07.03.2022 // நினைவூட்டல்// மிக அவசரம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 08.03.2022 மாலை 03.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3
குறிப்பு: -
மேலும், இதுவரை SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தியான படிவங்களை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.