18.01.2021 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25,000/- வீதம் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய ( GUIDELINE) அனுப்பப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு தேவையான ஏற்கனவே உள்ள விளையாட்டு உபகரணங்களை தவிர்த்து GUIDELINE இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அந்தந்த நிலைக்கேற்ற கொள்முதல் செய்யப்பட வேண்டிய உபகரணங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய GOOGLE படிவத்தை 19.01.2021 ற்குள் பூர்த்தி செய்து அனுப்பிட அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2.