Monday, 2 December 2019

03.12.2019  அனைத்து வகை பள்ளித் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு,


இன்று 03.12.2019 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்திற்கு  கீழ் காண் தகவல்களை எடுத்து வர அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

1. முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் அனுப்பிய நகல் (இது வரை அளிக்காத பள்ளிகள் மட்டும்)

2. 03.12.2019 அன்றைய நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

3. 02.12.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக மின்னஞ்சலில் (Website) கோரிய உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விவரம் கண்டிப்பாக இன்றே ஒப்படைக்க வேண்டும். 

4. PTA  5 %  செலுத்தாத பள்ளிகள் மற்றும் PTA இணைப்பு கட்டணம் செய்தி சந்தா செலுத்தாத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 5. 2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான காலணி, புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி மற்றும் காலுறை, மாணவர்களுக்கு பெற்று  வழங்கியமைக்கான பயனீட்டு சான்று வழங்காத தலைமை ஆசிரியர்கள் இன்று ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

6. VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் மற்றும் Time Scale பணியாளர்கள் பணிபுரியும் பள்ளிகள் தவிர்த்து துப்புரவாளர் இல்லாத பள்ளிகளின் கருத்துருக்கள் இரண்டு நகல்களில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

7. ஆசிரியர் /ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் EMIS - ல் Photo Update செய்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 2 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (குறிப்பு : ஏற்கனவே அனுப்பிய பள்ளிகள் தவிர்த்து) 

8. தேர்தல் - 2019 உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் மற்றும் பணியாளர்களின் விவரம் உரிய படிவத்தில் எடுத்துவரக் கோருதல் (குறிப்பு : ஏற்கனவே அனுப்பிய பள்ளிகள் தவிர்த்து)