01.02.2019 - அவசரம் தனிக்கவனம்
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையின் அவசர அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி தவிர பிற வங்கிகளில் ஊதியம் பெறும் அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் ஜனவரி - 2019 மாத ஊதியம் கருவூலத்துறை மூலம் 31.01.2019 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. ஜேக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தி கலந்து கொண்ட அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கு போரட்டத்தில் கலந்து கொண்ட நாட்களுக்கான ஊதியத்தை கணக்கிட்டு 01.02.2019 மற்றும் 02.02.2019க்குள் அரசுக்கணக்கில் செலுத்தி செலுத்துச்சீட்டினையும் பெயர் பட்டியலினையும் சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூலத்தில் வழங்கிடுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.