01.03.2022 // அவசரம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விடுபட்டவர்களின் பெயர் சேர்த்தல் விவரம் கோருதல் மற்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் கருத்துருக்கள் ( படிவம் - 1) உரிய இணைப்புகளுடனும், சேர்க்கை, நீக்கம், திருத்தம் சார்பான படிவம் தனியாகவும் மூன்று நகல்களில் பணிப்பதிவேட்டுடன் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 02.03.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2