10.07.2019
கூட்டம் - அனைத்துவகை வட்டாரக்கல்வி அலுவலர்கள்
மற்றும்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிகுலேசன் பள்ளி
முதல்வர்கள் கவனத்திற்கு
1.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில
முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின்
செயல்முறைகள் ந.க.எண். 843/இ1/2019 நாள். 20.06.2019
2. வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.2513/இ2/2019 நாள். 07.2019 –ன் படி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி
மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி
பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் /தலைமை
ஆசிரியர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப்
பள்ளியில் 11.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 02.00
மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்/
முதல்வர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்திற்கு வரும் போது
கீழ்க்காணும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. 2017-2018 ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கைக்கு உரிய கட்டணம் சார்ந்த
பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புகை
(Acknowledgement) 3 நகல்களில் கொண்டுவர வேண்டும் (‘A4’ தாள்) மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காத
பள்ளிகள் மட்டும்)
2. 2019-2020ஆம் கல்வியாண்டில் RTE 25%
சதவீதம் பள்ளியில் மாணாக்கர்கள் சேர்க்கப்பட்ட விபரத்தினை இணைப்பில் உள்ள
படிவத்தில் Arial Fonts -ல் தட்டச்சு செய்து
அதனை விவரத்தினை CD-ல் பதிவு
செய்து அதன் பிரதியை 3 நகல்களில் CD-வுடன்
ஒப்படைக்க வேண்டும்.
3. வட்டாரக்கல்வி அலுவலர்கள்
தங்கள் ஒன்றியத்தில் உள்ள நர்சரி
மற்றம் பிரைமரி பள்ளிகளில்
2019-2020ஆம் கல்வியாண்டில் RTE 25%
சதவீதம் பள்ளியில் மாணாக்கர்கள் சேர்க்கப்பட்ட விபரத்தினை இணைப்பில் உள்ள
படிவத்தில் தொகுத்து Arial Fonts -ல் தட்டச்சு செய்து
அதனை விவரத்தினை CD-ல் பதிவு
செய்து அதன் பிரதியை 3 நகல்களில் CD-வுடன்
ஒப்படைக்க வேண்டும்.
மேற்காண்
கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டப் பொருள் சார்பான விபரங்களை ஒப்படைக்காத
பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்களின் பள்ளிகளின் பெயர்கள் தொடர் மேல் நடவடிக்கை
மேற்கொள்ளும் பொருட்டு மெட்ரிக்
பள்ளிகளின் இயக்குநர் மற்றும் வேலூர்
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது. ATTACHMENT
RTE Admission Report - 2019-2020 FORM
RTE Admission Report - 2019-2020 FORM