Saturday, 9 November 2019

09.11.2019    அவசரம் // தனிகவனம் //
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உள்ளாட்சி தேர்தல் சார்பான  படிவம் 2019 - 2020   திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது  சில பள்ளிகள் மட்டுமே  படிவம் ஒப்படைத்துள்ளனர். படிவம் ஒப்படைக்காத பள்ளிகள் 09.11.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில்  ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும்  இதுவரை  இணைப்பில் உள்ள பள்ளியின் பெயருக்கெதிரே எண்ணிக்கை குறிப்பிட்டுள்ள பள்ளிகள் மட்டுமே படிவத்தினை ஒப்படைத்துள்ளனர். தேர்தல் சார்பான படிவம் ஒப்படைக்காத பள்ளிகளால் மாவட்டக்கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அனுப்ப இயலாத நிலை உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் , இது பள்ளி தலைமை ஆசிரயரின் மெத்தனத்தை காட்டுகிறது. எனவே இன்று மாலை 05.30 மணிக்குள் படிவத்தினை நேரில் ஒப்படைக்கமாறு மீண்டும் கண்டிப்புடன் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT