31.10.2020 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
NMMS - மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான கல்வி உதவித் தொகை 4789 தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் இணைப்பில் உள்ள 866 மாணாக்கர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததால் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் பெயர்களை கண்டறிந்து தற்போது நடைமுயைில் உள்ள வங்கி கணக்கு விவரம் மற்றும் இதர விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து EXCEL - FORMAT இல் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.11.2020 மாலை 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3.