18.03.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தற்போது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் நாளன்று நகராட்சி / மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு துவங்குவதற்கு முன்பாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும் . மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் / Hand Sanitizers மூலம் சுத்தம் செய்துகொள்ளவும் தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் / தேர்வு மைய முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பள்ளியின் தலைமை ஆசிரியர்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT