30.12.2020 // பதவி உயர்வு கலந்தாய்வு //
01.12.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் இணைந்த பதவியிலிருந்து பதிவு எழுத்தர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 31.12.2020 பிற்பகல் 3.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சாரந்த அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் இரவுக் காவலர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 15.03.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவு எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். இணைப்பு -1, இணைப்பு -2