14.09.2020 // துணைத் தேர்வுகள் அவசரம் // HALL TICKET DOWNLOAD //
அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு -
நடைபெற உள்ள செப்டம்பர் /அக்டோபர் - 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் மார்ச் - 2020 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த தனித் தேர்வர்களும் 15.09.2020 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT- 2
குறிப்பு: செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித் தேர்வர்கள், கருத்தியல் தேர்வு (Theory Exam) நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.