Friday, 31 May 2019

31.05.2019 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத்துணைத்தேர்வு ஜுன் 2019 தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஜூன் 2019 சிறப்புத் துணைத்தேர்விற்கான 1. Attendance Sheet,  2. Center wise Nominall Roll, 3.Hall Seating Plan, 4. Script cover details-னை 31.05.2019 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஜுன் 2019, மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுமைய தலைமையாசிரிய்ர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
31.05.2019 அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


     ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுகாவலர், பெருக்குபவர்,  தோட்டபணியாளர், நீர்கொணருபவர்,  துப்புரவு பணியாளர் (அரசாணை எண்.47 தவிர்த்து) ஆகியோருக்கு மாறுதல் கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.  அரசாணை எண். 47-ன் படி துப்புரவாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு அரசாணை எண்.47ன்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் மட்டும்  இடமாறுதல் / மனமொத்த மாறுதல் விண்ணப்பம்  வரவேற்கப்படுகிறது. ATTACHMENT   
31.05.2019 - அனைத்து  அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளதால் உரிய கருத்துருவினை இணைப்பில் கோரப்பட்டுள்ள இணைப்புகளுடன் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 07.06.2019 அன்று சார்ந்த ஆய்வக உதவியாளர்  மூலம் நேரில் ஒப்படைத்திடுமாறு அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Thursday, 30 May 2019

30.05.2019 - தேர்வுகள் - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 01.06.2019 அன்று மதியம் 02.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலுகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி மாணாக்கர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 03.06.2019 காலை 10.00 மணி முதல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதனை தெரிவிக்கலாகிறது. சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
30.05.2019 - அனைத்து ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும்  அரசு வனத்துறை பள்ளிகளிலுள்ள கழிவறைகளை பராமரிக்க நிதி வழங்கப்பட்டு வரும் பள்ளிகளை தவிர்த்து விடுபட்ட பள்ளிகளின்  விவரத்தினை இணைப்பில் கோரப்பட்டுள்ளவாறு சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.   ATTACHMENT 

Monday, 27 May 2019

27.05.2019 -  தேர்வுகள் அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 

    மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு (+1 ARREAR) / இரண்டாமாண்டு மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணாக்கர்களின் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களின்  பட்டியல் 27.05.2019 பிற்பகல் 02.00 மணி முதல் scan.tndge.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான  அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் .  ATTACHMENT 
27.05.2019 -  தேர்வுகள் - அனைத்து அரசு / நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

      மார்ச் 2019 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் 27.05.2019 -ல் scan.tndge.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான  அரசுத்  தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்  ATTACHMENT 

Sunday, 26 May 2019

27.05.2019-  நிதியுதவி/மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் மற்றும் தாளார்கள்  கவனத்திற்கு 

   தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 கீழ் மனுதாரர் கோரிய தகவல்   வரிசை எண்.3 மற்றும் 4ல் காணும் கோரிக்கை வினாக்களுக்கு தங்கள் பள்ளி சார்பாக மனுதாரருக்கு பதில் அனுப்பிவிட்டு அதன் விபரம் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 
26.05.2019 - தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப்பள்ளி/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 27.05.2019 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்காண் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டதிற்கு சார்ந்த பள்ளித் தலைமையசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Thursday, 23 May 2019

24.05.2019 - மிக மிக அவசரம் 

அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      2019-2020ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 24.05.2019 அன்றைய தேதி முதல் 30.05.2019 நேரடியாக பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் ஆயத்த நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பாடநூல் விநியோகம் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் :- 9994632779,  9025639976

Tuesday, 21 May 2019


22.05.2019 -  தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 
    மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாமாண்டு மற்றும் இடைநிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2019 தொடர்பாக தேர்வெழுதிய பள்ளி மாணவ/மாணவிகளின் தேர்வுக் கட்டணம் விலக்கு பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விவரத்தை படிவம் 1,2,3 ல் பூர்த்தி செய்து நாளை 23.05.2019 காலை 11.30 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலமாக நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. Attachment

Friday, 17 May 2019

17.05.2019 - மிக மிக அவசரம் - மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு EMIS  சார்பான  கூட்டம் 

    இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களை  கீழ்காண் கூட்டத்தில் சமர்பிக்கப்பட  வேண்டும்



இடம் :-  அன்னை மீரா பொறியியல் கல்லூரி,
                   பூட்டுத்தாக்கு
நாள் :- 20.05.2019  

நேரம் :-   காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை   

ATTACHMENT 

Thursday, 16 May 2019

16.05.2019 - அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் /நிதியுதவி /மெட்ரிக் பள்ளிகளின்  முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு 

கோடை விடுமுறையின் போது மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும்  பள்ளிகளில் கட்டணம் அரசு நிர்னயத்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது   என அறிவுறுத்தப்படுகிறது. 
16.05.2019 -  நடந்து முடிந்த 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட உழைத்திட்ட சமுதாயத்தின் வழிகாட்டிகளாய் திகழும் அனைத்து வகை அரசு/நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,  மெட்ரிக்  பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.  Attachment 

Tuesday, 14 May 2019

14.05.2019
                     ப.வெண் 02/ஆ1/2019  நாள் 14.05.2019 

                          அரசு /நிதியுதவி உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்  வேலூர் மாவட்ட கருவூல அலுவலர் அவர்களின் அறிவுரைகளின் படி ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 முதல் நடைமுறைப்படுத்த தெரிவிக்கலாகிறது.

இணைப்பு

 மாவட்ட கருவூல அலுவலர்  வேலூர் அவர்களின் கடிதம்.
 ATTACHEMENT

Monday, 13 May 2019

13.05.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

மிக மிக அவரசம் தனி கவனம்

    EMIS - ல் Staff- Student- School Profile  உள்ளீடு செய்தல் சார்பாக  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.

அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல / வனத்துறை உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கு

நாள்.  14.05.2019  செவ்வாய்கிழமை

நேரம் :  காலை 10.30 மணி

இடம் : - தந்தை பெரியார் கட்டிட அரங்கம், அன்னை
                     மிரா பொறியியல் கல்லூரி, அரப்பாக்கம், 
                     பூட்டுத்தாக்கு

நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ.பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு 

 நாள்.       14.05.2019 

நேரம் :  காலை 11.30 மணி

இடம் : - காமராஜர் கட்டிட அரங்கம் அன்னை மிரா
                      பொறியியல் கல்லூரி, அரப்பாக்கம், பூட்டுத்தாக்கு
13.05.2019 -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்களை உரிய காலத்திற்குள்  அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலகத்திற்கு ஒரு நகலும், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில்  ஒரு நகலும் அனுப்பிவைக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Friday, 10 May 2019

10.05.2019 - அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

       அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ள விவரத்தினை இணைப்பில் உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து 14.05.2019 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி  deotpt2015@gmail.com-க்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலக B2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Thursday, 9 May 2019

10.05.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணக்கர்கள் ஜுன் 2019 துணைத்தேர்விற்கு விண்ணபிக்க தவறிய தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 13.05.2019 மற்றும் 14.05.2019 ஆகிய இருதினங்களில் ஆன்லைனில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விண்ணபித்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்.         12th Instructions         &           10th Instructions
09.05.2019 -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

       தமிழ்நாடு அமைச்சுப்பணி - பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து  இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணிமாறுதல்  மூலம் நியமனம் குறித்து இணைப்பில்  உள்ள அறிவுரைகளை பின்பற்றி 15.03.2019 நிலவரப்படி முன்னுரிமை பட்டியல் தயார் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார்செய்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.05.2019 அன்று இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment 
09.05.2019 - தேர்வுகள் - அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்புத்துணைத் தேர்வு ஜுன் 2019 - தேர்வர்கள் பள்ளிகள்/தேர்வு மையங்கள் மூலம் 10.05.2019 முதல் 14.05.2019 வரையில் ஆன்லைனில் விண்ணப்பித்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். Attachment 

Tuesday, 7 May 2019

08.05.2019  - தேர்வுகள் மிக மிக அவசரம் - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 
அனைத்து  அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசியர்கள் /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  கவனத்திற்கு
  
    மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பாக  தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர், (ஆங்கிலம்/தமிழ்) பிறந்த தேதி, பயிற்று மொழி (Medium) , புகைப்படம், பள்ளியின் பெயர்  ஆகியவற்றில் மட்டும் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.    
        பெயர்பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தினை 09.05.2019 காலை 11.00க்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க வேண்டும். திருத்தங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். திருத்தங்கள் இருப்பின் உரிய காலத்திற்குள் திருத்தங்களை மேற்கொள்ளாத  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT 

Monday, 6 May 2019

07.05.2019 -  அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு

        பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புதுறையின் இணையதளத்தில் மாணவர்களின் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல் Attachment -1 ATTACHMENT -2
06.05.2019 - தேர்வுகள் - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு சிறப்புத்துணைத்தேர்வு ஜூன் 2019 - தேர்வர்கள் பள்ளிகள் வாயிலாகவும் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் 06.05.2019 முதல் 10.05.2019 வரையில் விண்ணப்பித்தல் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பத்தொகையினை செலுத்திய பிறகு அதற்கான இரசீதினை பதிவிறக்கம் செய்து அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 13.05.2019க்குள் ஒப்படைப்பதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். Attachment 

06.05.2019 - கோவை தணிக்கை - அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

      கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கை பணியாளர்களின்  மே 2019 மாத உத்தேச பயணத்திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விவரம்.  ATTACHMENT 

Sunday, 5 May 2019

06.05.2019 - அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

கல்வி உதவித் தொகை - 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் SC/ST மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ECS மூலமாக சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில்  வரவு வைக்கப்பட்டுள்ளது.  அப்பணத்தை உரிய மாணவிகளுக்கு வங்கி மூலமாக வழங்கி,  வழங்கியதற்கான பயனீட்டுச் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்ட பக்கத்தின் நகலினை இரு பிரதிகளில் 13.05.2019- க்கு இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Friday, 3 May 2019

03.05.2019 - தேர்வுகள் அவசரம் 

            பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்  பொதுத்தேர்வுக்  கால அட்டவனை மற்றும் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க 06.05.2019 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் 10.05.2019 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT 

Thursday, 2 May 2019

03.05.2019 -  மிக மிக அவரசம் உடன் நடவடிக்கை  அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

         திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ/மாணவியர்களின் பெயர்கள் அனைத்தும் EMISல் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2018 - 2019 பயனாளியாக EMIS - இல் பதிவு செய்யப்பட்டு அதன் விவரத்தினை இன்று மாலை 5.00 க்குள் இவ்வலுவலகத்திற்கு  தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது 


  03.05.2019 - மிக மிக அவரசம் 

அனைத்து நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கவத்திற்கு 

       அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளின் பெயர்கள் மற்றும் கூட்டாண்மையின் கீழ்வுள்ள பள்ளிகளின் பெயர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.05.2019  காலை 10.00 மணிக்கு அ2 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT