25.10.2021 // மிக மிக அவசரம்//
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
6 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக தற்போது 6 மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வட்டாரத்திற்கு 3 மாணவர்கள் வீதமும், மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஒரு மாணவனும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் நற்பெயர் பெற்ற பள்ளியில் பயில்விக்கவும் தேவையான வசதிகளை செய்து தரவும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஒன்றியத்திற்கு 3 மாணவர்கள் / மேல்நிலைப்பள்ளிக்கு ஒருவர் வீதமும் தேர்வு செய்து இணைப்பில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து நாளை (26.10.2021) மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு