14.07.2021 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் கல்வியாண்டு மற்றும் முந்தைய 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டது. இவற்றில் உள்ளதற்கும் EMIS இல் உள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சிய பாடப்புத்தகங்களை பள்ளியிலேயே இருப்பில் வைக்க வேண்டாம் என்றும் அவற்றினை திருப்பத்தூர் உள்ள ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பின் புறத்தில் உள்ள அரசு நலத்திட்டங்கள் வழங்கும் மையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது பாடப்புத்தகங்கள் பள்ளியில் இருப்பில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தாங்கள் கொண்டு வரும் இருப்பில் உள்ள பாடநூல்களை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.