Monday, 31 December 2018

31.12.2018 - 1. NMMS தேர்ச்சி பெற்ற 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் தகவல்கள் பள்ளிவாரியாக இணைக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் விவரங்களை சரிபார்த்து சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள்  திருத்தங்கள் இருப்பின் தலைமை ஆசிரியரின் முகப்பு கடித்ததுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். திருத்தங்கள் இல்லை எனில் “இன்மை” அறிக்கையினை சமர்பிக்க கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெயர் ஏதெனும் விடுபட்டிருப்பின் இணைப்பில் கண்ட படிவத்தின் படி பூர்த்தி செய்து குறுந்தகட்டுடன் (CD) சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
2. பத்தாம் வகுப்பில் பயிலும் NMMS தேர்ச்சி பெற்ற Renewal செய்யாத மாணாக்கர்களின் விவரங்கள் offline-ல் தட்டச்சு செய்து குறுந்த தகட்டுடன் இவ்வலுவலத்தில் 02.01.2019 அன்று காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்க சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 28 December 2018

28.12.2018 -  தேர்வுகள் அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  நடைபெற்று முடிந்த 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு, தேர்ச்சி அறிக்கை மற்றும் குறுந்தகட்டுடன் (CD) இணைப்பில் கண்டவாறு 04.01.2019 காலை 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கோருதல். Attachment & Forms 

Thursday, 27 December 2018

28.12.2018 - தேர்வுகள் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative key Answer) அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் 28.12.2018 அன்று வெளியிடப்படுகிறது.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை 03.01.2019க்கு nmmsdge@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

27.12.2018 - தேர்வுகள் -  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்  மார்ச்/ஏப்ரல் 2019 -  பள்ளி மாணாக்கர்களின் பெயர்பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டோர் - 11ஆம் வகுப்பு பயின்ற பள்ளியின் வழியாக தேர்வெழுத அனுமதி வழங்குதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்.  Attachment 
27.12.2018 - தேர்வுகள் - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை EMIS Portal-லில் பதிவேற்றம் செய்யப்படாத  பள்ளிகள் Offline-இல் பதிவேற்றம் செய்வது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்.  Attachment    

Wednesday, 26 December 2018

27.12.2018 - தேர்வுகள் -  மார்ச் 2019 -  பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் - தேர்வு  கால அட்டவணை குறித்த விவரங்கள் தெரிவித்தல் மற்றும் தேர்வு கால அட்டவணையினை தலைமை ஆசிரியாகள் அவரவர் பள்ளித் தகவல் பலகையில் (Notice Board) மாணவர்கள் பார்வையில் படும் வண்ணம் ஒட்டிவைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .    Attachment  
27.12.2018 -  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 
நடைபெறவுள்ள மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள்            27-12-2018 பிற்பகல் முதல் 05-01-2019 வரை வரவேற்க்கப்படுகிறது.
இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையமாக செயல்படும் பள்ளிகளுக்கு உரிய  ஆவணத்துடன் சென்று பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Tuesday, 25 December 2018

26.12.2018 - நினைவூட்டல் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 
மார்ச் 2019 பொதுத்தேர்வுகள் – தேர்வுகள் பணிக்காக நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்கள் விவரங்களை திருத்தங்கள் மேற்கொள்ளும்பொருட்டு கல்வி மாவட்டம் வாரியாக 20.12.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலக இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.  20.12.2018 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்  செயல்முறைகளை பின்பற்றி  அதில் தெரிவித்துள்ளபடி திருத்தங்கள் மேற்கொண்டு விவரங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 24.12.2018 அன்று ஒப்படைக்கும்படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நாள் வரையில் ஒப்படைக்காதது வருத்தத்திற்குரிய செயலாகும், எனவே கீழ் காணும் பள்ளிகள் பொதுத் தேர்வின் முக்கியத்துவம் கருத்தில் கொண்டு 27.12.2018 காலை 10.00 மணிக்குள்  இணைப்பில் உள்ள  PDF - ஐ பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதத்துடன்  தவறாது ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் திருத்தங்கள் இல்லாத பள்ளிகள் இன்மை அறிக்கையினை சமர்பிக்க தெரிவிக்கலாகிறது.


ஒப்படைக்காத பள்ளிகளின் விவரம்
1.ஆலங்காயம் (ஆ) 2.திருப்பத்தூர் (ஆ) 3.மடவாளம் (ம) 4.கெஜல்நாயக்கன்பட்டி (ம) 5.பென்னேரி 6. வௌக்கல்நத்தம் 7.வடுகமுத்தம்பட்டி 8. சுந்தரம்பள்ளி 9.பெரியகண்ணாலப்பட்டி 10.பேராம்பட்டு  11. மீனாட்சி , திருப்பத்தூர் (ம)  12 அச்சமங்கலம்                 13. திம்மணாமுத்தூர் 14.ஜடையனூர் 15.மிட்டூர் (ம) 16.செவ்வாத்தூர்        17. பெரியகுரும்பதெரு 18. மண்டலநாயனகுன்டா 19. வெங்களாபுரம்        20. கும்மிடிகான்பட்டி 21. தோரணம்பதி 22. பெரியகரம் 23.மலைரெட்டியூர் 24.ஆதியூர் 25.அண்ணான்டப்பட்டி 26. பால்நாங்குப்பம் 27.சந்திரபும் 28.திரியாலம் 29.சின்னகமியம்பட்டு 30.கொத்தக்கோட்டை 31. புத்தகரம்      32. மதனாஞ்சேரி 33. அங்கநாதவலசை 34 எலவம்பட்டி 35.கிழக்குபதனவாடி 36.வேட்டப்பட்டு 37. புலியூர் 38.அருந்ததியர் காலனி 39.ஜம்மனபுதூர் பூங்குளம் 40. கொடுமாம்பள்ளி 41.பெருமாம்பட்டு , 42.பூங்குளம் 43. ஜெயபுரம் 44.கேத்தான்பட்டி 45. நிமியம்பட்டு (ம) 46.நெக்குந்தி 47.அசோக்நகர் 48.கணவாய்புதூர்  49 என்.எம்.கோவில்        
50. ADW  ஆலங்காயம் 51. வனத்துறை, நெல்லிவாசல் 52.தோமினிக்சேவியோ, திருப்பத்தூர் 53. மேரி இமாகுலேட் திருப்பத்தூர்  54. இராமகிருஷ்ணா , திருப்பத்தூர் 55. TMS , திருப்பத்தூர் 56. உஸ்மானியா திருப்பத்தூர் 57. செயின்சார்லஸ், அத்தனாவூர், 58.செயின்ஜோசப், ஜோலார்பேட்டை (ம) 59.அரசுபூங்கா, திருப்பத்தூர் 60.குன்னத்தூர் மண்டலவாடி 

Sunday, 23 December 2018

24.12.2018 - 01.12.2018 நிலவரப்படி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் காலிப் பணியிட விவரம் ஏற்கனவே 03.12.2018 அன்று இவ்வலுவலக இணையதளம்  வாயிலாக கோரப்பட்டிருந்தது, ஆனால்  இந்நாள் வரையில் கீழ் காணும் பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.   மீன்டும் (14.12.2018) தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது ஆனால் இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  காலிப்பணியிடம் ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்கப்பட வேண்டும். 
சமர்பிக்காத பள்ளிகள் :- 
1.வள்ளிப்பட்டு
 2.கனவாய்புதூர்
 3.புத்தகரம் 
4.அசோக்நகர்   
5.கெஜல்நாயக்கன்பட்டி (ம) 
6.கெஜல்நாயக்கன்பட்டி (ஆ) 
7.வெங்களாபுரம் 

Friday, 21 December 2018

21.12.2018 - மூன்றாம் பருவத்திற்கான இலவச விலையில்லா  நலத்திட்டங்கள் சீருடை,  பாடநூல், நோட்டு புத்தகம் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 24.12.2018 அன்று காலை 9.00 மணி அளவில் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தவறாது கீழ் காண் ஆய்வக உதவியாளர்களை  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
திருவாளர்கள் :-  

1.  வேதபுரி, ஆய்வக உதவியாளர் அரசு  மே.நி.பள்ளி, பூங்குளம்
2.சிவகுமார், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மலைரெட்யூர்
3.அருண்குமார், ஆய்வக உதவியாளர், அரசு  உ.நி.பள்ளி, தோரணம்பதி
4. கு.கார்த்திக், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி, பொம்மிகுப்பம்
5. சரவணன், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி, ஆதியூர்
6.சதிஷ்குமார், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, திரியாலம்
7.சமரன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, சின்னகம்மியம்பட்டு
8.பிரபாகரன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
9.சௌகத்அலி, ஆய்வக உதவியாளர், அரசு  மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி 
10.வினோத், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, நத்தம்
11 குமார், ஆய்வக உதவியாளர் , அரசு (ஆ) மே.நி.பள்ளி, ஆலங்காயம் 
12.முருகேசன், ஆய்வக உதவியாளர்,  அரசு  (ம) மே.நி.பள்ளி, புதுபேட்டை
13.மணிகண்டன், ஆய்வக உதவியாளர்,  அரசு  மே.நி.பள்ளி, பேராம்பட்டு
14.நாகராஜன், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மதனஞ்சேரி
15 சங்கர், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, மிட்டூர்
16.இராஜேந்திரன், ஆய்வக உதவியாளர் அரசு  உ.நி.பள்ளி,  புலியூர்
17. பாலாஜிராவ், ஆய்வக உதவியாளர் அரசு  மே.நி.பள்ளி, மிட்டூர்
18 சுரேஷ், ஆய்வக உதவியாளர்,  அரசு  உ.நி.பள்ளி, கும்மிடிக்கான்பட்டி 

21.12.2018 - தணிக்கை - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு கோவை தணிக்கை கூட்டமர்வு திருப்பத்தூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 27.12.2018 அன்று  நடை பெறவுள்ளது. இக் கூட்டமர்வில்    நீண்ட காலமாக நிவர்த்திக்கப்படாமல் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளை   முழுவதுமாக நீக்கம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
21.12.2018 - நினைவூட்டல் - 4 அனைத்து  அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005  மாற்றுத்  திறனாளிகள்  நல ஆணையம் மாநில அரசின் பணிபுரியும்  மாற்று திறனாளிகள் பணியாளர்கள் விவரங்களை 17.12.2018 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பதால் படிவத்தினை  தவறாது பூர்த்தி செய்து இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று (21.12.2018) மாலை 4.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  

பள்ளிகளின் பெயர் பட்டியல் 

1.கும்மிடிக்காண்பட்டி 
2.கிழக்குபதனவாடி 
3.கெஜல்நாயக்கன்பட்டி (ம) 
4. கொரட்டி 
5.அண்ணான்டபட்டி 
6.கொடுமாம்பள்ளி 
7. என்.எம்.கோவில் 
8. ஆன்டியப்பனூர் 
9. வடுகமுத்தம்பட்டி 
10. நிமியம்பட்டு (ம) 
11. வள்ளிப்பட்டு 
12. பாராண்டப்பள்ளி 

Thursday, 20 December 2018

21.12.2018 - VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகள் தவிர்த்து நிதி பெறாமல் விடுபட்ட  பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கருத்துருக்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்பணியாளர்கள் அரசு தலைப்பின்  (Time Scale) கீழ் பணியாற்றும் விவரங்களை இவ்வலுவலகத்தில் 3 பிரதிகளில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதியதாக சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவதாயின் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment   
20.12.2018 -  அரசு/நகராட்சி/ஆதி திராவிடர்/வனத்துறை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - VPRC -  மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2018 வரை   ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது, சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் செலவின விவரத்தினை பூர்த்தி செய்து 24.12.2018  அன்று இவ்வலுவலகத்தில் 3 பிரதிகளில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. மேலும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் கட்டாயமாக ஒப்படைக்கப்பட வேண்டும்.  Attachment  

Wednesday, 19 December 2018

19.12.2018 - மிக மிக அவசரம் - நலத்திட்டங்கள் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - விலையில்லா பாடநூல் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான  முதல் பருவம் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணாக்கர்களுக்கான உத்தேச தேவைப்பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் 6 முதல் 8 வரை   உள்ள வகுப்புகளுக்கு தனி தாளிலும்  9ஆம் வகுப்பிற்கு தனி தாளிலும் 3 பிரதியில்  20.12.2018  அன்று பிற்பகல் 2.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் தனி நபர் மூலம் நேரில் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment  Attachment 
 (குறிப்பு :-  நடப்பு  ஆண்டு 2018-2019  இருப்பில் உள்ள பாட புத்தகங்கள் போக  எஞ்சிய தேவைக்கு கேட்பு பட்டியல் வழங்குமாறும்  மேலும் இருப்பு பதிவேட்டினை ஆய்விற்காக உடன் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்) 

Tuesday, 18 December 2018

19.12.2018 -  நினைவூட்டல் - 3
அனைத்து  அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005  மாற்றுத்  திறனாளிகள்  நல ஆணையம் மாநில அரசின் பணிபுரியும்  மாற்று திறனாளிகள் பணியாளர்கள் விவரங்களை 17.12.2018 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பதால் படிவத்தினை  தவறாது பூர்த்தி செய்து இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று (19.12.2018) மாலை 5.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  
பள்ளிகளின் பெயர் பட்டியல் 

Monday, 17 December 2018

18.12.2018 - நினைவூட்டு -2  
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  பார்வையில் காணும் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து இரு நகல்களில் 18.12.2018 (இன்று ) மாலைக்குள் இவ்வலுவலகத்தில் நேரில்  ஒப்படைக்க   தெரிவிக்கப்படுகிறது.  இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத கீழ் கண் பள்ளிகள் இன்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment   
 1.குனிச்சி  2.மட்றப்பள்ளி 3.பேராம்பட்டு 4.கெஜல்நாயக்கன்பட்டி (ஆ)
 5.ஜம்மனபுதூர் பூங்குளம் 6.பெருமாபட்டு  7.வடுகமுத்தம்பட்டி 8.மீனாட்சி திருப்பத்தூர் 9.பூங்குளம்  10.கொத்தக்கோட்டை 11. நிம்மியம்பட்டு (ம)  12.பி.நாக்கனூர் 13.வள்ளிப்பட்டு 14. கிரிசமுத்திரம்15. நிமியம்பட்டு 
16. புத்தகரம் 17.பாரண்டபள்ளி 18. நெக்குந்தி 19.ஜெயபுரம் 
18.12.2018 - நினைவூட்டல் :- 2  
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி சார்பான நிலம் கல்வித்துறையின் கீழ் கொணர தமிழ்நிலம் என பாகுபாடு செய்வது தொடர்பாக  இணைப்பில் காணும்  படிவத்தில் பூர்த்தி செய்து   10.12.2018 அன்று இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் முத்திரை, கையொப்பத்துடன்  இரு நகல்களில் இவ்வலுவலக த்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது இந்நாள் வரையில் கீழ் காண் பள்ளிகள் சமர்ப்பிக்கப்படவில்லை 18.12.2018 அன்று மாலை 4.00 மணிக்கு ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment 

ஒப்படைக்காத பள்ளிகள் 

உயர்நிலைப் பள்ளிகள் :- 
 1.ஜம்மனபுதூர் பூங்குளம் . 2.கொத்தக்கோட்டை 
3. புத்தகரம் .4.நெக்குந்தி  5.மண்டலவாடி குன்னத்தூர் 6.கோணாப்பட்டு 7.பாராண்பள்ளி 

மேல்நிலைப்பள்ளிகள் :- 
1. பேராம்பட்டு 2.மீனாட்சி, திருப்பத்தூர்  10.ஜெயபுரம் 

Sunday, 16 December 2018

17.12.2018 -   அவசரம் - NMMS - தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் கண்டவாறு  ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் Eligible / In Eligible  என பதிவு செய்யவும், In Eligible  உள்ள மாணாக்கர்கள் இருப்பின் சரியான காரணத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ON LINE ATTACHMENT 
(உதாரணமாக :-  In Eligible - என்பதை  TC  DD/MM/YYYY அன்று பெற்றுக்கொண்டார்  என பதிவு செய்ய வேண்டும் )
17.12.2018 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  பார்வையில் காணும் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து இரு நகல்களில் 12.12.2018-க்குள்  இவ்வலுவலகத்தில் நேரில்  ஒப்படைக்க   தெரிவிக்கப்பட்டது, இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத கீழ் கண் பள்ளிகள் இன்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment   
1.வெங்களாபுரம்2பெரியகரம் 3.தோரணபதி 4.ஆதியூர் 5.கிழக்குபதனவாடி
 6 . நத்தம 7.குனிச்சி 8. சுந்தரம்பள்ளி 9. மட்றப்பள்ளி 10. பேராம்பட்டு
 11. கெஜல்நாயக்கன்பட்டி (ஆ) 12.விசமங்கலம் 13.திம்மணாமுத்தூர் 14.அண்ணான்டப்பட்டி
 15. ஜம்மனபுதூர் பூங்குளம் 16.பெருமாபட்டு 17.மடவாளம் (ஆ) 18.மடவாளம் (ம) 19.பெம்மிகுப்பம் 20. மிட்டூர் 20. வடுகமுத்தம்பட்டி 21. மீனாட்சி திருப்பத்தூர் 22.பூங்குளம் 23. மலைரெட்டியூர் 24.கொத்தக்கோட்டை 25. நிமியம்பட்டு (ம) 26.கணவாய்புதூர் 27.பி.நாக்கனூர் 28.வள்ளிப்பட்டு 29. கிரிசமுத்திரம்
 30. நிமியம்பட்டு 31.சின்னகமியம்பட்டு 32.புத்தகரம் 33.பாரண்டபள்ளி
 34. நெக்குந்தி
 35. அ சோக்நகர் 36. புதுபேட்டை (ம) 37.ஜோலார்பேட்டை (ம) 38.பொன்னேரி 39.மல்லப்பள்ளி 40.வெலக்கல்நத்தம் 41. வக்கணம்பட்டி 42. புதுபேட்டை (ஆ)
 43 அத்தனாவூர் 44.ஜெயபுரம் 

Friday, 14 December 2018

15.12.2018 - அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனதிற்கு - மின்கட்டணம் கூடுதல் நிதி தேவைப்படும் பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 17.12.2018 மாலை 04.00 மணிக்குள் ஆ1 பிரிவில் சமர்பிக்க கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment
14.12.2018 - நினைவூட்டல் :- 1 தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி சார்பான நிலம் கல்வித்துறையின் கீழ் கொணர தமிழ்நிலம் என பாகுபாடு செய்வது தொடர்பாக  இணைப்பில் காணும்  படிவத்தில் பூர்த்தி செய்து   10.12.2018 அன்று இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் முத்திரை, கையொப்பத்துடன்  இரு நகல்களில் இவ்வலுவலக த்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது இந்நாள் வரையில் கீழ் காண் பள்ளிகள் சமர்ப்பிக்கப்படவில்லை 17.12.2018 அன்று காலை 10.00 மணிக்கு ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment 

ஒப்படைக்காத பள்ளிகள் 

உயர்நிலைப் பள்ளிகள் :- 
1. வெங்களாபுரம் 2. அண்ணான்டபட்டி 3. ஜம்மனபுதூர் பூங்குளம் 4.மலைரெட்டியூர் 5. கொத்தக்கோட்டை 
6. கணவாய்புதூர் 7. புத்தகரம் 8.பாரண்டப்பள்ளி 9.நெக்குந்தி 10. அசோக்நகர் 11.மண்டலவாடி குன்னத்தூர் 12.கோணாப்பட்டு 

மேல்நிலைப்பள்ளிகள் :- 

1.கெஜல்நாயக்கன் பட்டி (ம) 2.குரும்பேரி 3. பேராம்பட்டு 4.மடவாளம் (ஆ) 5.மடவாளம் (ம) 6.பொம்மிகுப்பம் 7.மிட்டூர் 8.மீனாட்சி, திருப்பத்தூர் 9.நிம்மியம்பட்டு 10. புதுபேட்டை (ம) 11. ஜோலார்பேட்டை (ம) 12. பொன்னேரி 13தாமலேரிமுத்தூர் 14.அத்தனாவூர் 15. ஜெயபுரம் 16.கேத்தாண்டபட்டி 
14.12.2018 - தேர்வுகள் அவசரம் - மார்ச்/ஏப்ரல் 2019 –  இடைநிலைப் பொதுத்தேர்வுகள் – மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்களின் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணபங்கள் 10.12.2018 மாலை 03.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது,  ஏதேனும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விவரங்கள்  பள்ளிகளில் விடுபட்டிருப்பின்  இணைப்பில் கண்டவாறு  20.12.2018 அன்று பிற்பகல் 03.00க்குள்   இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு கால தாமதத்தினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    Attachment

14.12.2018 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு - EBS – படிவத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் சார்பாக தனித்தனியாக விவரங்களை 11 மற்றும் 12.12.2018 க்குள் ஒப்படைக்க கோரப்பட்டது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இந்நாள் வரையில் சமர்ப்பிக்காமல் உள்ளது வருத்தத்திற்குறியது. எனவே, 17.12.2018 அன்று காலை 11.00 மணிக்குள் கீழ்கண்ட பள்ளிகள்  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (With CD) 

சமர்பிக்காத பள்ளிகள்:- 

I .மே.நி.பள்ளிகள் :- 

1.மடவாளம் (ஆ) 2. மடவாளம் (ம) 3. கொரட்டி 4.ஆண்டியப்பனூர் 5. வடுகமுத்தம்பட்டி 6.புதுபேட்டை (ஆ) 7. பெரியகண்ணாலப்பட்டி 8.பேராம்பட்டு 9. பல்நாங்குப்பம் 
10. அத்தனாவூர் ஏலகிரிமலை 11. விசமங்கலம் 12. தோமினிக்,திருப்பத்தூர் 13.மேரிஇமாகுலேட், திருப்பத்தூர் 14.உபைபாஸ்(ம), திருப்பத்தூர் .


II. .நி.பள்ளிகள்:- 

ADW ஜடையனூர் 2. நெக்குந்தி 3. இராயில்வே மிக்ஸட் ஜோலார்பேட்டை 
4. ஏகலைவா அத்தனாவூர் 5.அச்சமங்கலம்.

III.மெட்ரிக் பள்ளிகள் :-

1.Dr.சந்திரலேகா, வெங்களாபுரம் 2.எபினேசர் ஏலகிரி 3.குட்வில், திருப்பத்தூர் 4. SRK VID, திருப்பத்தூர் 5. இராமகிருஷ்ணா வித்யாலையா ஜோலார்பேட்டை 6.செயின்ட் சார்லஸ், திருப்பத்தூர் 7. SFS  வாணியம்பாடி 8. பாஸ்டன், ஜோலார்பேட்டை 9.பிரைட் மெட்ரிக் வாணியம்பாடி 10. சிகரம் வாணியம்பாடி 11. யுனிவர்செல் ஜோலார்பேட்டை 12. தாயானந்த வித்யாலையா, குருசிலாபட்டு 13. சுவாமி விவேகானந்தா, திம்மாணாமுத்தூர் 14.வெங்கடேஸ்வரா தோரணம்பதி 15. விவேகானந்தா, வெள்ளக்குட்டை 16. இராஜாஸ் ஆதியூர் 17.வேதா மெட்ரிக்,  டி.வீரப்பள்ளி 18.ஜெயவாசவி, ஆலங்காயம் 19. VRV பேராம்பட்டு 20.அமிர்தா திருப்பத்தூர்   Attachment 
14.12.2018 - அனைத்து  அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005  மாற்றுத்  திறனாளிகள்  நல ஆணையம் மாநில அரசின் பணிபுரியும்  மாற்று திறனாளிகள் பணியாளர்கள் விவரங்களை 17.12.2018 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பதால் படிவத்தினை  தவறாது பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

Thursday, 13 December 2018

14.12.2018 - 01.12.2018 நிலவரப்படி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் காலிப் பணியிட விவரம் ஏற்கனவே 03.12.2018 அன்று இவ்வலுவலக இணையதளம்  வாயிலாக கோரப்பட்டிருந்தது, ஆனால்  இந்நாள் வரையில் கீழ் காணும் பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.   எனவே இன்று (14.12.2018) தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கை தவறாது ஒப்படைக்கப்பட வேண்டும். 
சமர்பிக்காத பள்ளிகள் :- 
1.வள்ளிப்பட்டு 2.பெரியகுரும்பதெரு 3.மதனாஞ்சேரி 4.கனவாய்புதூர் 5.சின்னகம்மியம்பட்டு 6.புத்தகரம் 7.ஜெயபுரம் 8.நெக்குந்தி 9.அசோக்நகர்   
10.பொம்மிகுப்பம் 11. வடுகமுத்தம்பட்டி 12. மீனாட்சி, திருப்பத்தூர் 13.அச்சமங்கலம் 14. கெஜல்நாயக்கன்பட்டி (ம) 15. கெஜல்நாயக்கன்பட்டி (ஆ) 16.கொரட்டி 17.குனிச்சி 18. கசிநாயக்கன்பட்டி 19.மண்டலநாயனகுண்டா 
20. வெங்களாபுரம் 21.தோரணம்பதி 22. ஆதியூர் 23. எலவம்பட்டி 24.கிழக்குபதனவாடி
14.12.2018 - தேர்வுகள் அவசரம் - நாளை (15.12.2018) தேசிய வருவாய் வழி திட்ட உதவித் தொகை தேர்வுகள் (NMMS) 2018 -   மாணாக்கர்களுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டில் ( Hall Ticket)  தேர்வு தேதியை திருத்தம் மேற்கொண்டு தலைமை ஆசிரியர்கள்  மேலொப்பமிட்டு மாணாக்கர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    
13.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  சுற்றுச்சுழல் மேலாண்மையின் கீழ் நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளுக்கான அறிக்கையினை 18.12.2018க்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment  

DEO
Tirupattur
13.12.2018 - நலத்திட்டங்கள் - அரசு/நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  - 2019-2020 -ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு (தொழிற்கல்வி) பாடநூல்கள் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி உத்தேச மொத்த தேவைப்பட்டியல் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து விட்டு அதன் பிரதியினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ON LINE ATTACHMENT 

Wednesday, 12 December 2018

13.12.2018 - தேர்வுகள் – NMMS தேர்வுகள் டிசம்பர் 2018 -  டிசம்பர் - 15.12.2018 -  (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்விற்கான (NMMS)  இணைப்பில் கண்ட  அறை கண்காணிப்பாளர்களை சார்ந்த தேர்வு மையத்திற்கு14.12.2018 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு விடுவித்து அனுப்புமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
12.12.2018 - அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - EMIS  2018-19 ஆம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-Website)  இணையதளத்தில் மாணவர் பெயர் மற்றும் சரியான பாலினம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக  உள்ளீடு செய்ய கோருதல் Attachment