04.02.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -
22.01.2019 முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deottr@nic.in என்ற இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இன்று (04.02.2019) மாலை 5.00 மணிக்கு நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஆசிரியர்கள்/அலுவலக பணியாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட 22.01.2019 தேதி முதல் வருகைப்பதிவேட்டில் உள்ள பக்கத்தின் நகலுடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை தயார் செய்து இன்றே அனுப்பவேண்டியுள்ளதால் எவ்வித கால தாமதமின்றி தனி கவனம் செலுத்தி இப்பணியினை விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.