30.10.2019 //மிக மிக அவசரம்//
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உதவியாளர் முதல் துப்புரவாளர் வரை அனுமதிக்கப்பட்ட , நிரப்பப்பட்ட மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கையினை இரு நகல்களில் A3 தாளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் இவ்வலுவலக அ1 பிரிவில் 29.10.2019 அன்று காலை 11 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டும் இதுநாள் வரை இரண்டு பள்ளிகளில் இருந்து மட்டுமே(விசமங்களம் மற்றும் பால்நாங்குப்பம் ) உரிய படிவங்கள் பெறப்பட்டது. மீதம் உள்ள பள்ளிகளில் இருந்து பெறப்படாதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.
மேலும் இப்பொருள் தொடர்பான தகவல்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அவசரமாக அனுப்ப கோரப்பட்டு இருப்பதால் இதில் தனிகவனம் செலுத்தி ஒப்படைக்காத பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகல் உடன் (அசல் அளவுகோல் பதிவேட்டுடன் ) 31.10.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் (ஆசிரியர் அல்லாத பணியாளர் மூலம் ) நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.(ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஏவறும் இல்லை எனில் பள்ளி பணி முடிந்த பின் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது) தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. . ATTACHMENT