01.03.2022 // மிக மிக அவசரம் தனி கவனம்// நினைவூட்டல் -2
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் இன்றைய செயல்முறையின்படியும் திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தொலைபேசி செய்தியின் படியும் இணைப்பில் கண்ட செயல்முறைகளின் படியும் அனைத்து பள்ளிகளின் வங்கிக் கணக்குகளில் உள்ள பயன்படுத்தாத தொகையினை இன்று மாலை 05.00 மணிக்குள் அரசுக் கணக்கில் செலுத்திவிட்டு ( E - CHALLAN மூலமாக) அதன் நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இன்று மாலை 05.00 மணிக்குள் செலுத்தாத தலைமை ஆசிரியர்கள் நாளை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்திக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. (அரசு மகளிர் மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி அங்கநாதவலசை, அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி மண்டலநாயனகுண்டா, அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமுத்தூர், அ.மே.நி.பள்ளி, மட்றப்பள்ளி தவிர )
வங்கி கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "AMOUNT AVILABLE FOR REMITTANCE தொகையினை அரசுக்கணக்கில் செலுத்துதல்
dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலக deotpt2015 @ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை ஆ1 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது
இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி காலதமதம் இன்றி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது