27.12.2019
அனைத்து அரசு /அரசு உதவிபெறும் நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலம் வருகைப்பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை 90, தேசிய தகவலியல் மைய கடிதத்தில் UDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30th December 2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை 6, சிந்தாதிரிப்பேட்டை, ஐ போக்கஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Startek FM 220 Model ) மற்றும் அகமதாபாத், மந்த்ரா சாப்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து ( Iris Scanner MFS 100 Fingerprint Device ) கொள்முதல் செய்யப்பட்ட ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிகள் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
30.12.2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31.12.2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப்பதிவு பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால்
30.12.2019 திங்கள் அன்று திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் கூட்டத்திற்கு கணினி (Biometric Attendance System ) இயக்க தெரிந்த ஆசிரியர் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்