Thursday, 28 February 2019

28.02.2019 -   மாணாக்கர்களின் வருகை பதிவு (STUDENT ATTENDANCE APP) பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
 28.02.2019 - நினைவூட்டல் - 1 NMMS - 2016 - 2017 ம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் பிரதியினை குறுந்தகடு   (CD)-இல் பதிவு செய்து இவ்வலுவலகத்தில் 14.02.2019 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நாள் வரையில் கீழ்காண் பள்ளிகள் பூர்த்தி செய்யாதது வருத்தத்திற்குறியதாகும்,  இப்பள்ளிகள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தினை இன்று மாலை 5.00 மணிக்குள்  பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
   மாணாக்கர்களின் விவரங்களை உரிய காலத்திற்குள் வழங்கவில்லை எனில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. ONLINE ATTACHMENT 

1.தொன்போஸ்கோ மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை
2.அரசு மே.நி.பள்ளி, ஆண்டியப்பனுர்
3.அரசு மே.நி.பள்ளி, பென்னேரி
4.அரசு மே.நி .பள்ளி, வடுகமுத்தம்பட்டி
5.அரசு மே.நி.பள்ளி, பூங்குளம்
6.அரசு.மே.நி.பள்ளி, மிட்டூர்
7.அரசு.ஆ மே.நி.பள்ளி, மடவாளம்
8. அரசு.ம மே.நி.பள்ளி, மடவாளம்

Wednesday, 27 February 2019

28.02.2019 - பாரத சாரண, சாரணியம் திருப்பத்தூர் கல்வி மாவட்டம்  அனைத்து வகை அரசு /நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி  பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணியர்களுக்கு ஒருநாள் திருத்திய சோபன் தேர்வு முகாம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 02.03.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்லாகிறது. Attachment 
28.02.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆணைகளை திருபபத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  காலை 11.00 மணிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

27.02.2019 -அனைத்து தேர்வு மையங்களில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பான விவரங்கள் 28.02.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து மேல்நிலைத்தேர்வு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,
தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுபணிக்கு வருகைபுரிந்துள்ளவர்கள் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்களில் நாளை பிற்பகல் 3.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்

Tuesday, 26 February 2019

27.02.2019 - 2018 -2019 கல்வி உதவித் தொகை -1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்தப்படவுள்ளது, எனவே இணைப்பில் உள்ள  படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2019 மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com அனுப்பி வைக்குமாறு அரசு /நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் எவரும் இல்லை எனில்  இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்   Attachment   FORM 
27.02.2019 - மிக மிக அவசரம் - வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கு ஆங்கில வழி கற்பிப்புக்கட்டணம் (English medium fees reimbursement) பெற்று வழங்க கேட்புபட்டியல் (Claims) இதுவரையில் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக கேட்பு பட்டியலை 28.02.2019ஆம் தேதிக்குள் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 25 February 2019

25.02.2019 - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டின் 6-ஆம் வகுப்பு  MBC   மாணவிகளுக்கான  கல்வி உதவித்தொகை மற்றும்  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மாணவிகளுக்கான  கல்வி உதவித் தொகைகள்  மாவட்ட ஆட்சியரிடமிருந்து இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.  இத்தொகையினை நேரிடையாக பள்ளித் தலைமை ஆசிரியரின் வங்கிக் கணக்கிற்கு ECS மூலம் அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  எனவே, கீழ்க்காணும் விபரங்களுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலினையும் இணைத்து 27.02.2019க்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு இணைப்பில் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT
வேண்டும் தகவல்கள்
1.தலைமை ஆசிரியர் பெயரில்  உள்ள 
    வங்கிக் கணக்கு எண் (Account Number) : 
2.வங்கிக் கிளையின் பெயர் :
3.வங்கிக் கிணையின் IFSC கோடு எண் :
4.வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் : 
(கணக்கு எண் அறியும் பொருட்டு)
25.02.2019 - நினைவுட்டல்-2 - தேர்வுகள் அவசரம் - - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு முடிந்தவடைந்தவுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை (05.02.2019 மற்றும் 21.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டவாறு) செய்முறை தேர்வு முடிவடைந்தவுடன் உடனடியாக ஒப்படைக்க அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

          தேர்வு கட்டணம் (Exam Fees) மற்றும் அட்டவணை பட்டியல் கட்டணத்தினை  (TML Fees) சமர்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாளாக அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படுள்ளது, எனவே ஆன்லைனில் பணம் செலுத்தாத பள்ளிகள் உடனடியாக செலுத்துமாறும் (05.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டகல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு) படிவங்களை மூன்று நகல்களில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
25.02.2019 -அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிமெட்ரிக் பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள்,  முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

         EMIS-  வருகைப் பதிவேட்டை(Attendance)  பதிவு செய்யாத பள்ளிகளின் சதவீதம் இன்றுவரை குறைக்கப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கது எனவே EMIS-  வருகைப் பதிவேட்டை(Attendance)  நாளை (26.02.2019) -க்குள் நடைமுறைப்படுத்தி அதன் விவரத்தை வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோருக்கு உடன் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் பெயர்பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

    
       
25.02.2019 - திருப்பத்தூர் சார்ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் 'SRDPS ' தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மூலம் இணைப்பில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு   நிகழ்ச்சி 26.02.2019, 27.02.2019  காலை / மாலை ஆகிய இருவேளையில் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சிக்கு வரும் தன்னார்வலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கிடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 22 February 2019

22.02.2019 - திருப்பத்தூர் சார்ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் 'SRDPS ' தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மூலம் இணைப்பில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு   நிகழ்ச்சி 25.02.2019 காலை / மாலை ஆகிய இருவேளையில் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சிக்கு வரும் தன்னார்வலர்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கிடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  பள்ளிகளின் பெயர்பட்டியல்

Thursday, 21 February 2019

22.02.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் (Centre wise Nominal Roll), வருகைத்தாட்கள்  (Attendance Sheet), அறைத்திட்டம் (Hall Seating Plan), List of Register Numbers to be pasted on the answer script cover மற்றும் C.S.D. Forms -யினை 25.02.2019 முதல் 02.03.2019 வரையில் தேர்வு மைய பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
22.02.2019 - தேர்வுகள் மிக மிக அவசரம்மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 -  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான தேர்வு பணிக்கான ஆணையினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இன்று 22.02.2019 மதியம் 02.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகான வினாத்தாட்கள் போதுமான அளவில் உள்ளதை (Question Paper Sufficiency) இன்று மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாட்கள் கட்டுகாப்பாளர்களிடம் சரிபார்த்து கொள்ளுமாறு தேர்வுமையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

21.02.2019 -  மிக மிக அவசரம்
2017 -2018 ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைக்கான காசோலையை பெற்றுக் கொண்டமைக்கு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து  பற்றொப்ப ரசீது இதுநாள் வரை பெறப்படவில்லை.  எனவே, இணைப்பில் உள்ள பற்றொப்ப ரசீது (மாதிரி) படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 4 நகல்களில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 22.02.2019 பிற்பகல் 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குகமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  School list ,  Attachment 

Wednesday, 20 February 2019

21.02.2019 - அனைத்து வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

       நாடாளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy club)- புத்தகங்கள் (Resource Guides)  வரப்பெற்றுள்ளது.  இணைப்பில் உள்ள பள்ளிகள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து இன்றே  பெற்றுச் செல்லுமாறு சார்ந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment  
20.02.2019 -  மிக மிக அவசரம்
      வளரிளம் பருவ மாணவ/மாணவியர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் விதமான பயிற்சிக்கு கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாசிரியர்கள் 22.02.2019 காலை 9.30 மணியாளவில் வேலூர் ரவுண்டானா அருகில் உள்ள ஏலகிரி அரங்கில் (பஸ்ரூட்-1) நடைபெறவுள்ளது.  இப்பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள 21.02.2019 பிற்பகல் விடுவிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT-1 Attachment -2
21.02.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச 2019 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத்தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் - தேதி மாற்றம் செய்த அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் Attachment 
For Regular Candidates

Empty Mark Sheets for Practical Exam with           -     21.02.2019 After Noon to 28.02.2019
RegisterNumber download from
(for regular candidates)

Practical Examination to be conducted                     -     22.02.2019 to 28.02.2019

For Private Candidates 

Hall Ticket Download                                                  -    25.02.2019 After Noon Onwards

Practical Examination to be conducted                     -    26.02.2019 to 28.02.2019

Tuesday, 19 February 2019

19.02.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 

     தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 - அரசு/ நிதியுதவி  உயர்/மேல்நிலைப் பள்ளிகள்/தொடக்க /நடுநிலைப் பள்ளிகள் சார்பாக இணைப்பில் கோரிய தகவல்களை உரிய  காலகெடுவுக்குள் மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Monday, 18 February 2019

19.02.2019- திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரியும் வகையில் இணைப்பில் உள்ள பணியாளர்களை இன்று (19.02.2019) விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
19.02.2019 -  அனைத்து வகை /நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் SC/ST  மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை  Pre Matric (9th & 10th) Post Matric (11th & 12th) வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் Renewal Process  மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரிய தகவல்களை நிறைவு செய்து  deotpt2015@gmail.com என்ற இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  


18.02.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை தேர்வு மையத்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 – தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் (Center wise Nominal Roll), வருகைத்தாள் (Attendance Sheet), இருக்கைத் திட்டம் (Hall Seating Plan (I & II)) மற்றும் CSD Forms ஆகியவற்றினை இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி  18.02.2019 முதல் 24.02.2019   -க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவிறக்கம் செய்துக்கொள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்ட மேல்நிலை தேர்வுமையத் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment


18.02.2019 - அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு

      இந்நாள் வரையில் EMIS -  வருகைப் பதிவேட்டை (Attendance)  பதிவு செய்யாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்வருகை பதிவை தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருகை பதிவை தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
    
       மேலும் நாளை நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின் போது இணைப்பில் உள்ள  Form -I ஐ நிறைவு செய்து உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

18.02.2019 - தேர்வுகள் அவசரம்மார்ச் 2019 - மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் – இணைப்பில் உள்ளவாறு பெற்றுச்செல்ல திருப்பத்தூர் கல்வி மாவட்ட மேல்நிலை தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் - 

மார்ச் 2019 - மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குதல் சார்பாக செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் கல்வி மாவட்ட மேல்நிலை தேர்வுமைய தலைமையாசிரியர்கள் 20.02.2019 அன்று மதியம் 02.00 மணி முதல் மாலை 05.45 மணி வரையில் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்று கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Sunday, 17 February 2019

18.02.2019 - கோவை தணிக்கை - அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
    திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் உள்ள  அனைத்து வகை அரசு/நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கோவை தணிக்கை கூட்டமர்வு (Join sitting) திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 20.02.2018 அன்று நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தணிக்கை தடை நிலுவைப் பத்திகளை சரி செய்துக்கொள்ள  அரசு/நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

18.02.2019   பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2019  - அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சார்பாக அறிவியல் பாட செய்முறைத்தேர்வு புறத்தேர்வாளர்கள் நியமனம் தொடர்பாக ஆயத்தக்கூட்டம் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19.02.2019 நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, 14 February 2019

15.02.2019 -  VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு டிசம்பர் -2018 , ஜனவரி மற்றும் பிப்ரவரி 2019 - ஊதியம் வழங்கிய  விவரங்களை  இன்று (15.02.2019) பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் வழங்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.       
         இப்பொருள் தொடர்பான  மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை  வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  Attachment     

Wednesday, 13 February 2019


14.02.2019 – மிக அவசரம் - அனைத்து வகை அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு –
       2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் மற்றும் 2018-19 கல்வியாண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் விவரங்களை பெயர்ப்பட்டியலுடன் (Nominal Roll) ஒப்பிட்டு மடிக்கணினி (Laptop) கேட்புபட்டியல் விவரத்தினை ELCOT இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட கேட்புபட்டியலின் நகல் (Printout), இணைப்பில் உள்ள படிவங்கள் மற்றும் மேற்கண்ட வகுப்புகளுக்கான மாணாக்கர்களின் பெயர் பட்டியல் நகலினையும் (Nominal Roll) சேர்த்து தங்கள் பள்ளியில் பணிபுரியும் கணினி ஆசிரியர் அல்லது கணினி தெரிந்த ஆசிரியர் வழியாக மடிக்கணினியுடன் காட்பாடி, காந்திநகர் SSA அலுவலகத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு திருப்பத்தூர் கல்வி மாவட்ட அனைத்து வகை அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: பெயர்பட்டியலின் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் ELCOT இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும்.  FORMS
(குறிப்பு :- காந்திரநகர் SSA அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் (நாளை) 15.02.2019 காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

13.02.2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி /ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  - நாளை (14.02.2019) காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் ERP பதிவு மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் கணினி தெரிந்த ஆசிரியர் ஒருவர் மடிக்கணினியுடன் (LAPTOP) அக்கூட்டத்தில்  கலந்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.  கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

1.  2011-12ஆம் ஆண்டு முதல் 2017-18 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் மற்றும்   
     மாணவர்களின் எண்ணிக்கை  ERP பதிவேடு ஆகியவை கொண்டுவர வேண்டும்.ATTACHMENT


13.02.2019 - விலையில்லா மிதிவண்டி 2017-2018 மற்றும் 2018-2019ம் கல்வியாண்டில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்கிய விவரங்களை கோருதல் – சார்பு.


பெறுநர்
அரசு / நகரவை / நிதியுதவி / பகுதி நிதியுதவி
/ வனத்துறை / ஆதிதிராவிடர்
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
CLICK HERE TO DOWNLOAD
13.02.2019 -  கருவூல கணக்குத் துறை சார்பான சுற்றறிக்கை - திருப்பத்தூர் கல்வி மாவட்ட நிர்வாகப் பகுதியில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு

         2018-2019 AY: 2019-2020ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கீடுத் தாளுடன் இணைப்பில் குறிப்பிட்ட சான்றினையும் 02/2019 மாத ஊதியப்பட்டியலுடன் இணைத்து கருவூலத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களும்   (All DDO's) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
13.02.2019 -

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணையதளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணையதளத்தில் ERP Entry  மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த  அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்  (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE  YEARWISE PENDING SCHOOLS 

Tuesday, 12 February 2019

13.02.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 
நடைபெற்று முடிந்த முதல் திருப்புதல் தேர்வு ( 21.01.2019 முதல் 01.02.2019 வரை) தேர்ச்சி அறிக்கையினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் 14.02.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment               forms

13.02.2019 - மிக மிக அவசரம் - ATAL TINKERING LABORATORIES –  இணைப்பில் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள் ATAL TINKERING LABORATORIES இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ww://niti.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15.02.2019 மாலைக்குள் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டுமென சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

12.02.2019 -  மிகமிக அவசரம் - அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு  -  அங்கீகாரம் சார்பான விவரங்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பணிந்தனுப்பிவைக்க வேண்டியுள்ளதால் 11.02.2019 நிலவரப்படி பள்ளியின் அங்கீகாரம் சார்பான  கடைசியாக பெற்ற அங்கீகார ஆணை நகலினை 13.02.2019 காலை 10.00-க்கு  இவ்வலுவலகத்திற்கு தனிநபர் மூலம்  நேரில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது.  
        மேலும் நர்சரி/பிரைமரி பள்ளிகளின் அங்கீகார நகலினை சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க  வேண்டுமாய் நர்சரி/பிரைமரி பள்ளிகளின் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Monday, 11 February 2019

12.02.2019 - NMMS - 2016 - 2017 ம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் பிரதியினை குறுந்தகடு   (CD)-இல் பதிவு செய்து இவ்வலுவலகத்தில் 14.02.2019 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொடுக்கப்பட்ட ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மாணாக்கர்களின் விவரங்களை உரிய காலத்திற்குள் வழங்கவில்லை எனில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. ONLINE ATTACHMENT 
11.02.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு  மாணாக்கரின் பெயர் பட்டியல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து 11-02-2019 முதல்  12-02-2019 வரை நாட்களில் இரவு 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலான நேரத்தில் மட்டும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.  திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விவரத்தினை 12-02-2019 மாலை 03.00-க்குள் வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலக பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு :- +1 NR Downloading
11.02.2019 - ஆதிதிராவிடர் நலம் - இணையவழி கல்வி உதவித் தொகை 2018-2019 ஆம் ஆண்டிற்கான பீரீமெட்ரிக் (9th & 10th) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித் தொகை SC, ST, SCC  மாணக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக  Renewal  பணியினை விரைந்து செய்து முடிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Sunday, 10 February 2019

11.02.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
    2018- 2019ஆம் நிதியாண்டில் அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி  (AEBAS-Aadhar Enabled Bio Metric Attendance System)  முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல் சார்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களின் எண்ணிக்கையை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இன்று (11.02.2019) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  
11.02.2019 - மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11.02.2019 - தேர்வுகள் - தேர்வுமைய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான முகப்புத்தாட்கள் (TOP SHEETS) மற்றும் எழுதுப்பொருட்களை 12.02.2019 அன்று மதியம் 02.00 மணி முதல் 05.45 மணி வரையில் திருப்பத்தூர், இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்துவகை மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மையத் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

Friday, 8 February 2019

09.02.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பெயர்பட்டியல் பதிவிறக்கம் சார்பாக (+2 Nominal Roll Download - Reg) Attachment
08.02.2019 - மிக மிக அவசரம் - தனிகவனம்
அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    EMIS ONLINE PORTAL - ல் இது நாள்வரை தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை பதிவு செய்யாமல் உள்ள தலைமையாசிரியர்கள் உடனடியாக உரிய விபரங்களை 09.02.2019 முற்பகலுக்குள் முடித்து அதன் அறிக்கையை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
பதிவு செய்யாத பள்ளிகள் விவரம்
ஆலங்காயம் ஒன்றியம்  - 79
கந்திலி ஒன்றியம் - 231
ஜோலார்பேட்டை ஒன்றியம் - 09  
08.02.2019 -
01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுலை மொழி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பாக கருத்துருக்கள் பெறப்பட்டது,  இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 08.02.2019 இன்று மாலை 5.00 மணிக்கு ஆ1 பிரிவில் சரிபார்ப்பு பட்டியலில் கையொப்பமிட தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Thursday, 7 February 2019

08.02.2019 -  நினைவூட்டல் -  மிக மிக அவசரம் - 
அனைத்து வகை  அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - (BIOMETRIC ATTENDANCE SYSTEM)  USER REGISTRATION  செய்வதற்கான வழிமுறைகள் 

        (BIOMETRIC ATTENDANCE SYSTEM)  இணைப்பில் உள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் USER REGISTRATION இந்நாள்வரையில் செய்யாதது வருத்தத்திற்குரியது எனவே 12.02.2019 அன்றைக்குள் அனைத்து தலைமை ஆசிரியர்களும் (BIOMETRIC ATTENDANCE SYSTEM) USER REGISTRATION  முடித்திருக்க வேண்டும். பதிவு செய்யாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது என்ற விவரம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.    Attachment  

Wednesday, 6 February 2019

07.02.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதவர்கள் கவனத்திற்கு 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை 11.02.2019 பிற்பகல் முதல் 12.02.2019 வரை பதிவிறக்கம் செய்தல், திருத்தங்கள் இருப்பின் சிவப்பு மையினால் திருத்தங்கள் செய்து மற்றும் திருத்தங்கள் இல்லை எனில் பதிவிறக்கம் செய்த பெயர்ப்பட்டியலில் "இன்மை"-யினை பதிவு செய்து திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 12.02.2019 மாலை 04.00 மணிக்குள் தவறாது ஒப்படைக்க சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment 
07.02.2019 -  அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளி மாணாக்கர்களின் பேருந்து பயண அட்டை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு  வரபெற்றுள்ளது அதனை  ஆளறிச்சான்றினை சமர்ப்பித்து பெற்றுச் செல்ல  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு


     மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை -      மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலுத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, 5 February 2019



06.02.2019 - நினைவூட்டல் -3 VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய  விவரங்களை  அனுப்ப இணைப்பில் உள்ள பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க  நகல் 2 பிரதிகளிலும்  மற்றும்  DEBIT & CREDIT  பக்க நகல்  இவ்வலுவலகத்தில் (06.02.2019) இன்று 04.30 மணிக்குள் நேரில்  வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் தொடர்பான  மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை  வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment     
06.02.2019 - அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளி கணக்குகள் தணிக்கை செய்தல் கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத் திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம்.   Attachment 
06.02.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
பாரத சாரண சாரணியம் 2018-2019 சாரண ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்  தொடர்பான சுற்றறிக்கை
இடம் :- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நாள் :-   08.02.2019 வெள்ளிக்கிழமை
நேரம் :- காலை 10.00 மணி   Attachment 
05.02.2019 -  தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 
   10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019- பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் 18.02.2019 முதல் 20.02.2019 வரை பதிவிறக்கம் (MARKS SHEET DOWNLOAD)  செய்வதற்கான அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்  Attachment 

Monday, 4 February 2019

05.02.2019 - தேர்வுகள்  அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைபள்ளிகள்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 

        மார்ச் 2019 பொதுத் தேர்வு  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள்  தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைன் வழியாக  05.02.2019 முதல் 28.02.2019 வரையிலான நாட்களுக்குள் தேர்வு கட்டணத்தொகையினை  செலுத்திவிட்டு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  05.03.2019 காலை 11.30 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment, FORM
          
05.02.2019 - VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய  விவரங்களை  அனுப்ப சார்ந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க  நகல் 2 பிரதிகளிலும்  மற்றும்  DEBIT & CREDIT  பக்க நகல்  இவ்வலுவலகத்தில் (05.02.2019) இன்று 2.30 மணிக்குள் நேரில்  வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் தொடர்பான  மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment   

05.02.2019 -  அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 
 22.01.2019 முதல் 30.01.2019 வரை வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரங்களை EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரின் சான்றொப்பத்துடன் கூடிய வருகைப்பதிவேட்டின் நகலினை இணைத்து ஒன்றிய வட்டார வள மைய அலுவலகத்தில் (BRC)  இன்று (05.02.2019) 12.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் நகலினை இவ்வலுவலகத்தில் இன்றே ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 

Sunday, 3 February 2019

04.02.2019 - தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் அறிவிப்பு
குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பு மாத்திரைகள் சுகாதாரத் துறையின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வருகின்ற 08.02.2019 மற்றும் 14.02.2019 ஆகிய நாட்களில் வழங்கப்படவுள்ளது, இப்பொருள் தொடர்பாக பள்ளிக்கு வருகைதரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
04.02.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 
22.01.2019 முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deottr@nic.in என்ற இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பிவிட்டு அதன் பிரதியினை  இன்று (04.02.2019) மாலை 5.00 மணிக்கு நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
          மேலும்  ஆசிரியர்கள்/அலுவலக பணியாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட 22.01.2019 தேதி  முதல் வருகைப்பதிவேட்டில்  உள்ள பக்கத்தின்  நகலுடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை தயார் செய்து இன்றே அனுப்பவேண்டியுள்ளதால் எவ்வித கால தாமதமின்றி தனி கவனம் செலுத்தி இப்பணியினை விரைந்து முடிக்க  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 1 February 2019

01.02.2019 -  அவசரம் தனிக்கவனம்
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையின் அவசர அறிவிப்பு
         பாரத ஸ்டேட் வங்கி தவிர பிற வங்கிகளில் ஊதியம் பெறும் அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் ஜனவரி - 2019 மாத ஊதியம் கருவூலத்துறை மூலம் 31.01.2019 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.  ஜேக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தி கலந்து கொண்ட அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு போரட்டத்தில் கலந்து கொண்ட  நாட்களுக்கான ஊதியத்தை கணக்கிட்டு 01.02.2019 மற்றும் 02.02.2019க்குள் அரசுக்கணக்கில் செலுத்தி செலுத்துச்சீட்டினையும் பெயர் பட்டியலினையும் சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூலத்தில் வழங்கிடுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.