரப்பட்டிருந்தது. இது நாள் வரை  கீழ் கண்ட பள்ளிகள் வழங்கவில்லை என்பது மிகுந்த  வருத்தமளிக்கிறது. எனவே கால தாமதத்துக்கு இடமின்றி  இப்படிவத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

1. நத்தம்  மே.நி.பள்ளி

2. விசமங்கலம் மே.நி.பள்ளி

3. பொம்மிக்குப்பம் மே.நி.பள்ளி

4. மிட்டூர் மே.நி.பள்ளி

5. வடுகமுத்தம்பட்டி மே.நி.பள்ளி

6. மீனாட்சி மே.நி.பள்ளி

7. பூங்குளம் மே.நி.பள்ளி 

8. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி

9. உபைபாஸ் மே.நி.பள்ளி

10. உஸ்மானியா மே.நி.பள்ளி

11. புதூர்நாடு வன மே.நி.பள்ளி

12. நெல்லிவாசல் உ.நி.பள்ளி

13. பெரியகுரும்ப தெரு உ.நி.பள்ளி

14. பீ.நாயக்கனூர் உ.நி.பள்ளி 

15. சந்திரபுரம் உ.நி.பள்ளி

16. அக்ரகாரம் உ.நி.பள்ளி

17.குன்னத்தூர் உ.நி.பள்ளி

18. கேத்தாண்டப்பட்டி மே.நி.பள்ளி

19. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர் மே.நி.பள்ளி
10.01.2020
 அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 
இணைப்பில் உள்ள படிவத்தினை  A4    தாளில் தட்டச்சு செய்து அளவுகோல் பதிவேட்டுடன் 24.01.2020 அன்று மாலைக்குள் அ1 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT 

Thursday, 9 January 2020

10/01/2020   நினைவூட்டல் - 01  //மிக மிக அவசரம்//  BUS PASS
அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2014 - 2015  ஆம் கல்வியாண்டு முதல் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய விவரத்தை இணைக்கப்பட்டுள்ள ONLINE  SHEET - ல்  உள்ளீடு செய்யாத பள்ளிகள் ஆண்டு வாரியாக இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
10.01.2020 அடிப்படை பணியாளர்கள் - அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், பெருக்குபவர், துப்புரவாளர், நீர் வழங்குபவர் மற்றும் தோட்டக்காரர்  ஆகிய பணியிடங்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தராக பதவி  உயர்வு வழங்க முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  24.01.2020 க்குள் அனைத்து அரசு உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை குறிப்பிட்ட தேதியில் தவறாது ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு
09.01.2020 - தேர்வுகள் -  அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு  - நடைபெற்று முடிந்த நவம்பர் 2019 தேசியத்திறனாய்வுத் தேர்வில் கலந்து கொண்ட மாணாக்கர்களின் விவரங்களில் திருத்தங்கள் இருப்பின் 10.01.2020க்குள் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐப் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
09.01.2020      // மிக அவசரம் //  தனி கவனம் //  IFHRMS

அனைத்து அரசு /அரசு நிதியுதவி /உயர்/மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் சார்நிலை கருவூலகத்தின் மூலம் சம்பளம் பெற்று வழங்கும்  அலுவலர்கள் /  தலைமை ஆசிரியர்கள் கீழ் கண்ட நடைமுறைகளை எவ்வித கால தாமதமும் இன்றி உடன் செயல்படுத்த தெரிவிக்கலாகிறது.

1. தங்கள்  பள்ளியில் IFHRMS - ல் சம்பள பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக Windows 10 version வசதி உள்ள கணினி வழங்கப்பட்டுள்ளதா ? என்றும் இல்லை எனில் கணினி தேவைக்கான Static கடிதம் அனுப்பிய நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

2. 4G Net connectivity இருந்தால் IP Address தெரிவிக்கப்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லை எனில் உங்கள் Higher Authority க்கு இணைய வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்க்காக கடிதம் எழுதி அதன் நகல் சார் கருவூலகத்துக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. IFHRMS ல் Dues and Deductions வரும் 20 Jan 2020 தேதிக்குள் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புதல் கடிதம் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. மேலும் ATBPS பட்டியல் மற்றும் IFHRMS ஜனவரி மாத சம்பள பட்டியலுடன் ஒப்பிட்டு செய்து சமமான சம்பள பட்டியலுக்கு மட்டுமே முதலில் வில்லை எண் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tuesday, 7 January 2020

07.01.2020  அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ பாடப்புத்தகம்,  நோட்டுப்புத்தகம் மற்றும் சீருடை பெற்று வழங்கியமைக்கான பயனீட்டுச் சான்று இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  08.01.2020 மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT
07.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் அவசரம் - அனைத்து CRC மைய தலைமை ஆசிரியர்கள்/CRTE'S/மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - இணைப்பில் உள்ள படிவத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரங்களை படிவம் 1 முதல் 3 வரையுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் 09.01.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சார்பான கூட்டத்தில் சமர்ப்பிக்க CRC மைய தலைமையாசிரியர்கள் /CRTE'S கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  
குறிப்பு: Excel Sheet-ல் type செய்யப்பட்ட படிவங்களை (படிவம் 1 முதல் 3) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு 09.01.2020-க்குள் (Mail id - deottr@nic.in)  அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பு பள்ளிகளில் அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/நர்சரி&பிரைமரி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் இணைப்பு பள்ளிகளாக இணைக்கப்படவேண்டும். மேலும் பிரைமரி&நர்சரி, தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் இணைப்பு பள்ளிகள் மற்றும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரங்களை  சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று தொகுத்து சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
07/01/2020   //மிக மிக அவசரம்//  BUS PASS
 அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2014 - 2015  ஆம் கல்வியாண்டு முதல் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய விவரத்தை இணைக்கப்பட்டுள்ள ONLINE  SHEET - ல்  ஆண்டு வாரியாக இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
07.01.2020
 மிக மிக அவசரம்// தனிகவனம் //
அனைத்து வகை  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
டிசம்பர் 2019 - ல் நடைபெற்று முடிந்த அரையாண்டு பொதுத்தேர்வில்  பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 ம் வகுப்பு , 11 ம் வகுப்பு  மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெயரையும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும் இணைப்பில் கண்டுள்ள   On-Line  Excel Sheet  ல் இன்று மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Monday, 6 January 2020

07.01.2020     நினைவூட்டல் -1
 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர்நலம் - ப்ரீமெட்ரிக் / போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று இணைய வழியில் விண்ணப்பித்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் விரைந்து இணையவழியில் புதுப்பிக்கவும் , புதுப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின்  EMIS NUMBER  - ஐ பதிவேற்றம் செய்யவும். அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது  ATTACHMENT  PENDING SCHOOL LIST

07.01.2020     நினைவூட்டல் -2
 அனைத்து அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

 MSME ( Minister of Micro Small & Medium Enterprises) - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை & ஓவியப் போட்டிகள் திருப்பத்தூர் அரசு மீனாட்சி (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியில் 08.01.2020 அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளதால், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தவறாமல் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில்    ஒரு போட்டிக்கு ஒரு மாணவர்  வீதம் ( பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர் ) பொறுப்பாசிரியர் துணையோடு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  படிவம்   இணைப்பு - 1   இணைப்பு - 2

குறிப்பு . 1 . மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்படும்
                2 . இணைப்பில் உள்ள Format for Personal Information  படிவத்தை  பூர்த்தி செய்து வரவும்  
07.01.2020
 அனைத்து அரசு உயர் / மேல்நிலை/ நலத்துறை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
விளையாட்டுப்போட்டிகள் தினம் - 2019-2020  ஆம் நிதியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை/ நலத்துறை பள்ளி மாணாக்கர்களுக்கு இணைப்பில் உள்ளபடி விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதால் மாணவ/ மாணவிகளை பாதுகாப்பான முறையில் போட்டியில் கலந்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

இடம் :-  சி.எம்.சி. விளையாட்டு மைதானம், பாகாயம்
 நாள்  :- 08.01.2020  காலை 08.30 மணி - பெண்கள் 
                 09.01.2020 காலை 08.30 மணி  - ஆண்கள் 
குறிப்பு  : இணைப்பு-2ல் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை  நடுவராக பணியாற்றும்பொருட்டு உரிய காலத்தில் விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ATTACHMENT 1   ATTACHMENT 2
07.01.2020
அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
08.01.2020 அன்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை சார்பாக   BIO-Metric   வருகைப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  08.01.2020 அன்று காலை 09.45 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு  (deottr@nic.in ) அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT   ATTACHMENT     Form   
06.01.2020   மறு நினைவூட்டல் 
 அனைத்து அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

 MSME ( Minister of Micro Small & Medium Enterprises) - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை & ஓவியப் போட்டிகள் திருப்பத்தூர் அரசு மீனாட்சி (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியில் 08.01.2020 அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளதால், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தவறாமல் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பள்ளிக்கு ஒருவர் வீதம் ( பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர் ) பொறுப்பாசிரியர் துணையோடு கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  படிவம்   இணைப்பு - 1   இணைப்பு - 2
குறிப்பு . மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்படும் 
நினைவூட்டல் - 07


  06.01.2020   அனைத்துவகை அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/                                                மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


     2019 - 2020 ஆம் ஆண்டிற்கான PTA செய்தி சந்தா & இணைப்பு கட்டணத்தை இதுநாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் PTA இணைப்பு கட்டணத் தொகையை வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் இன்று 06.01.2020 மாலைக்குள் வழங்காத பட்சத்தில், வழங்காத பள்ளிகளின் பெயர்  பட்டியல் இயக்குநர் அவர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது என்பதையும் தெரிவிக்கலாகிறது. இதுவே கடைசி  நினைவூட்டல் என்பதும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Friday, 3 January 2020

03.01.2020  அனைத்து அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

IFHRMS இல் ஊதியப் பட்டியல்கள் தயார் செய்தல் - Initiator Login செய்ய தங்கள் பள்ளியில் பட்டியல்கள் தயாரிப்பவரின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த நிதியுதவி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இதில் ஏற்படும் கால தாமதத்திற்கு தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.   ATTACHMENT


Thursday, 2 January 2020

03.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த டிசம்பர் 2019, அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி அறிக்கை 06.01.2020 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் எவ்வித நினைவூட்டிற்கும் இடமின்றி தவறமால் ஒப்படைக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment, 2. Forms
02.01.2020 - தேர்வுகள் - தனிகவனம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - சிறுபான்மையினர் மொழி பயிலும் மாணாக்கர்களுக்கு 2020 முதல் 2022 வரையிலான கல்வி ஆண்டுகளுக்கு தமிழ் கட்டாயம் கற்றச் சட்டம் 2006-இல் இருந்து அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பகுதி-I-ல் அவரவர் மொழிப்பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பகுதி-I-ல் சிறுபான்மையினர்  மொழி பயிலும் மாணாக்கர்களுக்கு அவரவர் மொழிப்பாடத்தில் பெயர் பட்டியலில் (Nominal Roll) விண்ணப்பித்துள்ளதை 04.01.2020-க்குள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 
02.01.2020  அனைத்து அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

MSME ( Minister of Micro Small & Medium Enterprises) - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை & ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பாக விருப்பமுள்ள மாணவ / மாணவியர்களிடமிருந்து பூர்த்தி செய்த 'Format for Personal Information' படிவத்தை பெற்று சார்ந்த தலைமை ஆசிரியர் இவ்வலுவலக அ5 பிரிவில் 04.01.2020 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்   இணைப்பு - 1   இணைப்பு - 2