Sunday, 30 June 2019

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

30.06.2019 நிலவரப்படி பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி செல்ல வேண்டிய இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 01.07.2019 மாலைக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachement

Saturday, 29 June 2019



30.06.2019 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் / மெட்ரிக் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின்  முதல்வர்கள்/தாளார்கள் கவனத்திற்கு 

     தங்கள் பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின்  எண்ணிக்கையை தவிர கூடுதலாக பள்ளி வாகனங்களில் ஏற்றி செல்லகூடாது என்பதற்கான  பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  இச் செயல்முறை கடிதம் கிடைக்கப்பெற்றமைக்கு ஒப்புதலினை உடன்  இவ்வலுவலகம் பணிந்தனுப்பிவைக்க தெரிவிக்கலாகிறது.   Attachment 
29.06.2019 - அனைத்துவகை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - 
வட்டாரக்கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் /தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளியில் 01.07.2019 (திங்கள்) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.  கூட்டத்திற்கு வரும் போது கீழ்க்காணும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1
1   1. 2017-2018 ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கைக்கு உரிய கட்டணம் சார்ந்த பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்புகை (Acknowledgement)  3 நகல்களில் கொண்டுவர வேண்டும் (‘A4’ தாள்) 

2    2. 2019-2020ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கை வழங்கிய விபரம் (இணைப்பில் உள்ள படிவம்) 3 நகல்களில் உடன் கொண்டுவர வேண்டும்(  ‘A4’ தாள்) 
(  (குறிப்பு :- வரிசை எண் 1 மற்றும் 2 இல் காணும் கோரப்பட்டுள்ள விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரியான deotptrte2009@gmail.com-க்கு  அனுப்பிவிட்டு அதன் பிரதியை கூட்டத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

3    3. 40 கலம் கொண்ட கூடுதல் விபரங்கள் கொண்ட படிவம் 2 நகல்களில் கொண்டுவர வேண்டும் (அனைத்து இணைப்புகளுடன்) . (‘A4’   தாளில்).
           1. ATTACHMENT  -1         2. ATTACHMENT -2   3. Utilisation Certificate – 2017-2018  and Acknowledgement of receipt – 2017-2018 

Friday, 28 June 2019



28.06.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

28.06.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      தங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இளநிலை உதவியாளர் பணியிடம் காலி எனில் குறிப்பிடப்பட வேண்டும் மேலும் பணியிடம் இல்லை எனில் இன்மை அறிக்கை  சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.  ATTACHMENT   
28.06.2019 - வட்டாரக்கல்வி அலுவலர்கள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்கள் /தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளியில் 01.07.2019 (திங்கள்) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.  கூட்டத்திற்கு வரும் போது கீழ்க்காணும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1
 1. 2017-2018 ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கைக்கு உரிய கட்டணம் சார்ந்த பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்புகை (Acknowledgement)  3 நகல்களில் கொண்டுவர வேண்டும் (‘A4’ தாள்) 

2    2. 2019-2020ஆம் ஆண்டில் RTE 25% சேர்க்கை வழங்கிய விபரம் (இணைப்பில் உள்ள படிவம்) 3 நகல்களில் உடன் கொண்டுவர வேண்டும்(  ‘A4’ தாள்) 
(      
    (குறிப்பு :- வரிசை எண் 1 மற்றும் 2 இல் காணும் கோரப்பட்டுள்ள விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரியான deotptrte2009@gmail.com-க்கு  அனுப்பிவிட்டு அதன் பிரதியை கூட்டத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

3    3. 40 கலம் கொண்ட கூடுதல் விபரங்கள் கொண்ட படிவம் 2 நகல்களில் கொண்டுவர வேண்டும் (அனைத்து இணைப்புகளுடன்) . (‘A4’   தாளில்).
                      
                  ATTACHMENT  -1                        ATTACHMENT -2    




28.06.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2019-2020-ம் கல்வியாண்டிற்கு  தேவையான  கூடுதல் விலையில்லா பாடபுத்தகங்களை  01.07.2019-க்குள்  பென்னேரி அரசு   மேல்நிலைப்பள்ளியில் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்க அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      மேலும் தேவைக்கு அதிகமாக பெறப்பட்ட விலையில்லா பாடநூல்கள் மற்றும் விலையில்லா நோட்டுப் புத்தகங்களையும் திருப்பி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Thursday, 27 June 2019

27.06.2019 - தேர்வுகள் - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனதிற்கு - மார்ச் 2020 முதல் இடைநிலை/மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்  - Attachment 

27.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் வகுப்பு வாரியாக அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


27.06.2019 -   அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


   BIOMETRIC ATTENDANCE சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக ஆ2 பிரிவில்  28.06.2019 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Wednesday, 26 June 2019



27.06.2019 -  மிக மிக அவரசம்
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

        பாரத சாரண சாரணியம் இராஜ்ய புரஸ்கார் விருது  ஆயத்த முகாம் 

இடம் :- அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி, திருப்பத்தூர் நாள் :- 29.06.2019  
நேரம் :-  காலை 8 மணி முதல்

ATTACHMENT 

27.06.2019 - அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     பள்ளிகளில் பணிபுரியும் இரவுகாவலர் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நாளை (28.06.2019)  காலை 10.00 மணிக்கு விண்ணப்பங்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.   


26.06.2019 - மிக மிக அவசரம்

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

   தங்கள் பள்ளிகளில்  உள்ள இரவு காவலர்  பணியிடம்  சார்பான  விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (28.06.2019)  காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில்  ஒப்படைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பணியிடம் இல்லை எனில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.   Attachment 



26.06.2019 - அனைத்து பள்ளிகள் அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு

2019-2020 ஆம் ஆண்டிற்கான மாணவர்க எண்ணிக்கை EMIS -  இன் படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் விலையில்லா பாடபுத்தகங்களையும் விலையில்லா நோட்டுப் புத்தகங்களை பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கூடுதலாக பெறப்பட்டுள்ள  பாடபுத்தகங்கள்/நோட்டுப்புத்தகங்களை மீளவும் பொன்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி, புத்தககிடங்கில்  சேர்ப்பிக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  ATTACHMENT  

Monday, 24 June 2019



24.06.2019- அரசு உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      மாவட்டக்கல்வி அலுவலரால் கடைசியாக ஆண்டாய்வு செய்யப்பட்ட  விவரம் அளிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் 25.06.2019 மாலை 04.00 மணிக்குள் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  


24.06.2019 - 2019 -2020 விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கும்பொருட்டு கீழ் காணும் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பணியிலிருந்து இன்று முதல் (24.06.2019) 30.06.2019 வரை பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1. திரு.பி.பாண்டுரங்கன், பட்டதாரி ஆசிரியர், அ.உ.நி.பள்ளி.     திம்மணாமுத்தூர்

2.திரு.எம்.ராஜேந்திரன், ப.ஆ. அ.உ.நி.பள்ளி, எலவம்பட்டி

3.திரு.ஜெகநாதன், ப.ஆ., அ.உ.நி. பள்ளி, சின்னகமியம்பட்டு

4.திரு.ராஜேந்திரன், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, புலியூர்

5.திரு.பிரபாகரன், ஆய்வக உதவியாளர்,  அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி

6. வேதபுரி, ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பூங்குளம்

7.ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி

8.திரு.சிவா, ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி,  மலைரெட்டியூர்
9. திரு.சங்கர், ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி. மிட்டூர்
10திரு.பாலாஜி. ஆய்வக உதவியாளர், அ.(ம) உ.நி.பள்ளி, மிட்டூர்

24.06.2019 - அனைத்து அரசு / நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

  சத்துணவு உண்னும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்தினை ஆண், பெண், மொத்தம் என இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் இன்றே பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  

 ATTACHMENT 


24.06.2019 -  அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தவர்கள் எவரும் விடுபடவில்லை என்பதற்கான சான்று இந்நாள் வரையில்  அளிக்காத இணைப்பில் உள்ள  பள்ளிகள் உடன்டியாக 25.06.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

24.06.2019 -  நினைவூட்டல் - 1 
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வாயிலாக நடைபெறும் பயிற்சிகளில் கலந்துக்கொள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் அனைத்து வகை பாடப்பிரிவுகளைக் கையாளும் ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியலை 21.06.2019 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது, இந்நாள் வரையில் புத்தகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தவிர ஏனைய பள்ளிகள் சமர்ப்பிக்கப்படவில்லை.
    எனவே வேலூர், முதன்மைககல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது எனவே  இன்று மாலை 5.00 மணிக்குள் ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்க  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.   Attachment 

Friday, 21 June 2019



21.06.2019-  புதிய பாட திட்டம் பாட நூல்கள் - முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல்.  ATTACHMENT 

Thursday, 20 June 2019



20.06.2019 - அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வாயிலாக நடைபெறும் பயிற்சிகளில் கலந்துக்கொள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் அனைத்து வகை பாடப்பிரிவுகளைக் கையாளும் ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியலை 21.06.2019 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 

20.06.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 

      IFHRMS  காணொலி காட்சி (Video conferencing ) மூலம் மாவட்ட அளவில் 21.06.2019 அன்று காலை 10.00 மணியாளவில் நடைபெறவுள்ளது . ATTACHMENT 

Wednesday, 19 June 2019



20.06.2019  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

       தங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்திடல் வேண்டி கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு கோரப்பட்டு இவ்வலுவலகம் பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காண் ஆய்வக உதவியாளர்களின் அசல் பணிப்பதிவேட்டினை 21.06.2019 அன்று மாலை 03.00 மணிக்கு சார்ந்த ஆய்வக உதவியாளரே  சான்றொப்ப கடிதத்துடன் வந்து பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Tuesday, 18 June 2019



18.06.2019 - EMIS -  பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணாக்கர்களின்  வருகை பதிவு  உள்ளீடு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


  18/06/2019 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


நாளை காலை  11.00 மணிக்கு நடைபெற இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம்  நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இடம் : அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, கூட்ட அரங்கம், திருப்பத்தூர் 

நாள் : 19/06/2019 (புதன் கிழமை)

நேரம் :  மாலை : 03.00  மணி


கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டப்பொருள்கள்

இணைப்பு : 

ATTACHMENT   -1


 Attachment -2


ATTACHMENT -3 

ATTACHMENT -4

நலத்திட்டங்கள் சார்பான  படிவங்கள் 

குறிப்பு :-  BIO Attendance-ல்  காலை வருகையை பள்ளியிலும் மாலை  பதிவை  கூட்டம் முடிந்தபின் கூட்ட அரங்கத்திலும் பதிவு செய்ய வேண்டும்   

Monday, 17 June 2019


18.06.2019 -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     சத்துணவுத் திட்டம் -  சத்துணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை  SMS BASED MONITORING SYSTEM  மூலம் தினந்தோறும் குறுஞ்செய்தி  அனுப்புதல் குறித்து  ATTACHMENT  


17.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


EMIS -  பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணாக்கர்களின்  வருகை பதிவு  உள்ளீடு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

EMIS -  இணைப்பில் உள்ள பட்டியலில் EMIS இணையதளத்தில் விடுபட்ட மற்றும் பூர்த்தி செய்யப்படாத விவரங்களை சரியாக மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டும். 0 என இருப்பின் ஒரு மாணவருக்கு சரியாக உள்ளது.  வேறு எண்கள் 1,2,3 ,,,,,, என எண்கள் இருப்பின் அத்தனை மாணவர்களுக்கும் சரியான உள்ளீடு செய்யவேண்டும்.  Attachment



17.06.2019 -  அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 


தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் 

இடம் : அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, கூட்ட அரங்கம்                           திருப்பத்தூர் 

நாள் : 19/06/2019 (புதன் கிழமை)

நேரம் :  காலை : 11.00  மணி

கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டப்பொருள்கள்

இணைப்பு :  கூட்டப்பொருள் 

ATTACHMENT   -1
 Attachment -2
ATTACHMENT -3 


          

17.06.2019 - CBSE -  பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

       RTE -  மாணவர்கள் சேர்க்கை சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  


Sunday, 16 June 2019


17.06.2019 - மிக மிக அவசரம் 

      அனைத்து வகை  அரசு/நிதியுதவி/மெட்ரிக் /சி.பி.எஸ்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு

EMIS - 2019-2020  கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS  இணையதளத்தில் 18.06.2019-க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் . ATTACHMENT 

Friday, 14 June 2019

14.06.2019 - EMIS -  பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணாக்கர்களின்  வருகை பதிவு  உள்ளீடு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

14.06.2019  இணைப்பில் உள்ள  பள்ளிகள் தங்கள் EMIS LOGIN செய்து drinking water availability ல் No என இருப்பதை Yes என உடனடியாக மாற்ற வேண்டும் . ATTACHMENT    

Thursday, 13 June 2019


13.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     EMIS -  பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணாக்கர்களின் புகைப்படம் மற்றும் வருகை பதிவு  உள்ளீடு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 STUDENTS ATTENDANCE NOT MARKED SCHOOL LIST AS ON 13.06.2019


Wednesday, 12 June 2019

12.06.2019 -  அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       2019 -2020 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு (தமிழ் வழி/ஆங்கிலவழி/உருதுவழி)  தங்களது பள்ளியில் பெறப்பட்ட மற்றும் பெறப்படவேண்டிய விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்,  காலனிகள் மற்றும் புத்தகப்பைகள் ஆகியவைகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவம் 1 முதல் 3 வரையில் பூர்த்தி செய்து தனித்தனி தாளில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக ஆ3 பிரிவில்  13.06.2019 (வியாழக்கிழமை) மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் ATTACHMENT   -

குறிப்பு 

6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை போதிக்கும் பாட ஆசிரியர்களுக்கான கையேடு (Table copy) தலைமை ஆசிரியரின் ஒப்புகையோடு உரிய படிவத்தில் (Indent)பூர்த்தி செய்து தனி நபர் மூலம் பொன்னேரி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் பெற்றுக்கொள்ளவும் 
12.06.2019 - தேர்வுகள் அவரசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 14.06.2019 முதல் 22.06.2019 வரை நடைபெறவுள்ள 11ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு சிறப்புத்துணைத் தேர்வுகள் ஜுன் 2019-க்கான தேர்வு பணியில் பணிபுரிய அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதும் ஆசிரியர்களாக ஆணைப்பெறப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நாளை 13.06.2019 அன்று மதியம் 02.00 மணிக்கு தேர்வுமையங்களில் நடைபெறும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
12.06.2019 - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நாளை (13.06.2019) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்குமாறு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
12.06.2019 - அனைத்து  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு

       KH - தலைப்பில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் 2018 - 19 பவானிசாகர் பயிற்சிக்கு சென்று வந்தவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று  (12.06.2019 ) மாலைக்கு இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Tuesday, 11 June 2019

12.06.2019  - பள்ளிக் கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதிற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம்  15.06.2019க்குள் விண்ணப்பிக்கதெரிவிக்கப்படுகிறது. Attachment    Attachment 


11.06.2019 -  கோவை தணிக்கை - கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கை பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத்திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விவரம்.  Attachment 

Monday, 10 June 2019


அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு.
          பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பாக கோரப்பட்டுள்ள தகவல் 2017 -2018 மற்றும் 2018-2019 ம் கல்வியாண்டின் விலையில்லா  கல்வி உபகரணங்கள் இருப்பு மற்றும் தேவைப்பட்டியல் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்திசெய்து 11.06.2019 அன்று 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com-க்கு  அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT


10.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கம் - வேலூர் மாவட்டம் 12.06.2019 குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கொண்டாடுதல் - 12.06.2019 அன்று காலை 11.00 மணிக்கு இணைப்பில் உள்ள உறுதிமொழியினை எடுக்க வேண்டும், மேலும் மேற்படி உறுதிமொழி எடுக்கப்பட்ட விவரத்தினை  புகைப்படத்துடன்  15.06.2019க்குள்  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால் 13.06.2019 அன்று   உறுதி மொழி  எடுக்கப்பட் விவரம்  மற்றும் புகைப்படத்துடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Saturday, 8 June 2019

08.06.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு வருகை புரியாத / தேர்ச்சி பெறாத பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் கருத்தியல் செய்முறைத்தேர்விற்கு வருகை புரிந்து செய்முறை தேர்விற்கு வருகை புரியாத மாணாக்கர்கள் இருப்பின் 10.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு (கருத்தியல் தேர்விற்க்கு வருகை புரிந்து 80 சதவீதம் வருகை பதிவேடு உள்ள மாணாக்கர்கள் உரிய பதிவேட்டுடன்)  செய்முறை தேர்விற்கு வருகை புரியாத / தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ள  அறிவுறுத்துமாறு தலைமையாசிரியர்கள் ,மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
குறிப்பு:- அறிவியல் செய்முறை தேர்வு தேதி 10.06.2019 மற்றும் 11.06.2019 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் நடைபெறும்.

Thursday, 6 June 2019

07.06.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. தகுதி வாய்ந்தோர் எவரது பெயரும் விடுபடவில்லை என்பதற்கான இணைப்பில் உள்ளவாறு சான்றினை வழங்க கோருதல்.  Attachment 
07.06.2019 - அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

  தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி பாதுகாப்பு கொள்கை 2016 சாலை பாதுகாப்பு மன்றம்/ பள்ளி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அனைத்து கல்வி இணை செயல்பாடுகள் சார்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் மற்றும் 2019-2020 கல்வியாண்டில் செயல்பாடுத்தப்டவுள்ள பள்ளி செயல் திட்டங்கள் சார்பான விவரம் கோருதல்.  ATTACHMENT 

07.06.2019 – அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) ஜூன் 2019 -  08.06.2019 மற்றும் 09.06.2019 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இணைப்பில் உள்ள அறைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 07.06.2019 (இன்று) பிற்பகல் 12.00 மணிக்கு சார்ந்த தேர்வு மையங்களில்  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நடத்தும் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து உடன் விடுவித்து அனுப்பிவைக்குமாறு இணைப்பில் உள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Wednesday, 5 June 2019

05.06.2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுகள் (TET) 2019 - அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையங்களில் 08.06.2019 மற்றும் 09.06.2019 அன்று நடைபெறவுள்ள ஜுன் - 2019 ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - 2019) -க்கான  அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம்  செய்யும் பொருட்டு பட்டியலில்  இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 06.06.2019 அன்று பிற்பகல் 3.00 மணியளவில்  திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல்  கலந்துக்கொண்டு  நியமன ஆணை பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறும்  அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Monday, 3 June 2019

04.06.2019 -  மிக மிக அவரசம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 - ஆய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை 06.06.2019 அன்று சார்ந்த பள்ளிக்கு செல்லும் வகையில் 05.06.2019 மாலை பணியிலிருந்து  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கலாகிறது.  மேலும் இப்பொருள் சார்ந்து SSA  அலுவலகம், காட்பாடியில் 04.06.2019 அன்று மாலை 2.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள்  அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT . 
03.06.2019- மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்புத்துணைத்தேர்வு ஜுன் 2019 தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஜூன் 2019 மேல்நிலை முதலாம ஆண்டு சிறப்புத் துணைத்தேர்விற்கான 1. Attendance Sheet,  2. Center wise Nominall Roll, 3.Hall Seating Plan, 4. Script cover details-னை 07.06.2019 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஜுன் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுமைய தலைமையாசிரிய்ர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
03.06.2019 -  தொழிற்கல்வி ஆசிரியர் (விவசாயம்) 100 தற்காலிக பணியிடங்கள் மே 2019 மாதத்திற்கு ஊதிய  கொடுப்பாணை (Pay Authorization)  வழங்கக் கோருதல் ATTACHMENT

Sunday, 2 June 2019

03.06.2019  - மிக மிக அவசரம் தனி கவனம்

அனைத்து  அரசு/அரசு உதவிபெறும்  தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு 

      பள்ளிகளில் EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் சுயவிவரங்கள் பகுதி-1 உள்ளீடு செய்து முடிக்கப்பட்டது பகுதி -2 ஐ  06.06.2019-க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  Attachment 

Saturday, 1 June 2019


31.05.2019 - அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு - RTE 25% இடஒதுக்கீடு சேர்க்கை சார்பாக
1. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் 31.05.2019 அன்று வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் சிறப்புப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்
2. பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்
3. வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்படுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 06.06.2019 அன்று Lot System முறையில் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்குஅலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமால் சேர்க்கை வழங்குமாறு அனைத்து நர்சரி/பிரைமரி/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   
இணைப்பு:-