Monday, 25 October 2021

 25.10.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வட்டாரக்கல்வி அலுவலர்களின்  கவனத்திற்கு

6 ஆம் வகுப்பு   மற்றும் 11 ஆம் வகுப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக தற்போது 6 மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வட்டாரத்திற்கு 3 மாணவர்கள்  வீதமும், மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு  ஒரு மாணவனும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் நற்பெயர் பெற்ற பள்ளியில் பயில்விக்கவும் தேவையான வசதிகளை செய்து தரவும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஒன்றியத்திற்கு 3 மாணவர்கள் / மேல்நிலைப்பள்ளிக்கு ஒருவர்  வீதமும் தேர்வு செய்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  விவரங்களை  பூர்த்தி செய்து நாளை (26.10.2021) மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு