Tuesday, 22 November 2022

 22.11.2022     தேர்வுகள் அவசரம் 

அனைத்து வகை  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஏப்ரல் - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பகுதி - 1 இல் தமிழ்மொழிப்பாடம் எழுத விலக்கு கோருதல் - தொடர்பாக   இணைப்பு - 1  இணைப்பு - 2

Tuesday, 15 November 2022

 16.11.2022                              

                                           ந.க.எண்.2773 /ஆ4/2022      நாள்.  .10.2022

                                                               //  சிக்கன தந்தி //

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது,

2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான உத்தேச  பாடநூல் தேவைப்பட்டியல் 28.10.2022 அன்று மாவட்டக் கல்வி அலுவலக (இடைநிலை) இணையதளத்திலும் மற்றும் சார்ந்த பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டது. அப்பட்டியலை பூர்த்தி செய்து 04.11.2022 அன்று மாலைக்குள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட படிவத்தினை ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.  ஆனால்  08.11.2022 நாள் வரை கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கப்படாதது குறித்த விவரத்தினை DEO Whatsapp Group - இல் வெளியிடப்பட்டு விரைந்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டும், மேலும் தொலைபேசி மூலமாகவும் தேவைப்பட்டியலை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டும் இன்று வரை (16.11.2022) கீழ்கண்ட பள்ளிகள் பாடநூல் தேவைப்பட்டியல் அளிக்கப்படாத காரணத்தால் பாடநூல் தேவைப்பட்டியலை தொகுத்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் அலுவலரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்பதால் இந்த சிக்கனத் தந்தி கிடைக்கப்பெற்ற இன்றே (16.11.2022 க்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்,  2023 - 2024 கல்வியாண்டில் பாடநூல் பற்றாக்குறை ஏற்படின் அதற்கு சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதனை திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. 


                                                                                               // ஓம் //

                                                                    மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

                                                                                        திருப்பத்தூர் 

பெறுநர்,

கீழ்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

1. அ.மே.நி.பள்ளி மலைரெட்டியூர்.

2. அ.உ.நி.பள்ளி பீ.நாயக்கனூர்.

3. அ.உ.நி.பள்ளி திம்மாம்பேட்டை

4. அ.மே.நி.பள்ளி வடசேரி 

5. அ.மே.நி.பள்ளி  பொம்மிகுப்பம்

6. அ. ஆதிதிராவிடர் மே.நி.பள்ளி ஆலங்காயம். 

7. கண்கார்டியா மே.நி.பள்ளி ஆம்பூர்.

8. மஸ்ருல் உம் மே.நி.பள்ளி ஆம்பூர்.

9. இந்து பெண்கள் மே.நி.பள்ளி ஆம்பூர்.

10. முகமதியா   உ.நி.பள்ளி, உமராபாத்

11.  இஸ்லாமியா ஜமாத் உ.நி.பள்ளி நரியம்பட்டு

12. அ.மே.நி.பள்ளி கசிநாயக்கன்பட்டி


நகல்,

திருப்பத்தூர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக  பணிந்தனுப்பலாகிறது.



Monday, 7 November 2022

 08.11.2022                  //தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மார்ச் / ஏப்ரல்  - 2023  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்பு. இணைப்பு 

Monday, 31 October 2022

 

01.11.2022                        //தேர்வுகள் அவசரம் //

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - ஊரகத் திறனாய்வுத் தேர்வு - டிசம்பர்-2022 தேர்விற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - சார்பு   - இணைப்பு

 31.10.2022               //  தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை அரசு / நகராட்சி / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை - உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் /ஏப்ரல் - 2023 - புதிய தேர்வு மையம் அமைத்தல், புதுப்பித்தல் சார்பான கருத்துருக்கள்  04.11.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் 3 நகல்களில் சமர்ப்பிக்கக்கோருதல் - சார்பு. இணைப்பு 

Friday, 28 October 2022

 28.10.2022  //  மிக மிக அவசரம்  தனி கவனம்//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு  வழங்கும் பொருட்டு  இணைப்பில் உள்ள உத்தேச பாடநூல்கள்  தேவைப்பட்டியல் (2 நகல்கள்) பூர்த்தி செய்து 04.11.2022  அன்று மாலை 05.00 மணிக்குள்   இவ்வலுவக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 

Thursday, 27 October 2022

 27.10.2022

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2022 - 2023  ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் எண்ணிக்கையினை ( EMIS  இல் உள்ளீடு செய்யப்பட்டவாறு) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகலினை 01.11.2022  அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 12 October 2022

 12.10.2022

                                        தேர்வுகள் அவசரம்

மே – 2022   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்  13.10.2022 அன்று  திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணியளவில் வழங்கப்படும். அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நேரில் வந்து  தங்கள் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு :  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை  விநியோகிக்க வேண்டிய  நாள்.  14.10.2022

                                                                                                                                                                


Tuesday, 11 October 2022

 12.10.2022  

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் இணைப்பில் கண்ட அட்டவணைப்படி ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் / மாணவியை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

 

11.10.2022

அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆசிரியரின் பொது வைப்புநிதி  - GPF Missing Credit விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து சார்நிலை கருவூலத்தில் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், மாநில கணக்காயர் சார்நிலை கருவூலகத்திற்கு 19.10.2022 வருகைப்புரிவதால் உரிய விவரத்துடன் சென்று  GPF Missing Credit  கணக்கை சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Monday, 10 October 2022

 நினைவூட்டல் -1 உள்ளீடு செய்யாத அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  உடனடியாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ONLINE SHEET ல் முதுகலை, பட்டதாரி,  இடைநிலை,சிறப்பாசிரியர்கள் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்களின் தொலைபேசி எண் , முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

  ONLINE ATTACHMENT

Thursday, 6 October 2022

 06.10.2022  // மிக மிக அவசரம் // மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சமர்ப்பிக்கவேண்டியுள்ளதால் தனி கவனம் தேவை //

 திருப்பத்தூர் மாவட்ட அனைத்து அரசு உயர்நிலை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 VPRC   மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு  பணியார்களின்( SANITARY WORKERS )   விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன்(GOOGLE SHEET )  படிவத்தில்  இன்று(06.10.2022) மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்      ON LINE SHEET 

Friday, 23 September 2022

 23/09/2022      // மிக மிக அவசரம் //

அனைத்து அரசு / நிதியுதவி , உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 -2023 எண்வகைப்பட்டியல் 31.07.2022 நிலவரப்படி கோரப்பட்ட தகவல் சம்மந்தமாக 

1 . NUMBER STATEMENT ANNUXURE  - இல் (IFHRMS)  கணக்கு  தலைப்பு வாரியாக திருத்தப்பட்ட EXCEL FORM (ANNUXURE 1  மட்டும்) இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 குறிப்பு  EXCEL ANNUXURE 1   ஐ  CD யில் Copy  செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் மற்றும் பிரிவு எழுத்தர் உடன் அவசியம் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

தலைமை  ஆசிரியர் கூட்டம் நடைபெறும் இடம் 

 GDP HALL (Subcollectore office ) பின்புறம் 

நாள் :23.09.2022

நேரம் : மாலை 3.00 மணி 

Thursday, 22 September 2022

 23.09.2022 

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 26.09.2022 முதல் 29.09.2022 வரை உள்ள  நாட்களில் கீழ்கண்ட அலுவலர்களை அழைத்து 6 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு  போதைப்பொருள்  விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தி அறிக்கை மற்றும் புகைப்படத்துடன்  2 நகல்களில்  இவ்வலுவலகத்திற்கு தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 14 September 2022

 15.09.2022      

// எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 4  மற்றும் கூடுதல் விவரம் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -  இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு  இணைப்பில் உள்ள பள்ளிகள் இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். இன்று மாலை 04.00 மணிக்குள் எண்பட்டியலை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3  கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5 

குறிப்பு:  ஏற்கனவே வழங்கிய பள்ளிகள்  NUMBER STATEMENT ANNEXURE   இல் உள்ள EXCEL  1,2,3  படிவம்  தலைப்பு வாரியாக தற்போது பதிவிறக்கம் செய்து வழங்குமாறு தெரிவிக்கலாகிறது. 

எண்வகைப் பட்டியல் வராத பள்ளிகள்

1. அ.உ.நி.பள்ளி பீ.நாயக்கனூர்

2. அ.உ.நி.பள்ளி கொல்லக்குப்பம்

3. அ.உ.நி.பள்ளி பெரியகுரும்பத்தெரு

4. அ.உ.நி.பள்ளி கோணப்பட்டு

5.அ.உ.நி.பள்ளி புத்தகரம் 

6.அ.உ.நி.பள்ளி சின்னகம்மியம்பட்டு

7. அ.உ.நி.பள்ளி கும்மிடிகாம்பட்டி

8. அ.உ.நி.பள்ளி திம்மணாமுத்தூர்

9. அ.மே.நி.பள்ளி வெள்ளக்குட்டை

10. அ.மே.நி.பள்ளி மிட்டூர்

11. அ.மே.நி.பள்ளி மல்லப்பள்ளி

12. அ.மே.நி.பள்ளி கேத்தாண்டப்பட்டி

13. அ.உ.நி.பள்ளி சந்திரபுரம்

14. அ.மே.நி.பள்ளி அத்தனாவூர்.

15.அ.ஆ.மே.நி.பள்ளி புதுப்பேட்டை

16. அ.மாதிரி மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

17. அ.மே.நி.பள்ளி பெரியகண்ணாலப்பட்டி

18. அ.மே.நி.பள்ளி பேராம்பட்டு

19. அ.மே.நி.பள்ளி  நத்தம் 

20. அ.மே.நி.பள்ளி கொரட்டி 

21. அ.பெ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி 

22. அ.ஆ.மே.நி.பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி

23. அ.மே.நி.பள்ளி பொம்மிகுப்பம்

24. அ.மே.நி.பள்ளி ஆண்டியப்பனூர்

25. அ.ஆ.மே.நி.பள்ளி திருப்பத்தூர்

26. அ.ஆ.மே.நி.பள்ளி மடவாளம்.

27.அ.உ.நி.பள்ளி நெக்குந்தி 

நிதியுதவிப்பள்ளிகள் 

1. டான்போஸ்கோ மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

2. செயின்ட் சார்லஸ் மே.நி.பள்ளி அத்தனாவூர்

3. செயின் ஜோசப்  பெண்கள் மே.நி.பள்ளி ஜோலார்பேட்டை 

4. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

5. மேரி இமாக்குலேட் பெண்கள் மே.நி.பள்ளி திருப்பத்தூர் 

6. இராமகிருஷ்ணா மே.நி.பள்ளி திருப்பத்தூர். 

7. டி.எம்.எஸ். மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

8.உபைபாஸ் மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

9.உஸ்மானியா மே.நி.பள்ளி திருப்பத்தூர். 

10. அரசு பூங்கா உ.நி.பள்ளி திருப்பத்தூர். 


Tuesday, 13 September 2022

 14.09.2022

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 2295/அ1/2022    நாள்.  14.09.2022


அனைத்து வகை அரசு /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை   இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

 13.09.2022

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, 

இணைப்பில் உள்ள ONLINE SHEET  இல் தங்கள் பள்ளியில்  JRC இல் பொறுப்பில் இருக்கும் கவுன்சிலர் பெயர் மற்றும் மாணவ மாணவியரின் எண்ணிக்கையை  14.09.2022  அன்று காலை  10.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET 

குறிப்பு:  JRC  - இணை செயல்பாடு இல்லாத பள்ளிகளில் உடனே ஏற்படுத்தி அத்தகவலை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. (தொடர்புக்கு  திரு.மு.தண்டபாணி  - 9047509725  அ.மே.நி.பள்ளி, பொம்மிகுப்பம்)

Monday, 12 September 2022

 13.09.2022        // தனிகவனம் // மிக மிக அவசரம் //

இணைப்பில் கண்டுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித்தலைமை அசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளுக்கு நபார்டு வங்கி நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் டான்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட தளவாட சாமான்களுக்கான பற்றுச்சீட்டு (VOUCHER)  இரண்டு நகல்கள் இவ்வலுவலக  அ4 பிரிவில் இன்று மாலை 02.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 12.09.2022      // மிகவும் அவசரம் // தனிகவனம் //

அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு வரவு செலவுத்திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2022 நிலையிலான பணியிடங்கள் அடிப்படையில் எண்வகைப்பட்டியல் தயார் செய்து 2022 - 2023 திருத்த மதிப்பீடு மற்றும் 2023 - 2024 திட்ட மதிப்பீடு பணிகளுக்காக அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, IFHRMS - இல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து பெறுதல் சார்பான அறிவுரைகள் பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 049890/பி1/இ1/2022, நாள். 23.08.2022, 26.08.2022 மற்றும் 30.08.2022 - இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.09.2022  அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் எண்வகைப் பட்டியல் சமர்ப்பிக்கப்படாத பள்ளிகள் நாளை 13.09.2022  காலை  10.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களே பொறுப்பு என தெரிவிக்கலாகிறது. 

 12.09.2022

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை அழைத்து தங்கள் பள்ளியில் போதை பொருள் சார்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அதன் விவரத்தினை புகைப்படத்துடன் 14.09.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறதுஇணைப்பு