Monday, 6 September 2021

 06.09.2021     (SSLC  NR CORRECTIONS)

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் - 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாணாக்கர்களின் பெயர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள  08.09.2021  முதல் 11.09.2021 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மாணாக்கர்களுக்கு பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

குறிப்பு: இதன் பின் மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின் அரசு நிதிச்  செலவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் /முதல்வர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கலாகிறது.