Wednesday, 30 October 2019

31.10.2019  நினைவூட்டல் - 6   // மிக மிக அவசரம்//
NMMS - 2019  - 2020 - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP இணையதளத்தில் (FRESH ENTRY / RENEWAL)  பதிவேற்றம்/ புதுப்பித்தல் செய்து  INSTITUTE LEVEL -  ல் சரிபார்த்து  SUBMIT  செய்ய இன்றே (31.10.2019 ) கடைசி நாள் என்பதால் இப்பணியை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   NMMS FRESH    NMMS RENEWAL 
30.10.2019 நினைவூட்டல் - 05, மிக மிக அவசரம் //தனி கவனம்//  NMMS 2019- 2020 - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP இணையதளத்தில்  (FRESH ENTRY / RENEWAL ) பதிவேற்றம் / புதுப்பித்தல் செய்து INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்து இப்பணியை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இணைப்பில் உள்ளன. ATTACHMENT
30.10.2019     //மிக மிக அவசரம்//
   
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உதவியாளர் முதல் துப்புரவாளர் வரை அனுமதிக்கப்பட்ட , நிரப்பப்பட்ட மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கையினை இரு நகல்களில் A3  தாளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் இவ்வலுவலக அ1 பிரிவில்  29.10.2019 அன்று காலை 11 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க  அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டும் இதுநாள் வரை  இரண்டு பள்ளிகளில் இருந்து மட்டுமே(விசமங்களம் மற்றும் பால்நாங்குப்பம் ) உரிய படிவங்கள் பெறப்பட்டது. மீதம் உள்ள பள்ளிகளில் இருந்து பெறப்படாதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். 
         மேலும் இப்பொருள் தொடர்பான தகவல்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அவசரமாக அனுப்ப கோரப்பட்டு இருப்பதால்  இதில் தனிகவனம் செலுத்தி  ஒப்படைக்காத பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகல் உடன் (அசல் அளவுகோல் பதிவேட்டுடன் ) 31.10.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் (ஆசிரியர் அல்லாத பணியாளர் மூலம் ) நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.(ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஏவறும் இல்லை எனில் பள்ளி பணி முடிந்த பின் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது) தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.   . ATTACHMENT 

Tuesday, 29 October 2019

30.10.2019     // தனிக்கவனம்//    சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி பள்ளி நிலையில் (Institute Level) உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை  Verification செய்து மாவட்ட அளவிற்கு (District Level) பரிந்துரை செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT
30.10.2019
  அனைத்து அரசு/நகரவை / நிதியுதவி/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/ நர்சரி /பிரைமரி/ தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தங்கள் பள்ளியில் உள்ள பயன்பாடில்லா  ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் மாணாக்கர்களின் "பாதுகாப்பு" தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இணைப்பில் உள்ள  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் செயல்முறைகளை  பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  / தனியார் பள்ளி / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT .ATTACHMENT
30.10.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ஆதிந/வனத்துறை/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மைய மதிப்பீட்டுப்பணி - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பத்தாம் வகுப்பு பாடங்களை போதிக்கும் பாடவாரியான இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்து செய்து இரண்டு நகல்களில் 05.11.2019 காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலமாக சமர்பிக்க அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment  
29.10.2019    // மிக மிக அவசரம் //             தனிகவனம் //   
 அனைத்து அரசு நிதியுதவி / சுயநிதி / மெட்ரிக் / CBSE  பள்ளியின்  முதல்வர்கள் மற்றும் தாளாளர் அவர்களின் கவனத்திற்கு இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தனி நபர் மூலம் நாளை காலை (30.10.2019) 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENTFORM 

  அனை
29.10.2019   மிக மிக அவசரம் // தனிகவனம் // 
 NMMSS  2019 - 2020  - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP  இணையதளத்தில் (FRESH ENTRY)  பதிவேற்றம் செய்து  INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT  செய்து  இப்பணியை  விரைவாக  முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இணைப்பில் உள்ளன .ATTACHMENT

Monday, 28 October 2019

29.10.2019 - நினைவூட்டல்-1 - தேர்வுகள் - தனிகவனம் - மார்ச்/ஏப்ரல் 2020, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் -  தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தேர்வுமைய இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் கட்டிட உறுதித்தன்மை சான்றுடன் 24.10.2019 மதியம் 02.00 மணிக்குள் தனிநபர் மூலமாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது தேர்வுகளின் அவசரத்தன்மை கருத்தில் கொண்டுகூட இந்நாள் வரையில் ஒப்படைக்காமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாக உள்ளது. கீழ்கண்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் தேர்வுகளின் அவசரத்தன்மை கருத்தில் கொண்டு உடனடியாக இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் கட்டிட உறுதித்தன்மைச் சான்றுடன் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்க கோட்டுகொள்ளப்படுகிறார்கள்.
விவரங்கள் ஒப்படைக்காத தேர்வுமையங்களின் விவரங்கள்:-
10ஆம் வகுப்பு தேர்வு மையங்கள்: 1. அ ஆ மே நி ப, ஆலங்காயம், 2.  அ ஆ மே நி ப, மடவாளாம், 3.அ பெ மே நி ப, மடவாளம், 4. அ பெ மே நி ப, ஆலங்காயம், 5.அ மே நி ப, வள்ளிப்பட்டு, 6.அ மே நி ப, பொன்னேரி, 7.அ மே நி ப, வெலகல்நாத்தம், 8. அ மே நி ப, வெள்ளக்குட்டை, 9. அ மே நி ப, பொம்மிகுப்பம், 10. அ ஆ மே நி ப, ஜோலார்பேட்டை, 11. அ  மே நி ப, கசிநாயகன்பட்டி, 12. அ  மே நி ப, பேராம்பட்டு, 13.மீனாட்சி அ  பெ மே நி ப, திருப்பத்தூர், 14.அ  மே நி ப, ஜெயபுரம், 15.அ  மே நி ப, நிம்மியம்பட்டு, 16. வனத்துறை உ நி ப, நெல்லிவாசல், 17. தோமினிக் சாவியோ மே நி ப, திருப்பத்தூர். 
11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள்: 1. அ ஆ மே நி ப, ஆலங்காயம், 2.  அ ஆ மே நி ப, மடவாளம், 3.அ பெ மே நி ப, மடவாளம், 4.அ மே நி ப, பொன்னேரி, 5.அ மே நி ப, வெலகல்நாத்தம், 6அ மே நி ப, பொம்மிகுப்பம், 7. அ ஆ மே நி ப, ஜோலார்பேட்டை, 8. அ  மே நி ப, கசிநாயகன்பட்டி, 9.மீனாட்சி அ  பெ மே நி ப, திருப்பத்தூர், 10.அ  மே நி ப, ஜெயபுரம், 11. அ மே நி ப, நிம்மியம்பட்டு, 12. தோமினிக் சாவியோ மே நி ப, திருப்பத்தூர். 
29.10.2019 
அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 தங்கள் பள்ளியில் தூய்மை தூதுவர் குழுக்களை எற்படுத்தி அதற்கு ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து  தூது குழுவில் உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய விவரப்பட்டியல்களை  எதிர்வரும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்க  தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.10.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ஆதிந/வனத்துறை/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுகளுக்கு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு (மாணவ/மாணவிகளுக்கு) சலுகைகள் கோரும் கருத்துருக்கள் இணைப்பில் கண்டவாறு உரிய முறையில் பூர்த்தி செய்து 05.11.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக மூன்று நகல்களில் (03 Copy) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment

Friday, 25 October 2019

25.10.2019
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 டெங்கு விழிப்புணர்வு மற்றும் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை சார்ந்த விவரம் , சென்னை -6 பள்ளிக்கல்வி இயக்கநர் அவர்களால் தெரிவித்துள்ள விவரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க  அனைத்து  வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT.
25.10.2019
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப்/நடுநிலைப்பள்ளி/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
  சத்துணவுத் திட்டம் திட்டம் - வேலூர் மாவட்டம்  SMS BASED MONITORING SYSTEM - சத்துணவு திட்டதின் கீழ் தினசரி உணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கை, பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது உதவி ஆசிரியர் தினசரி   ஆய்வு செய்து குறுஞ்செய்தி  (SMS) மூலம்  155250  என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் மதிய உணவு சுவையாகவும் மற்றும் தரமானதாகவும் உள்ளதா, அந்தந்த நாட்களுக்குறிய உணவு வழங்கப்படுகிறதா, மாணவர்களுக்கு முட்டைகள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா, சத்துணவு உண்ணும் மாணவர்களின் வருகை 100% உள்ளனவா, மற்றும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுள்ளதா என உறுதி செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT
25.10.2019                                                 // மிக மிக அவசரம் //                  // தனி கவனம்  //

 அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  NMMS   உதவி தொகை  சார்ந்து, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் பெயர் விடுபடாமல் இணையதளத்தில் இன்றே பதிவேற்றம்   (FRESH ENTRY)  செய்து, விரைந்து முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  
25.10.2019       //மிக மிக அவசரம்//
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உதவியாளர் முதல் துப்புரவாளர் வரை அனுமதிக்கப்பட்ட , நிரப்பப்பட்ட மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கையினை இரு நகல்களில் A3  தாளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் இவ்வலுவலக அ1 பிரிவில்  29.10.2019 அன்று காலை 11 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கமாறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 





Thursday, 24 October 2019

25.10.2019      // மிக மிக அவசரம் // தனிகவனம் //
 அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர் /முதல்வர்களின் கவனத்திற்கு
 எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி எரி சக்தி சேமிப்பு சார்ந்த ஓவியப்போட்டிகளின் படைப்புகள்  4 முதல் 6 வரை ஒரு படைப்பும் , 7 முதல் 9 ம் வகுப்பு  வரை ஒரு படைப்பும் தேர்வு  செய்து இன்று மாலை 4.00 மணிக்குள்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியை இவ்வலுவலகத்தில்  அ5 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT 
24.10.2019
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS மதிப்பெண் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இன்று (24.10.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது.ATTACHMENT

24.10.2019
 அனைத்து வகை பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து  வகை பள்ளிகளுக்கும்  உள்ளூர் விடுமுறை  அரசு ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது ATTACHMENT.https://deotptr.files.wordpress.com/2019/10/a4-21459-2019-23-10-2019-g.o.1d-515-21-10-2019.pdf

Wednesday, 23 October 2019

23.10.2019 -    
ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு அனுப்பிவிட்டு பூர்த்தி செய்த படிவத்தினை,  சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று 30.10.2019 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்வி உதவித் தொகை பெற்று வழங்காத நிகழ்விற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. 

(குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
                       2. தொகுப்பு படிவம்  3 நகல்கள்) 

Tuesday, 22 October 2019

23.10.2019 - தேர்வுகள் - தனி கவனம் -  அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச்/ஏப்ரல் 2020, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இன்று (23.10.2019) மதியம் 02.00 மணிக்குள் தேர்வெழுதும் தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களை அனுகி தேர்வு சார்பான விவரங்களை உடனடியாக அளிக்குமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
22.10.2019
   அனைத்து அரசு /அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
அனைத்து அரசு /அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2019- 2020 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான CCE Records  விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (EMIS Website)   நாளை (23.10.2019 ) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
22.10.2019

                  அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தீபாவளி நன்னாளில் சிறியவர்களும் , பெரியவர்களும் பட்டாசு பயன்படுத்தும் வேளையில் முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க  வேண்டும்.கவனக்குறைவு காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும்  இப்பொருள் சார்பாக சென்னை - 6 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ATTCHMENT
22.10.2019 - தேர்வுகள் - தனி கவனம் - மார்ச்/ஏப்ரல் 2020, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தேர்வுமையங்களில் தேர்வெழுதும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் (இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இருநகல்களில்) மற்றும் கட்டிட உறுதித்தன்மைச்சான்றின் நகல்களை இணைத்து 24.10.2019 மதியம் 02.00மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் தனிநபர் வாயிலாக ஒப்படைக்குமாறு அனைத்து வகை 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுமைய தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment     2. Forms (Clubbing center Schools)
22.10.2019


// மிக மிக அவசரம்// -   நினைவூட்டல் -4
   
அனைத்து   உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கவனத்திற்கு 

தனிகவனம் 

 இவ்வலுவலக இணையதள செய்தி நாள் 10.07.2019-ன்படி,  2019-2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 22.10.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று  தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகிறது    Attachment 

Sunday, 20 October 2019

21.10.2019

  அனைத்து அரசு நிதியுதவி /நகரவை /மெட்ரிக்/சி.பி.எஸ்.சி. /நர்சரி/ப்ரைமரி பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள்  deottr@nic.in  என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Friday, 18 October 2019

18.10.2019 - தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2019 - 03 நவம்பர் 2019 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) 21.10.2019 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து சார்ந்த பள்ளி மாணவ/மாணவிகளுக்கு வழங்குமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



18.10.2019 - மிக மிக அவசரம் -   நினைவூட்டல்
   
அனைத்து   உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கவனத்திற்கு 

தனிகவனம் 

 இவ்வலுவலக இணையதள செய்தி நாள் 10.07.2019-ன்படி,  2019-2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற  பெண்  குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள் படிவத்தில் பூர்த்தி செய்து 21.10.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் சாதிசான்று நகல் மற்றும் வருமான சான்று தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்   Attachment 
18.10.2019 - நினை´ட்டல் - 01
                     மிக அவசரம் // தனிகவனம்
03.07.2019-கல்வி உதவித் தொகை 2018-2019ஆம் கல்வியாண்டிற்கான 6  ம் வகுப்பு  பயின்ற MBC  மாணவிகளின்  கல்வி உதவித்தொகை ECS மூலம் தலைமையாசிரியரின் வங்கி  கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதுதொகை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில்  வரவு வைத்து பயனீட்டுச் சான்று (UTILISATION CERTIFICATE)  மற்றும் அதற்குரிய Acquittance 2 நகல்களில் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் 21.10.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 ATTACHMENT

Thursday, 17 October 2019


   18.10.2019 - நினைவூட்டல் -2 மிக மிக அவசரம்

          அனைத்து  உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளி கழிப்பறை  பராமரிப்பு -  VPRC -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்  மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலுள்ள கழிவறை பராமரிக்க ஆகும் செலவினங்கள் மற்றும் VPRC  மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும்  பணியாளருக்கு நிதி வழங்குவது சார்பாக ஜனவரி -19 முதல் செப்படமபர் 2019-ம் தேதி வரை அறிக்கை கோரப்பட்டது. இந்நாள் வரையில் சில  பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் முழு  வடிவிலான சரியான விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை (இதனால்  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது.)  எனவே கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி  முழுமையான வடிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

   1. படிவத்தினை பூர்த்தி செய்யும் போது  பராமரிப்பு தொகை தவிர்த்து நிரப்பப்பட வேண்டும்.  

     2.படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கபட வேண்டிய விவரங்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தில் CREDIT & DEBIT செய்யப்பட்ட பக்கத்தின் நகல் ஜனவரி 19 முதல் செப்டம்பர் 19 முடிய  மாதங்களுக்கு உள்ள விபரங்கள்  சமர்ப்பிக்கப்ட வேண்டும் 

      3. Acquittance copy  தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் 


18.10.2019 - தேர்வுகள் - தனிகவனம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத்தேர்வு (NMMS) டிசம்பர் 2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேர்விற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி ஆன்லைனில் பதிவேற்றம் செய்து  கொள்வதற்கான வழிமுறைகள்  Attachment 
குறிப்பு:- (தேர்வு கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்தவேண்டும். ஆன்லைனில் பதிவேற்றம் முடிந்த பிறகு 04.11.2019-க்குள் Summary Report & Fees receipt-னை இரு நகல்களில் வேலூர், கல்புதூர், அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதனை தெரிவிக்கலாகிறது).  
NMMS 2019 – 2020
1. Downloading Application forms – 26.09.2019 – 11.10.2019
2. Uploading Application & fees Details – 21.10.2019 – 31.10.2019
3. Summary Report / Fees Receipt Submission for Vellore, Assistant Director of Govt. Examinations – 22.10.2019 – 04.11.2019
17.10.2019
      அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டிடங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக
     மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்க வழிவகை செய்ய சார்ந்த தலைமையாசிரிய்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 சார்ந்த  வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைத்துவகை பள்ளிகளிலும் மேற்படி நடவடிக்கையினை மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
                               மாவட்டக்கல்வி அலுவலர் (பொ),
                                      திருப்பத்தூர்
17.10.2019
அனைத்து அரசு /அரசு நிதியுதவி /நகரவை /மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/ நர்சரி &  ப்ரைமரி மற்றும் நடுநிலைப்பள்ளி / உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரயர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

 அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி / நடுநிலைப்பள்ளி /உயர் /மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தங்கள் பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலுடன் மாணவர் எவரேனும் இருப்பின் அவர்கள் விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால் தனி கவனம் செலுத்தி அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

                                                                                        மாவட்டக்கல்வி அலுவலர்(பொ),
                                                                                                               திருப்பத்தூர்

Wednesday, 16 October 2019

17/10/2019
             அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்      கவனத்திற்கு 
சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 09.10.2019 அன்று மாலை ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகள் இந்நாள் வரை ஒப்படைக்கவில்லை எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT
17.10.2019                 அரசு /நிதியுதவி /உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி  
                                                  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

         தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ள விவரம் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து  11/10/2019  மாலை  ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.  இணைப்பில் காணும் பள்ளிகள் இந்நாள் வரை ஒப்படைக்கவில்லை எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT

Monday, 14 October 2019

15.10.2019

   ஆதிதிராவிடர் நலம் -PRE MATRIC / POST MATRIC  - 2019 -2020  ஆம் ஆண்டிற்கான  இப்பொருள் சார்ந்து கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இணைப்பிலுள்ள ONLINE  SHEET - ல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
 உள்ளீடு செய்யாத பள்ளிகள் 
1. அரசு மேல்நிலைப்பள்ளி , வள்ளிப்பட்டு.
2 . அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
3 . அரசு  ஆதிதராவிடர் நலம் உயர்நிலைப்பள்ளி, ஜடயனூர்
4 . அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னத்தூர்( மண்டலவாடி) ONLINE  SHEET

15.10.2019 - மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள் – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே இணைப்பில் உள்ள படிவங்கள், வரைப்படங்கள் மற்றும் வரைக்கட்டத்தாள் ஆகியவை குறித்து மாணவ/மாணவியருக்கு கற்பித்து, எதிர்வரும் பொதுத்தேர்விற்கு அவர்களை தயார்படுத்தும்படி அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



15.10.2019                                                 // மிக மிக அவசரம் //
 அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  NMMS   சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் பெயர் விடுபடாமல் இணையதளத்தில் பதிவேற்றம் /புதுப்பித்தல் (FRESH ENTRY/ RENEWAL)  பணி இன்று 15.10.2019 மாலைக்குள் விரைந்து முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   NMMS RENEWAL
15.10.2019
                              அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர்களின் கவனத்திற்கு 
 அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ /மாணவியர்களின் 2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு   மாணவர்களின் எண்ணிக்கை அனுப்பிவைக்க  கீழ்கண்ட பள்ளிகளுக்கு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT     படிவம் 

1 . njhäå¡ nrénah nkšãiy¥gŸë ÂU¥g¤ö®.

2 . nkç Ïkh¡Fny£ nkšãiy¥gŸë ÂU¥g¤ö®.

3 . TMS  nkšãiy¥gŸë ÂU¥g¤ö®.

4 . Ïuhk»UZzh nkšãiy¥gŸë ÂU¥g¤ö®.

5 . ciggh° kfë® nkšãiy¥gŸë ÂU¥g¤ö®.

6 . rh®y°  nkšãiy¥gŸë m¤jdhவூர்

7 . lh‹ ngh°nfh nkšãiy¥gŸë n#hyh®ng£il

8 . bræ‹£ n#hr¥ nkšãiy¥gŸë n#hyh®ng£il
14.10.2019        நினைவூட்டல் - 1                      //மிக மிக அவசரம் //
அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை    ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ள்ளிக் கல்வி -  பள்ளி  கழிப்பறை  பராமரிப்பு  -   வேலூர்   மாவட்டத்திற்குட்பட்ட   ஊராட்சி ஒன்றியங்களால் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அனைத்து  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் கிராம ஊராட்சிகளின் எல்லைகளிலுள்ள அனைத்து   அரசு   உயர்நிலை /    மேல்நிலைப்பள்ளிகள்  மற்றும்  ஆதிதிராவிட   நலப்பள்ளி களிலுள்ள   கழிவறை   பராமரிக்க   ஆகும்    செலவினங்கள் மற்றும் VPRC மூலம் நியமனம் செய்யப்பட்டு   பணிபுரிந்து  வரும்  பணியாளருக்கு  நிதி வழங்குவது சார்பாக ஜனவரி - 2019 முதல்  செப்டம்பர் - 2019 ம்  தேதி   வரையிலான   அறிக்கையினை     இது வரை   அனுப்பாத பள்ளிகள்   மறு நினைவூட்டின்றி   (EXCEL SHEET)    A4     தாளில்     தட்டச்சு      செய்து (deotpt2015@gmail.com)   என்ற    மின்னஞ்சல் முகவரிக்கு  15.10.2019  காலை 11.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதனுடைய Hard Copy  யினை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  
குறிப்பு , வங்கி கணக்கு புத்தக நகல்  இணைத்து ஒப்படைக்கப்படவேண்டும் 
VPRC FORM UPDATED

14.10.2019      // மிக மிக அவசரம் //  அனைத்து அரசு /அரசு                                                          உதவிபெறும்  பள்ளித் தலைமை ஆசிரியர்களின்                                            கவனத்திற்கு,

      NMMS - சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் பெயர் விடுபடாமல் இணைய தளத்தில் பதிவேற்றம் /புதுப்பித்தல் ( FRESH ENTRY/ RENEWAL) பணி 15.10.2019 க்குள் விரைந்து முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் Institute Level - ல் சரிபார்த்து Submit செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


14.10.2019      அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்                                                   கவனத்திற்கு,

    டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்:  இணைப்பில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி அனைத்துவகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்கவும், பள்ளி மாணவர்களிடையே இப்பொருள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும்  அறிவுறுத்தப்படுகிறதுATTACHMENT
14.10.2019       // மிக மிக அவசரம்//   அனைத்து அரசு/அரசு உதவிபெறும்                               உயர்/  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்                                         கவனத்திற்கு

     கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில்  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தை பின்பற்றி 15.10.2019 க்குள் உள்ளீடு செய்து முடித்திட அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Sunday, 13 October 2019


13.10.2019 - 47ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி - அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - 11.10.2019 அன்று திருப்பத்தூர் கல்வி மாவட்ட  அளவில் நடைபெற்று முடிந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற இணைப்பில் உள்ள மாணவ / மாணவியர்களை ஒரு பொறுப்பு ஆசிரியருடன் முன்னேற்பாட்டின் பொருட்டு 14.10.2019 (திங்கள் கிழமை) பிற்பகல் 2.00 மணி அளவில் அறிவியல் கண்காட்சி பொருட்களுடன் வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment

வேலூர் வருவாய் மாவட்ட அளவில் கண்காட்சி
நடைபெறும் இடம் மற்றும் நாள்

இடம்அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்
நாள் - 15.10.2019  நேரம் - காலை 8.30 மணி அளவில்