Thursday, 17 October 2019

17.10.2019
      அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டிடங்கள் விவரம் கோருதல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் சார்பாக
     மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதலை தடுக்கும் பொருட்டு பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்க வழிவகை செய்ய சார்ந்த தலைமையாசிரிய்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 சார்ந்த  வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைத்துவகை பள்ளிகளிலும் மேற்படி நடவடிக்கையினை மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
                               மாவட்டக்கல்வி அலுவலர் (பொ),
                                      திருப்பத்தூர்