Sunday, 13 September 2020

 14.09.2020  -   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - மார்ச் - 2020

அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்பட்டியல் தயாரிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும்,  சில பள்ளிகளிலிருந்து பெயர்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளக்  கோரிக்கைகள் பல வந்த வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற கோரிக்கைகள் தவிர்க்கும் வண்ணம் பள்ளி மாணவர்களின் பெயர் திருத்தங்கள் மேற்கொள்ளவும் மாணவர்கள் நலன் கருதி மதிப்பெண் சான்றிதழ்களில் எவ்வித திருத்தங்களும் ஏற்படாவண்ணம்  மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதற்கு ஏதுவாக  அனைத்து உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 14.09.2020 முதல் 15.09.2020 வரை  இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT