17.10.2019
அனைத்து அரசு /அரசு நிதியுதவி /நகரவை /மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/ நர்சரி & ப்ரைமரி மற்றும் நடுநிலைப்பள்ளி / உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரயர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ நகரவை/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி / நடுநிலைப்பள்ளி /உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தங்கள் பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலுடன் மாணவர் எவரேனும் இருப்பின் அவர்கள் விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால் தனி கவனம் செலுத்தி அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்டக்கல்வி அலுவலர்(பொ),
திருப்பத்தூர்