Sunday, 31 October 2021

 

 01.11.2021

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் /மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு அரசு விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுவருகிறதுஇதில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா காலேந்தி மற்றும் காலுறை, (SHOE & SOCKS) புத்தகப்பை (SCHOOL BAG )  தர பரிசோதனை முடிவுக்கு ஏற்ப (Testing Report)  அனைத்து பள்ளிகளுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இதன் படி சென்ற கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உரிய நலத்திட்டங்களை வழங்கி அதற்கான நலத்திட்ட பதிவேட்டில்  கையொப்பம் பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்